ராசி பொருத்தம்

Image

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்தை நாம் ராசி என்று கூறுகிறேhம். இதை சந்திரா லக்னம் என்றும் கூறுவர். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது 10 பொருத்தங்களில் மிகவும் முக்கியமானது ராசிப் பொருத்தமாகும். திருமணத்திற்கு பிறகு தம்பதியர்கள் உடல் ஆரோக்கியம்.மக்கட்பேறு, நீண்ட ஆயுள் இவைகளைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைவது ராசிப் பொருத்தமாகும். இந்த சந்திரனை வைத்தும், அது இருக்கும் இடங்களைக் கொண்டும் பார் க்கும் ராசிப் பொருத்தமானது ஒரு மருத்துவ பரிசோதனைக்கு ஒப்பானதாகு ம். மேலை நாடுகளில் திருமணம் செய்வதற்கு முன் ஆண், பெண் இவர்களது ஜாதகத்தில் உள்ள சந்திரனைக் கொண்டு திருமணத்திற்கு பிறகு இவர்களது உடல் நிலை, ஆரோக்கியம் இவற்றை தெளிவாக காண முடியும். ……கன்னிராசி உன் ராசி- ரிஷப காளை ராசி என் ராசி†† - என்பது சினி மாப் பாடல். இந்த பாடல் ராசிப் பொருத்தத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ரிஷப ராசியும், கன்னி ராசியும் ஒன்றுக் கொன்று திரிகோண ராசியாக உள்ளது. திரிகோண ராசிகளை இணைப்பது மிகச் சாpயான ராசிப் பொருத்தமாகும். ராசிப் பொருத்தம் பற்றிய சில விதிகள் „ ஆணின் ராசிக்கு பெண்ணின் ராசி அல்லது பெண்ணின் ராசிக்கு ஆணி ன் ராசி ஏழாவது ராசியாக இருந்தால் சம சப்தம ராசிப் பொருத்தம் உண் டு. இதிலும் சில விதி விலக்கு உண்டு. சம சப்தம் ராசிகளில் கடக, மகர ரா சிகள், சிம்ம, கும்ப, ராசிகள் சம சப்தமமாக வந்தால் ராசிப் பொருத்தம் இல்லை. பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி 6 வது ராசியாக இருந்தால் இதை ஷாடாஷடக ராசி என்பர் இது பொருந்தாது. ஆணின் ராசிக்கு பெண்ணின் ராசி 6 வது ராசியாக அமைந்தால் ராசிப் பொருத்தம் உண்டு. பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி 8 வது ராசியாக இருந்தால் இதை ஷஷ்டா ஷஷ்டக ராசி என்பர். இவ்வாறு இருந்தால் ராசி பொருத்தம் உண்டு. பெண் ராசிக்கு 3-வது ராசியாக ஆண் ராசி இருந்தால் ராசி பொருத்தம் இல்லை. ஆண் ராசிக்கு 3-வது ராசியாக பெண் ராசி இருந்தால் ராசிப் பொருத்தம் உண்டு. ஆணின் ராசிக்கு 11-வது ராசியாக பெண்ணின் ராசி இருந்தால் பொருத் தம் இல்லை. பெண் ராசிக்கு 11-வது ராசியாக ஆணின் ராசி இருந்தால் ராசிப் பொரு த்தம் உண்டு.