மோர்க்குழம்பு செய்து இறக்கும் முன்னதாக சிறிதளவு தேங்காய்எண் ணெயை ஊற்றி சிறிது நேரங்கழித்து இறக்கினால் ருசியே தனியாக இருக்கும். காற்றில் நமுத்துப்;போன பிஸ் கட்டுகளை வீணாக்கி விடாதீர்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும் அதன்மேல் நமத்த பிஸ்கட்டு களை தனித்;தனியாகப் பரப்பி வையுங்கள். சிறிது நேரத்தில் பிஸ்கட்டுகள் மொர மொரப்பாகி விடும். காலிபிளவர், கோஸ் போன்ற வற்றை வேகும்போது சிறிது நாற்றம் அடிக்கும். அதைத் தடுக்கக் கொதிக்கும் போது சிறிது வினிகர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம். ஈக்களை விரட்ட சிறிதளவு வசம் பை அரைத்து தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தௌpத்தால் அந்த ஈக்கள் இடத்தில் தலை காட்டாது. தயிர் புளித்து விடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங் காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. சுவருக்குச் சுண்ணாம்பு அடிக் கும்போதும்சரி, பெயின்ட் அடிக்கும் போதும்சாp, மணிக்கட்டில் ஒரு துணி யைச் சுற்றிக் கொள்ளுங்கள். கைகளில் பெயின்டோ, சுண்ணாம்போ படியாமல் தடுத்து விடும். கம்பளி உடையைத் தண்ணீரில் போட்டால் அது உடனே சுருங்கி விடும். கம்பளி உடையைத் தண்ணீரில் போட்டால் அது சுருங்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கிளிஸரைனைக் கலந்துவிட்டால் கம் பளி உடை சுருங்காமல் அப்படியே இருக்கும். பூக்கள் வாடாமல் இருக்க வேண் டுமா? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள். உடனே அந்தத் தண்ணீரை கொட்டி விடுங்கள். அதில் உடனே பூக்களைப் போட்டு வையுங்கள். பூக்கள் மறுநாள் வரை வாடாமல் இருக்கும். ஆரஞ்சுப் பழத்தோல்களை எடுத்து வெயிலில் நன்றhக காய வையுங்கள். காய்ந்த பிறகு அவைகளைத் துணிகள் வைக்கும் பீரோவில் போட்டு வையுங்கள். பூச்சி வராது. வெள்ளைப்பூண்டு,துளசி இலை இவற்றின் சாற்றைக் காதில் விட்டால் சீழ் வடிதல் தணியும். துளசி இலை பத்து, மிளகு பத்து இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலோpயா காய்ச்சல் தணியும். துளசி 10கிராம், சிறிதளவு காp உப்பு கலந்து வெந்நீருடன் உட்கொண் டால் அஜPரணம் தணியும். துளசி இலைச்சுரசத்தில் தேன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். துளசி விதைத்தூள், திப்பிலித் தூள் இவ்விரண்டையும் சம அளவில் கொண்டு தேனுடன் உட்கொண்டால் சுவையின்மை நீங்கும். துளசி இலைச்சுரசம், மிளகுத் தூள், பசு நெய் கலந்து உட்கொண்டால் வாதத்தினால் தோன்றும் வீக்கம் நீங்கும். வேப்பங்கட்டைக் கஷhயத்தைப் பருகினால் சுராமேகம் எனும் நோய் தணியும். மலை வேப்பம் பூ தலைவலியை தணிக்கும். வேப்பம் பூ கஷாயத்தைக் கொண்டு வாந்தி எடுக்கும்படி செய்தால் கபத்தால் தோன்றும் நாவறட்சி நீங்கும். வேப்பிலையை மைய அரைத் துத்தேன் கலந்து பூசினால் விரணங்கள் எளிதில் ஆறும். வேப்பந்தளிரைக் கறியாக சமைத்து உட்கொண்டால் பித்தநோய் தணியும். வேப்ப இலைக்கஷாயத்தில் தேன் கலந்து உட்கொண்டால் கிருமி நோய் தணியும். * தினமும் நெய்யை உருக்கியே உணவுக்குப் பரிமாற வேண்டும். * தாகத்தின்போது அருந்தும் மோர் நீர்மோராகவே இருக்க வேண்டும். * பருகும் நீர் கொதிக்க வைத்து ஆறியதாக இருக்க வேண்டும். * புழுங்கல் அரிசி 250 கிராம், பாசிப்பயறு 125 கிராம் வெந்தயம் 125 கிராம், இவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி எடுத்து ஒரு கப்பில் நீருடன் கலந்து குக்காpல் வைத்து நன்கு குழையவிட்டு உப்பு நெய் கூட்டிச்சாப்பிட்டு வருவது கருவுற்ற பெண்களுக்கும், பால்தரும் தாய் மார்களுக்கும் ஏற்றதாகும். * சில துளி நல்லெண்ணெயோடு அதே அளவு நீர்த்துளியை சேர்த்து குழைத்தால் வெண்மையாகி பசைபோல் நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ள வர்கள் முகத்தில் இதை தடவி, நன்கு உரசித் தேய்த்து வந்தால் சுருக்கம் நீங்கி பளபளப்பாகத் திகழும். * முகத்தில் தோல் வறண்டு இருந்தால் பால் ஏட்டின் சில துளிகள் எலுமிச் சம்பழச்சாறு கலந்து குழைத்து படுக்கைக்குப் போகும்முன் முகத்தில் தடவிக் கொள்ளவும். மறுநாள் காலையில் எழுந்த தும் குளிர்ந்த நீhpல் முகத்தை அலம்பவும். இப்படிச் சில தினங்கள் செய்தால் சுருக்கம் மறையும். * நோய்வாய்ப்பட்டு தேறிய உடல் மெலிந்து காணப்படுபவர்களுக்கு கசகசாவைப் பசும்பால் விட்டு அரைத்து சர்க்கரை நெய் சேர்த்து அல்வாவாக கிளறி வைத்துக்கொண்டு தினமும் சிறு நெல்லிக்காய் அளவு கொடுத்து வந்தால் உடல் மெருகுடன் வளர்ச்சி பெறும். * ஜலதோஷம் பிடித்து மூச்சுத் திணறல் உண்டாகும்போது ஓமத்தைத் துணியில் முடித்து மூக்கினால் உறிஞ்சினால் மூச்சுத்திணறலும், தலைவலியும் மாறும். .