கொரோனா வைரஸ்

Image

கடந்த வருடம் 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து வந்த இந்த வைரஸ், இன்று பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் வெளவால், எலி, பண்றி, பூனை மற்றும் சில விலங்குகளால் வரும். இது கொரோனா வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இதனுடைய அறிகுறிகள் சளி மற்றும் காய்ச்சல் தொடர்ந்து இருப்பது. இது நாளுக்கு நாள் அதிகமாகி நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலாக மாறி தொண்டைப்புண் மற்றும் மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரை குடிக்கிறது.

தடுக்கும் முறைகள்:

இது காற்றில் பரவும் தன்மை உள்ளது அதனால் முகமூடி அணிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் கைக்குலுக்குவதை தவிர்த்திடுங்கள். கைகளை சுத்தமாக சோப்பு (அ) லிக்யுட் வைத்து கழுவுங்கள். இந்நோய் இருப்பவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தும்பல், காய்ச்சல் தொடர்ந்து பதினைந்து நாட்களாக இருந்தால் மருத்துவரை அணுகுகங்கள். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம் மற்றும் சுற்றுலா செல்வதை தவிர்த்திடுங்கள்.