Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

அலர்ஜி ஏன்?

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி வருகிறது. இந்த அலர்ஜி ஒருவாpடமிருந்து மற்றெhருவருக்கு வேறுபடுகிறது. சிலருக்கு எந்தப் பொருளை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டு தொந்த ரவுகள் உண்டாகிறதோ, அதே பொருள் மற்றெhருவருக்கு உகந்ததாக இருக்கும். பொதுவாக சிலவற்றை சுவாசிப்பதாலும், தொடுவதாலும், சாப்பிடுவதாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. உடல் நிலையையும், சுற்றுப்புறத்தையும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அலர்ஜிகளுக்கு நிரந்தரத்தீர்வு அவற்றில் இருந்து விலகி இருப்பதுதான் என்று நினைத்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதனால் பாதிப்படைய வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு வருக்கு தூசி அலர்ஜp என்று தொpந்த பிறகு, அதிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், எதிர்பாராமல் ரோட்டில் செல்லும்போது காற்றடித்து புழுதி கிளம்பி, தும்மல் மற்றும் அது சார்ந்த பல தொந்தரவுகளை உண்டாக்கி, அதனால் அவர் பாதிக்கப்படுகிறhர். இந்த அலர்ஜி குழந்தைகள் முதல் பொpயவர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. ஒரே வீட்டில் உள்ள நான்கு பேருக்கு நான்கு வௌ;வேறு பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, நான்கு வௌ;வேறு விதமான தொந்தரவுகள் உண்டாகின்றன. ஒரு வருக்கு சளி என்றhல், மற்றவருக்கு தோலில் அhpப்பு, இன்னொருவருக்கு தலைவலி, எஞ்சியுள்ள ஒருவருக்கோ வயிற்றுப்போக்கு. நமது உடலில் அலர்ஜி ஏற்பட அட்hpனல் சுரப்பிகள்தான் காரணம். இந்தச் சுரப் பிகளால் உருவாக்கும் சிலவற்றின் குறைவுதான் அலர்ஜியை உண்டாக்குகிறது. காரணங்கள்„ பரம்பரையாகவும் இருக்கலாம். அப்பாவிற்கு தோல் வியாதி இருந்து, அதேபோல் மகனுக்கும் இருக்கிறது என்று சிலர் சொல்லக் கேட்கலாம். அந்தக் குடும்பமே அலர்ஜி குடும்பம் என்பதையும் கேட்டிருக்கலாம். மரபணுக்களின் மூலம் இது குடும்ப வழியாகவும் அதாவது பரம்பரையாகவும் தொடரலாம். ஆனால் கட்டாயம் தொடரும் என்றேh இத்தோடு முடிந்து விட்டது என்றேh சொல்ல முடியாது. சுற்றுப்புறச் சூழ்நிலைகள்„ அனைவரும் அறிந்தது ஆஸ்துமாதான். இதனை அலர்ஜியினாலும் பரம்பரையாகவும் வரக்கூடிய நோய் என்றே சொல்லலாம். சுற்றுப்புற சூழ்நிலைகளை தூய்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலமும், மழைக்காலமும், பனிக்காலமும் ஆஸ்துமா நோயாளிகளை பாடாய்ப்படுத்தி விடும். காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு அதிகமாவதுதான் இதற்கு காரணமாகும். தூசிகள், புகைகள், கற்பூரம், சாம் பிராணிப் புகை, சிகரெட்புகை, கொசுவை ஒழிக்க வைக்கும் புகை முதலியவைகள் ஆஸ்துமாவை உண்டாக்கவும், அதிகாpக்கவும் செய்யும். நாம் இருக்கும் இடத்தில் உள்ள காற்று சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சிலவகை பூச்சிகளாலும் ஆஸ்துமாவும், தோலில் தடிப்பு போன்ற ஒவ்வாமையும் ஏற்படும். நமக்கே தொpயாமல் இருக்கும் மிகச்சிறிய பூச்சிகள் நமக்கு பெரும் கேட்டை உண்டாக்கி விடும். பொதுவாகவே வீட்டில் சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, நாம் அடிக்கடி உட்காரும் சேர் மற்றும் சோபாக்கள் முதலியவற்றை தூசி மற்றும் பூச்சிகளிலிருந்து சுத்தமாக வைத்திருப் பது, தும்மல், மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு, தலைவலி, இருமல், இழுப்பு இவற்றை தடுக்க உதவும். வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகளின் ரோமங்கள்கூட சிலருக்கு ஆஸ்துமாவை உண்டாக்கி விடும். விவசாயிகள் கோழி மற்றும் மாட்டுப் பண்ணையில் வேலை செய்பவர்கள், பஞ்சாலைகளில் வேலை செய்பவர்கள், சிலர் இரசாயனத் தொழிற்சாலைகளில் உள்ளவர்கள், ரொட்டிக் கடைகளில் இருப்பவர்கள் முதலியவர்களுக்கு அலர்ஜpயை உண்டாக்கும் காரணிகளிடம் அவர்கள் இருப்பதால் ஒவ்வாமைக்கு ஆளாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. செடிகளை பராமாpப்பவர்கள், மரவேலை செய்பவர்கள், அழகு நிலையம் வைத்திருப்பவர்கள், முடி வெட்டுபவர்கள் முதலான வர்களும் அலர்ஜpயினால் அதிகம் பாதிக்கப்படுகிறhர்கள். மேற்கூறிய வைகள். அனைத்தும் அவர்களுடைய தொழிலாக இருப்பதால் அதிலிருந்து மீளவோ அல்லது ஒதுங்கவோ அவர்களால் முடிவதில்லை. விளைவு தொடர் தொந்தரவுகளுக்கு ஆளாகி ஆஸ்துமாவில் சென்று முடிகிறது. தனி ஒருவருக்கு இந்தத் தொந்தரவுகள் இருப்பதோடு மட்டுமின்றி, ஒரு ஏhpயாவில் ஏதோ தொழிற்சாலை நச்சுப் பொருட்களும், காற்றும் அந்த ஏhpயாவில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஆஸ்துமா போன்ற அலர்ஜpயையோ அல்லது தோலில் ஏதேனும் அலர்ஜpயையோ உண்டாக்கி விடுகிறது.
உணவுப் பொருட்கள்„
பொதுவாகவே உணவுப் பொருட்களில் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. அதிக எண்ணெய், கொழுப்பு, மசாலா, காரப் பொருட்கள், புளிப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் தக்காளி, கத்தாpக்காய், புடலங்காய் சாப்பிட்டால் ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவு வருகிறது என்று சொல்பவர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும். யார் யாருக்கு எந்தெந்த உணவுப் பொருட்கள் ஒத்துக் கொள்ளவில்லையோ அதனை அவர்கள் தவிர்ப்பது மிகுந்த பலனைத் தரும். மீன், முட்டை, இறைச்சி, நண்டு, கருவாடு போன்ற வைகள் சிலருக்குத் தோலில் அலர்ஜியை உண்டாக்கக் கூடும். சிலருக்கு இதனால் ஆஸ்துமா கூட வரலாம். குளிர்ச்சியான பொருட்கள், ஐஸ் கிhPம்கள் முதலியவற்றை சளித்தொல்லை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் தவிர்க்காமல் எந்த மருந்தை சாப்பிட்டாலும் நிரந்தர குணமடைய மாட்டார்கள். அப்போதைக்கப்போது நோய் குணமாகி மீண்டும், மீண்டும் தலைதூக்கி விடும். உணவுப் பொருட்கள் ஒத்துக் கொள்ளாததால் நம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதில்லை. இதனால் சோர்வு போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. நமது உடலில் போதுமான அளவிற்கு சத்துப் பொருள்கள் இருக்க வேண்டும். இதில் ஏற்படும் குறைவும் அலர்ஜpக்கு காரணமாகின்றது. போதிய அளவு வைட்டமின் சத்துக்கள், தாதுப் பொருட்கள் இல்லாமல் இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும். கால்சியம் போன்றவை குறைவதாலும் அலர்ஜp ஏற்படும். இவற்றில் மனநிலையும் முக்கியபங்கை வகிக்கிறது. அதிக டென்ஷனும், கோபமும், மன உளைச்சலும், கவலையும் உடலில் உள்ள கால்சியத்தின் அளவைக் குறைத்து விடுகிறது. மனாPதியாக உடலில் ஏற்படும் கோளாறுகள், அதிக மனக்கவலையாலும் ஆஸ்துமா அதிகாpக்கும்.

Back to Health Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in