Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

மார்பகப் பிரச்சினைகள் ..டாக். ஜெயம் கண்ணன்

மார்பகப் புற்று நோய்க்குப் பிறகு வாழ்க்கையில் சிக்கல்தான் என்ற எண்ணம் கொண்டுள்ள நமது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட ஒரு பெண்ணின் சம்பவத்தை கூறுவதை பொருத்தமாக கருதுகிறேன். துறையூhpலிருந்து ஒரு பெண் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மார்பகத்தில் புற்றுநோய், பாpசோதனைக் குப்பின் ஒருபுற மார்பகத்தை அகற்றி, ரேடியம் சிகிச்சை கொடுத்தேன். இவருக்குப் பிறந்த ஒரு குழந்தை சற்று மூளை வளர்ச்சி குன்றி இருந்தது. ஆதலால் மறு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். மார்பகப் புற்று நோய் ஏற்பட்டாலே சினைமுட்டைப்பை வேலை செய்வது நல்லதல்ல. சில சமயம் அதை அகற்றி விடுவோம். அல்லது ரேடியம் தெரபி சிகிச்சை கொடுத்து சினைமுட்டை வலு இழப்பு செய்து விடுவோம். இந்தப் பெண் மணி குழந்தை பெற விரும்பியதால் சினை முட்டையை அகற்றவோ அல்லது ரேடியம் தெரபி கொடுக்கவோ இவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து கீமோ தெரபி மாத்திரைகளை அதாவது புற்றுநோயை கட்டுப்படுத்தக் கூடிய மாத்திரைகளைக் கொடுத்தோம். மார்பகம் அகற்றப்பட்ட இரண்டு வருடங்களில் கர்ப்பம் தாpத்தார். இந்தக் காலத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. பிரசவமும் சுமூகமாக ஆயிற்று. அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு மறுபடியும் அடுத்த மார்பகத்தில் சிறு கட்டி ஆரம்பித்தது. இந்த முறை கட்டியை மட்டுமே அகற்றி எளிதில் சிகிச்சையை முடித்தோம். ஒரு பக்க மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு ரேடியோ தெரபி சிகிச்சை அளித்து, குழந்தையைப் பெற்றெடுத்து பின் அடுத்த மார்பகத்தில் சிறுகட்டி ஏற்பட்டு அதற்கு சின்னதாகவே சிகிச்சையும் அளித்ததால் இன்று பத்து வருடங்களாக நலமாக வாழ்ந்து வருகிறhர். இரண்டாவது, பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு சினைமுட்டைப் பையை ஒரு வருடம் கழித்து அகற்றிவிட்டோம். எனவே புற்றுநோய் ஏற்பட்டால், சாpயான முறையில் சிகிச்சை அளித்தால் சிக்கல்களிலிருந்து விடுபட்டு பூரண குணம் பெறலாம் என்பதை தொpந்துகொள்ளுங்கள் மார்பகங்களை கவர்ச்சிகரமாக ஆக்குவதற்காக ஹhர்மோன் ஊசிகள் போடப்படுகிறது. இதனால் பின் விளைவுகள் உண்டா என்பதையும் தொpந்துகொள்ள வேண்டும். மார்பக வளர்ச்சி என்பது இயற்கையிலேயே வளர்வதுதான். ஹhர்மோன் ஊசிகள் இதில் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நவீன உலகத்தில் சிலருக்கு ஏதோ விபத்தாலோ ஆபரேசனாலோ மார்பகம் இல்லாமற் போகும் பொழுது செயற்கையால் ஆனமார்பகம் பொருத்திக் கொள்வதில்லையா? மேலும் கடைகளில் மார்பகம் குறைவாக இருப்பவர்களுக்கென்று …பேடட் பிரா†விற்கிறது. இதை உபயோகப்படுத்தலாம். பெண்ணின் மார் பகத்தின் வேலை„ மார்பகம் பல குழல்களால் சூழப்பட்ட ஒரு சுரப்பியே. இக்குழல் களைச் சுற்றி சுரப்பி மற்றும் கொழுப்புத் திசுக்கள் சூழ்ந்திருக் கின்றன. பெண்ணின் மார்பகம் பால் உற்பத்தி செய்வதற்காகவும், பால் சுரப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க உறுப்புகளில் மார்பகங்களும் ஒரு பகுதியே மாதவிலக்குச் சுற்றின் பொழுது மார்பகங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது. பெண் இன ஹhர்மோன்களால் தூண்டப்பட்டு ஒவ்வொரு மாதச் சுற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது. மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பிட்யூட்டாp எனும் சுரப்பியினால் இனப்பெருக்கச் சுற்று கட்டுப்படுத்தப் படுகிறது. பெண் வயதுக்கு வந்ததும் மூளை பிட்யூட்டாp சுரப்பியைத் தூண்டி சில ஹhர்மோன்களை வெளியிடச்செய்கிறது. அவை கருவணுவகங்களைத் தாண்டி பெண் இன ஹhர்மோன்களை சுரக்கச் செய்கின்றன. இவை ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டிரான் எனும் ஹhர்மோன்களாகும். இந்த ஹhர்மோன்கள் மார்பகங்களை வளர்ச்சியடையச் செய்கிறது. மாதவிலக்கு மற்றும் கர்ப்ப காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பெண்களில் பரவலாக காணப்படுகிற இது புற்றுநோயல்ல. பார்க்கப் போனால் வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் 4 பெண்களில் ஒருவருக்கு வரும். அமொpக்காவில் இத்தகைய பிரச்சினைக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அவர்களை பாpசோதித்துப் பார்க்கும் பொழுது மார்பகக் கட்டிகளால்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறhர்கள் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. வயதுக்கு வந்தபிறகு எப்பொழுது வேண்டுமானாலும் மார்பகங்களில் சிறு கட்டிகள் தோன்றலாம். ஆனால் 30 வயதிலிருந்து மாதவிடாய் நிற்கும் காலம் வரை அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய் நின்றபின் இந்நோய் ஏற்படுவது மிகக்குறைவுதான். இந்த மார்பக சிறு கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளல்ல. ஆனால் பொதுவாக வலியை ஏற்படுத்தக் கூடியது. ஒவ்வொரு மாதத்திலும் வலியும் ஒரே சீராக இருப்பதில்லை. பெண் இன ஹhர்மோன்கள் ஒரே சீராக இல்லாததால், ஹhர்மோன்களின் அள வில் ஏற்றத்தாழ்வு ஏற் படுவதால் வலிமிகவும் அதிகாpக்கலாம், எப்போதும் போலவே இருக்கலாம் அல்லது மறைந்தும் விடலாம். உங்களுக்கு மருத்துவர் உங்களுடைய வலி, வேதனையைக் குறைக்கவும் மாற்று கட்டிகளை கரைக்கவோ அல்லது அகற்றவோ எந்த சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளதோ அதைத் தேர்ந்தெடுப்பார். ஒவ்வொரு மாதமும் நீங்களே உங்கள் மார்பகங்களை பாpசோதித்து பார்ப்பது அவசியமாகும். ஒவ்வொரு மாதவிலக்கிற்குப் பிறகு பாpசோதிப்பதுதான் சிறந்த காலம். உங்களுடைய மார்பகங்களை நீங்கள்தான் சிறந்த முறையில் கண்காணிக்க முடியும். ஏதாவது மாற்றம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் கூறும் அறிவுரைப்படி நடக்க வேண்டும். நாமாக எந்த முடிவையும் எடுத்துக்கொண்டு சிகிச்சை செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Back to Health Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in