Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

புற்று நோயை தவிர்க்கலாமே

புற்றுநோய் மனித இனத்தை ஆட்டிப் படைக்கும் நோய். ஆண்டு தோறும் புற்று நோயால் 70 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்று நோய் எல்லா வகையான விலங்கு களையும் தாக்குகிறது. புற்றுநோய் புதிய நோயும் அல்ல. பல்லா யிரக்கணக்கான ஆண்டு களுக்குமுன் வாழ்ந்து மறைந்த டைனோசர்கள் புற்று நோயால் தாக்கப் பட்டிருந்ததை கண்டறிந் திருக்கின்றனர். புற்றுநோய் சில வைரஸ்களால், வேதிப் பொருட்களால் அல்லது கதிhpயக்கத்தால் உண்டா கலாம். புற்றுநோயை எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கிறேhமோ, அவ்வளவுக்கவ்வளவு எளிதாகக் குணமாக்கலாம். புற்றுநோய் வருவதைத் தவிர்க்க புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னால் உடனே எதிர் கேள்வி கிளம்பிவிடும். புகை பிடிப்பவர் களுக்கெல்லாம் புற்றுநோய் வருகிறதா? புகைக்காதவர்கள் புற்றுநோயால் அவதிப்படுவதில்லையா? இப்படி ஏறுக்கு மாறhக கேட்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர் பலர். புகைப்பிடிப்பவர்களிடையே நுரை யீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப் படுவது நன்கு ஆய்ந்தறிந்து சொல்லப் பட்ட ஒன்று. சிலருக்கு வருவதில்லையே எனக் காரணம் காட்டி, புகை பிடித்து வம்பை வலிய விலைக்கு வாங்குவது எவ்வகையில் நியாயம்? மேலும், புகைப் பதால் மட்டுமே புற்று நோய் வருமென்று யாராவது சொன்னார்களா? வேறு பல காரணங்களாலும் புற்று நோய் தோன்றலாம். புகையிலையை வாயில் அடக்கிக் கொள்வது. பாக் குப் போடுவது சில வகைப் பூஞ்சைகள் தாக்கிய சொத் தைக் கடலை போன்ற உணவை உட்கொள்வது, பூச் சிக்கொல்லி மருந் துகள் கொண்ட மற்றும் தீய்ந்த உணவுப்பொருட் களைச் சாப்பிடு வது போன்றவற் றhலும் புற்று நோய் ஏற்பட முடியும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தொpந்த பிறகும், இவற்றைக் கைவிடாமல் இருப்பது அறிவுடைமை அல்லவே. ஒருவன் ஞானியிடம் சென்று நான் நீண்ட காலம் வாழ்வதெப்படி? என்று கேட்டானாம். அதற்கு அவர் புகை பிடிக்காதேƒ மது அருந்தாதேƒ பெண் தொடர்பு வேண்டாம் என்று அடுக்கிக் கொண்டே சென்றhராம். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பின்னர் இவற்றையெல்லாம் அனுபவிக்காமல் நீண்ட நாள் வாழ்ந்து என்ன பயன்? என்று திருப்பிக் கேட்டானாம். அது போன்ற எண்ணம் கொண்டவர்களே இவற்றை கைவிடாமல் தொடர்ந்து, புற்று நோய்க்கு ஆளாகி இன்னலுறுவர். ஆனால், புற்று நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்த்தவர்கள் தங்களுக்கு ஒருக்காலும் அந்த நோய் வரக்கூடாது என்று எண்ணாமல் இருக்க முடியாது. சரி இப்பழக்கங்களைக் கைவிட்டு விடுகிறறோம் என்று வைத்துக்கொள்ளுங் கள். இப்போது புற்று நோய் வரவே வராது என்று சொல்லலாமா? அதுவும் முடியாது. எந்தவித தீய, வேண்டத்தகாத பழக்கங்களும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறறோம். நம் நாட்டில் பெண்கள் (பெரும்பாலும்) புகை பிடிப்பதில்லை. இருப்பினும் அவர்களை யும் புற்று நோய் விட்டு வைப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? நான் முன்னேரே சொன்னபடி புற்று நோய் பல காரணங்களால் வரக்கூடும். சில காரணங்கள் நமக்குத் தொpந்திருக்கின்றன. பல இன்னும் நம்மால் அறி யப்படவில்லை என்பதே உண்மை. நாம் வாழும் இன் றைய உலகம் தூய்மையானதல்ல. மனிதன் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட் டுக்கொள்வதற்கொப்ப பல்வேறு நச்சுப் பொருட் கள் உற்பத்தி செய்து, பயன்படுத்தி, இவ் வுலகை மாசுறச் செய் கிறhன். நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையானது அல்ல. நாம் அருந்தும் நீரும் அப்படியே. பூச்சுக் கொல்லி மருந்துகளையும், செயற்கை உரங்களையும் வரைமுறையின்றிப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விட்டோமே தவிர, அதனால் விளைந்த கேடுகளை பலர் இன்றும் அறியவில்லை. நாம் பயன்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களிலும் இந்நச்சு இரண்டரக் கலந்திருப்பது மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய நிகழ்வு. காய்கறிகளை வாங்கிக் என்ன தான் நீரில் அலசிச் சமைத்தாலும் அவற் றின் உள்ளே உள்ள பூச்சி மருந்துகள் அப்படியேதான் இருக்கின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புற்று நோயைத் தோற்றுவிக்க வல்ல, வேதிப் பொருட் கள் பலவற்றை நாம் அன்றhட வாழ்வில் சந்திக்கிறேhம். அவை மூலப்பொருள் வடிவத் தில் இருக்கும்போது அவற்றhல் அதிக பாதிப்பு இல்லை. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையில் மூலப் பொருட்கள் மாற்றம் பெற்று புற்றுத் தோற்றி கள் ஆகின்றன. இந்தப் புற்றுத் தோற்றிகள் அடுத்து நமது செல்களி லுள்ள மரபுப் பொருளான டி.என்.ஏ.வைத் தாக்கு கின்றன. இந்த டி.என்.ஏ. ‡புற்றுத் தோற்றிகள் இடையே விளையும் இடைச்செயல் சாதாரணச் செல்லைப் புற்று நோய் செல்லாக மாற்றுகிறது. இதனால் இந்தச் செல் தறிகெட்டுச் செயல்பட்டு பல்கிப் பெருகி புற்று நோய்க் கட்டியாக விசுவரூபம் எடுக் கிறது. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் புற்று நோய் வருவதற்கான காரணங் களைத் தம்மையறி யாமல் உட் கொண்டு வரு கிறhர்கள். ஆனால், அவரவர் உடல் நிலைக்குத் தக்க வாறு சிலருக்கு புற்று நோய் வரு கிறது. ஏன் பலருக் குப் புற்றுநோய் வருவதில்லை என்று ஆய்ந்தறிந் தால் அதற்குப் பல காரணங்கள் இருக்க லாம் என்று அறி ஞர்கள் கருதுகிறhர் கள். அவற்றில் ஒன்று, இத்தகைய மனிதர்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களினால் புற்று நோய் எதிர்ப் புப் பொருட்களை உண்டு வருவதாக இருக்கலாம். 500-க்கும் மேற்பட்ட இயற்கை யிலேயே காணப்படும் அல்லது உருவாக்கப்பட்ட காpம வேதிப்பொருட்கள் புற்று நோய் வராமல் தடுக்கக்கூடிய சக்தியுடையதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. இவ்வகைப் பொருட்கள் புற்று நோய் தோற்றப் பாதையின் எந்தக் கட்டத்திலும் குறுக்கிட்டுப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அது அந்த வேதிப்பொருட்களின் தன்மையைப் பொறுத்தது. சில வேதிப்பொருட்கள், புற்றுத் தொற்றி களை நம் உடல் எடுத்துக்கொள் வதைத் தடை செய் கின்றன. சில பொருட்கள் புற்றுத் தோற்றிகள் மூலப் பொருட்களிலி ருந்து தோன்று வதைத் தடுக் கின்றன. வைட்ட மின் Bசி]யும், Bஇ] யும் இத்தகைய பணியைச் செய்ய வல்லவை. சில வேதிப்பொருட்கள் புற்று தோற்றி களைச் செயலி ழக்கச் செய்யக் கூடிய சில நொதி களின் அளவை உயர்த்துவதன் மூலம், புற்று நோய்த் தடுப் பிகளாக விளங்கு கின்றன. இன்னும் சிலப் புற்றுத் தோற்றிகள் டி.என். ஏயுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன. Bகுளுடதை யோன் போன்றவை புற்றுத்தோற்றிகளை உடனுக்குடன் உடலிலிருந்து நீக்கும் துப்புறவுப் பணியை செய்து புற்று வராமல் தடுக்கின்றன. ரெடினாய்டுகள், க்ரோட் டினாய்டுகள், மிதிலேட்டட் க்சாந்தைன்கள், தாவர ஸ்டீரால்கள் போன்றவை புற்றுத்தோற்றி டி.என்.ஏ. தொடர்பு ஏற்பட்ட பின்னர் மேற்கொண்டு எந்த விளைவையும் நிகழாமல் தடுக்கின்றன. கொhpயா நாட்டில் நடந்த ஒரு ஆய் வில் ஜpன் செங் செடியின் வேரைச் சாப்பிடுபவர் களுக்குப் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலை நோக்கும்போது ஓர் எண்ணம் பளிச்சிடாமல் இருக்க முடியாது. வைட்டமின்-சி, வைட்ட மின்-இ, ரெடினாய்டுகள், கரோட்டினாய் டுகள், போன்ற இவ்வேதிப் பொருட் கள் காரட், பீட்ரூட், ஆரஞ்சு, தக்காளி போன்ற காய்கனி கிழங்குகளில் நிறைந் திருக்கின்றன. எனவே இத்தகைய காய், கனி, கிழங்குகளை வேக வைக்காமல், பச்சையாக உட்கொள்வது புற்றுநோய் வராமல் தடுக்கும் முயற்சியில் முதற் படியாக அமையும். புற்று நோய் வரா மல் தடுப்பதற்கு பின்வரும் நடை முறைகளைப் பின்பற்றுமாறு அறிஞர்கள் பாpந்துரைக்கிறhர்கள். 1. ஊட்டம் நிறைந்த உணவையே சாப்பிடுங்கள். 2.இ, சி-வைட்டமின் நிறைந்த உணவு களைச் சாப்பிடுங்கள். 3. குறிப்பிட்ட சில உணவுகளையே பிடிக்கிறது என்பதற்காக அடிக்கடி சாப்பிடுவதை தவிருங்கள். 4. நார்ப்பொருள் நிறைந்த நிறைய காய்கறிகள், பழங்களை உணவைச் சாப்பிடுங்கள். 5.அதிக சூடான உணவு சாப்பிடா தீர்கள். மிதமான சூடுபோதும். 6.எப்போதும் தீய்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள். 7. பூஞ்சைகள் தாக்கிய பொருட்களை உட்கொள்ளவேக் கூடாது. 8. பூச்சி மருந்து கொண்ட உணவை சாப்பிடாதீர்கள். 9. மருந்துகளை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடாதீர்கள். 10.மது, புகையிலையை கண்டிப்பாக விருங்கள். இவற்றை எல்லாம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்பது நிஜம்.

Back to Health Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in