Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us


கைகளின் அமைப்பு

மனிதர்களின் கைகள் மூன்று விதமாக அமையப் பெற்று இருக்கின்றன. இவை விரல்களின் ஒழுங்கைப்பின் பற்றியே அமைகின்றன. கைகளின் அமை ப்பிற்குத் தக்கவாறு பெயரும் சொல்லப்பட்டிருக்கின்றன.

1. சதுரக்கை 2. உருட்சிக்கை 3. சங்குக்கை

என மூன்றாக பிரிக்கப்படுகின்றன. இந்த வித்தியாசத்தை கையின் பின்பக் கத்தைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். கை சதுரமாயிருந்தால் விரல் அக லமாயும்,விரல் நுனி சற்று கூர்மையுடன் இருக்கும். உருட்சியான கையில் உள் ளங்கை விசால மாகவும், விரல் முனை உருட்சியாகவுமிருக்கும்.

ஒடுங்கிய கை விரல்கள் ஒன்றறோடொன்று ஒட்டினதுபோல் அமைந்து சங்கு போல தோன்றும். ஐந்து விரல்களும் அநேகமாய் ஒன்றுக்கொன்று சம்பந்த மின்றியே கையில் அமைகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் ஊகிக்கப்படு கின்றன. சதுரக் கையை உடையவர்கள் சம்பத்துடைய வராவார். உருட்சியான கையை உடையோர் நினைத்ததை முடிப்பவர். ஒடுங்கின கையை உடையோர் தெய்வீகம் அல்லது ஆத்ம சக்தியை உடையவராயிருப்பார்.

மனோவலிமை, கட்டை விரலிலிருந்து விளங்கும். தீர்க்காலோசனையுள்ள புத்தியை புத்தி ரேகையிலிருந்து அறியலாம். கடினமான கை அசட்டுத்தனத் தைக் காட்டிக்கொடுத்துவிடும். இந்தக் குணங்கள் அனுபவத்தில் சிறிதும் மா றhது. ஆண்களின் கையையும், விரலையும்விட பெண் களிடத்தில் விசேஷ வித்தியாசத்தைக் காணலாம். முக்கியமாக உள்ளங்கை, விரல்கள் இவ்விரண் டும் அளவிலும் மாறுதலிருக்கும்.

மெல்லிய நீண்ட விரல்களுக்கு விசேஷ பலன்களைச் சொல்ல வேண்டும். பெண்களுக்கு கை மிருதுவாயிருக்கும். ஆண்களின் கை மிருதுவாயிருந்தால் மனோ கற்பனை மிகுந்தும், அடுக்குப் பதங்களமைந்த கவிபாடும் திறமையு மிருக்கும். மனோ பலத் தைவிட புத்தியின் பலமே மிகுந்திருக்கும். ஆகையா ல் இது பெண்களுக் கு ரியது. கடினமான கையையுடையோர் மனோ ராஜ;யம் செய்யமாட்டார். மிகைப்பட பேசமாட்டார். நல்லொழுக்கமுடையோராகவும், எப்போதும் உற்சாகமாகவும், கடினமான வேலையையும் செய்ய சித்தமாயிருப் பார். மனதில் எண்ணியதை எவருக்கும் தெதரிவிக்கமாட்டார். நம்பிக்கையும் மேலோங்கியிருக்கும்.மனிதருக்கு வயதாக ஆக கை கடினமாகவும், பசை குறைந்ததாகவும் காணப்படும். விருத்தாப்பியத்தில் மனதில் நினைத்த படி அனுகூலப்படாது. அன்பும், ஆதரவும் குறையும். மனோசக்தியும் விரைய மாகும். மிக்க கெட்டியான கரத்தையுடையோருக்கு புத்தி குறைவாயிருக்கும். மிருகத் தன்மையுமிருக்கும். மற்றவர்களின் கஷடத்தை உதாசீனப்படுத்துவர்.

உள்ளங்கையைப் பற்றிய விவரங்கள்

உள்ளங்கையிலுள்ள சர்மம் மிருதுவாயிருந்தால் அற்பபுத்தியையும், புத்திக் குறைவையும் குறைக்கும். சரிர சக்தி குறைந்திருக்கும். மிருதுவான கையில் அழுத்தமான சர்மம் இருந்தால், புத்திக் கூர்மை, அதிக நம்பிக்கை, தன்னலம் போன்றவை அமைந்திருக்கும். கடினமான கையில் மிக அழுத்தமான சர்மம் இருந்தால், சரிரத்தால் உழைக்கக்கூடிய தொழிலாளியாயிருப்பார். இவர்களு க்கு பகுத்தறிவு குறைவு, புத்தி மட்டு. இத்தகையோர் தம்மை திருத்திக் கொ ள்ள முடியாது. கட்டைவிரலில் ஊனம் இருந்தால், பிடிவாதமுள்ளவராகவும், சண்டைக்காரனாகவும் இருப்பான். உள்ளங்கையில் குழிவிழுந்திருந்தால், பண ம் சம்பாதிக்கும் முயற்சிகளிலெல்லாம் தடையுண்டாகும். நல்ல சந்தர்ப்பம் வாய்த்தாலும் பயன்படுத்த இயலாது.

நமக்கு முன்னெச்சாpக்கையாக, அப்போதைக்கப் போது கையில் குறிகள் காணப்படுகின்றன. அதனை அடிக்கடி கவனித்து வந்தால் சமயோசிதமாய் நடந்து கொள்ளலாம்.

நீண்ட விரல்கள்

ஆழ்ந்த அன்பையும், சிறு காhpயத்தையும் கூர்மையாகக் கவனிப்பதையும், சிறு கஷ்டங்களையும் நினைத்து சங்கடப்படுவதையும், ஆசை வழிப்பட்டு சிந் தை குலைதலையும்,சொல் தாளாத தன்மையையும்,எதைப் பேசினாலும் மாறு தலாய் நினைக்கும் தன்மையையும், மேலும் வஞ்சகம், பொறhமை போன்ற வைகளையும் குறிப்பதாயிருக்கும்.

குறுகிய விரல்கள்

விவரம் விசாhpக்காது ஒத்துக் கொள்ளுதல். பணமானாலும், கணக்கானா லும் கொடுத்தபடியே ஏற்றுக்கொள்ளுதல், யோசனையில்லாது அவசரப்பட்டுப் பேசுதல் போன்ற குணங்களை குறிப்பிடு வதாயிருக்கும். விரல்கள் கடினமா கவும், குறுகியுமிருந்தால் கையால் தொழில் செய்பவரென்றும், தன்னலம் மற் றும் கொடூர எண்ணம் போன்றவையும் அமைந்திருக்கும்.

விரல்கள் அடிச்சிறுத்து, முதல் அங்கு லாஸ்தி சற்றே தடித்திருந்தால் தன் னலங் கருதாதவர். சுத்தமான ஆகாரத்தை விரும்புபவர், சுத்தமான ஆடை அணிபவர் என்பதைக் காட்டும்.

விரல்கள் உள்பக்கமாக சற்றே வளைந்திருந்தால்,அளவுக்கு மிஞ்சிய புத்தி, கோழைத்தனம், பிடிவாதம் சில சமயங்களில் , அதிக ஆசை இவைகளைக் குறிக்கும். லகுவில் விரல்கள் பின் னோக்கி வளைந்திருந்தால் நல்லது. நல்ல சகவாசம், வீண்வார்த்தை சற்று மிஞ்சிய தன்மையையும், வீண் செலவு செய் வதையும் குறிக்கும். விரல்கள் முறுக்கி விகாரமாயிருந்தால் துன்பப்படுத்தும் சுபாவமுள்ளவரென்பதையும், கொலைக்கான எண்ணம் உண்டாகும் என்பதை யும் குறிக்கும். மிருதுவாயும், விரல்கள் நாலா பக்கமும் வளையக்கூடியதாகவு மிருந்தால் யோசனையில்லாத தீர்மானம், உபயோகமற்ற விஷயத்தில் அன்பு செலுத்துவது, பயனற்ற கூச்சலிடுதல் போன்ற வைகளைக் குறிக்கும். விரல் கள் ஒன்றேh டொன்று நெருங்கியிருந்தால், ஆசை அதிகமுள்ளவரென்பதைக் குறிக்கும். விரல்களுக்கு மத்தியில் இடைவெளியிருந்தால் மட்டில்லா ஆச்சாpய ப்படுபவர் என்பதைக் குறிக்கும்.

கை விரல்கள்

ஆள்காட்டி விரல் „

கட்டையாயிருந்தால் ஊக்கமுள்ளவராகவும், திடீரென யோசனையுண்டாகி தீர்மானமும் செய்து விடுவார். அளவுக்கு மிஞ்சி விரல் நீண்டிருந்தால் ஆளு ந் திறமை பளிச்சிடும். சர்வாதிகாhp, மந்திhp, பிரபு, மத குருமார்கள் போன் றவராகும் தகுதியுண்டாகும். ஆள்காட்டி விரல் நீண்டு கூர்மையாயிருந்தால், மதப்பற்றையும், மூட பக்தியையும் குறிக்கும். முதல் விரல் மற்ற விரல்களோ டு ஒழுங்காய் அமைந்து விரல் நுனி சதுரமாயிருந்தால் நிதான புத்தியையும், உண்மையை அறிய ஆவலுள்ளவர் என்பதையும் குறிக்கும். விரல் முனை உரு ட்சியாயிருந்தால் காதால் கேட்டதை எல்லாம் அப்படியே நம்பும் சுபாவத்தை யும், புதிய சமயக் கோட்பாடுகளில் குருட்டு நம்பிக்கையையும் குறிக்கும்.

முதல் அங்குலாஸ்தி, மற்றவைகளை விட நீளமாயிருந்தால் திருவருளைக் குறிக்கும். இரண்டாவது அங்குலாஸ்தி நீளமாயிருந்தால் மேலான எண்ணத் தைக் குறிக்கும். மூன்றhவது அங்குலாஸ்தி அதாவது நகமுள்ள பாகம் நீளமா யிருந்தால் அகங்காரத்தோடு கூடிய கர்வத்தைக் குறிக்கும். ஆள்காட்டி விரல் இரண்டாவது விரலுக்கு சமமாகவாவது, சற்று நீண்டாவது இருந்தால், மேலா ன எண்ணங்களால் கவரப்பட்டதைக் குறிக்கும்.

நடுவிரல்

நீண்டும், சதைப்பற்றுடனும் இருந்தால் சஞ்சலத்தையும், ரோகத்தன்மையை யும் குறிக்கும். விரல் நீண்டும், முறுக்கியு மிருந்தால் கொலை செய்யும் எண் ணம் இயற்கையென்பதை குறிக்கும். நீண்டும், கூர்மை யாயுமிருந்தால் தன்ன லத்தையும், தொந்தரவுகளை அலட்சியம் செய்யத்தக்கவர் என்பதையும் குறிக் கும். விரல் நீண்டும் சதுரமாயு மிருந்தால் கஷடத்தோடு கூடிய மனதைக் குறிக்கும். விரல் நீண்டும் ஒடுக்கமாயு மிருந்தால் மனதில் மேலான எண்ணம் குடி கொண்டேயிருக்கும். ஆனால் கலை ஞானம், தொழில், சங்கீதம் இவைக ளைத் தொpந்து கொள்வதில் சோம்பல் உள்ளவராயிருப் பார். மிருகங்களிட த்தில் அன்புடனிருப்பார். முதல் அங்குலாஸ்தி நீளமாயிருந்தால் விசனமுள் ளவராகவும், மூட புத்தியுள்ளவராகவுமிருப்பார். அதிக நீளமாயிருந்தால் தற் கொலைக்கான சிந்தையிருக்கும். இரண்டாவது அங்குலாஸ்தி நீளமாயிருந்தா ல் விவசாய வேலை அல்லது யந்திர வேலை செய்பவராயிருப்பார்.

மூன்றாவது அங்குலாஸ்தி நீள மாயும், அகலமாயுமிருந்தால் பேராசையை க் குறிக்கும். முதல் விரலை நோக்கி நடுவிரல் வளைந்து இருப்பின் எல்லாம் விதிபோல் நடக்கும் என்ற எண்ண முடையவர். மூன்றhவது விரலை நோக்கி சார்ந் திருப்பின் சித்திர வேலையில் இஷடமுள்ளவர் என்பதாகும். இயற்கை யழகில் ஆர்வம் இருக்கும்.

குட்டையாய் எவ்விதக் குறியுமற்றிருந்தால் சித் திரவேலையில் கூலித் தொ ழிலைக் குறிக்கும். விரல்நுனி கூர்மையாயிருந்தால் சமயோசிதமும், ஞானதீட் சண்யமுண்டாகும். விரல் முனை சதுரமாயிருந்தால் பணம் சம்பாதிப்பதற் கான வித்தையை விரும்புபவர் என்பதைக் குறிக்கும். விரல் முனை உருட்சி யாயிருந்தால் சித்திர வேலையில் நிபுணராகவும், நாடகமேடையில் நடிப்பவ ராகவும் இருப்பர். முதல் அங்குலாஸ்தி நீளமாயிருந்தால் சித்திரம் வரைவ தில் மிகுந்த ஆசையுடையவராயிருப்பார். இரண்டாவது அங்குலாஸ்தி நீளமா யிருந்தால் கைத் தொழிலில் ஊக்கமுடையவராவார். புத்தி தீட்சண்யமுடை யவராகவும் இருப்பார்.

சுண்டு விரல் „

மோதிர விரலின் நகம் வரை நீண்டிருந்தால் மனதையும், புத்தியையும் விசாலப்படுத்துவதற்கான வழியில் எண்ணமிருக்கும். பல விஷயங்களில் புத் தி பிரவேசிக்கும் சக்தி வாய்ந்தவர். ஆனாலும் நிதானமாகவும், சாவகாசமா கவும் பேசுவர். மற்றவர்களை தன்வசப்படுத்தக்கூடிய சக்தியுள்ளவர். சுண்டு விரல் குட்டையாயிருந்தால் விசயங்களை அதி சீக்கிரத்தில் கிரகித்து, அதற் குhpய காரணங்களை துhpதமாய் விளக்குபவராவார்.

சுண்டு விரல் கூர்மையாயிருந்தால் பலவித வித்தைகள் கற்பதில் இயற்i கயான சக்தி வாய்ந்தவராகவும் தீட்சண்ய திருஷடியுடைய வராகவுமிருப்ப hர். வாக்கு சாமர்த்தியமும் தெய்வீகமுள்ள தாயிருக்கும். பின்னப்பட்ட கை யில் கூர்மையான விரல் அமைந்து இருந்தால் கபட குணம் மிகுந்திருக்கும். விரல்நுனி சதுரமாயிருந்தால் தர்க்கம் செய்பவராகவும், பகுத்தறிவு மிகுந்து ஆராய்ச்சியில் நுண்ணறிவு உடையவராகவுமிருப்பார்.

முதல் அங்குலாஸ்தி நீளமாயிருந்தால் சாஸ்திர சம்பந்தமான விஷயங்க ளில் தீவிர சிந்தனையிருக்கும். இரண்டாம் அங்குலாஸ்தி நீளமானால் கைத் தொழிலையும், வியாபாரத்தையும் குறிக்கும். மூன்றாம் அங்குலாஸ்தி நீளமா யிருந்தால் நுண்ணறிவும், லட்சம புத்தியுமிருக்கும். மோதிர விரலுக்கு சமமா ய் சுண்டு விரல் நீண்டு இருந்தால் தத்துவ ஞானியாகவும், பண்டிதனாகவும் விளங்குவார். இரண்டாவது விரலுக்கு சமமாய் சுண்டு விரல் நீண்டிருந்தால் சாஸ்திரத்தையெல்லாம் கற்றவராகவும், வல்லமையுடையவராகவும் இருப்பார்.


Back to  Jothidam  Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in