கொண்டக்கடலை குருமா

Image


தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை (கருப்பு (அ) வெள்ளை)
பச்சமிளகாய்- 2
தேங்காய் - சிறிதளவு
சீரகம்- சிறிதளவு
முந்திரி- 4
எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 3
வெங்காயம் - 2
பட்டை - 1
இலவங்கம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

கொண்டக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும். பிறகு பச்சமிளகாய், சீரகம், தேங்காய், முந்திரி ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும்.

இஞ்சி பூண்டு தனியாக, தக்காளியை தனியாக அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு காடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம் போடவேண்டும், சிறிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்த தக்காளி, மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும், பிறகு அரைத்து வைத்த தேங்காய் , தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவேண்டும். வேகவைத்த கொண்டக்கடலையை கையளவு எடுத்து மிக்சியில் அரைக்கவேண்டும் (நன்றாக அரைக்க கூடாது)

பிறகு அரைத்த கலவை மற்றும் மீதியுள்ள கடலை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 10 நிமிசம் கழித்து சுவையான குருமா தயாராகிவிடும்.