சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் வெப்பசலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.