துபாயில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் நடத்திய விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், துபாயில் வசிக்கும் இந்திய மகளிர் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. எஸ்.ஈவண்ட் மற்றும் டேலண்ட் ஜோன் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவரும் சமூக ஆர்வலருமான லட்சுமி அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். மேலும், இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கவுரவிக்கப்பட்டனர். சமீபத்தில் வெளியான பேரன்பு திரைபடத்தில் நடித்த சாதனா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், எழுத்தாளர் நசீமா ரசாக், ஜெயந்திமாலா சுரேஷ், உள்ளிட்ட அரபு அமீரக வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.