Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

எழில் கூந்தலுக்கு...

தினமும் காலையும், மாலையும் குறைந் தது இருபத்தைந்து முறைகளாவது கூந்தலை வாரி விடுங்கள்.

டென்ஷன் கூந்தல் வளர்ச்சியின் முதல் எதிரி. எனவே அனாவசிய விஷயங்களுக்கெல்லாம் டென்ஷனாவதைத் தவிர்த்து விடுங்கள்.

தினசரி குறைந்தது பத்து நிமிடங்களாவது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

முடிந்தளவு கூந்தலை இயற்கையான முறையில் உலர்த்தவே பாருங்கள். ஹேர் டிரையர் உபயோகிக்க வேண்டாம்.

உங்களது அன்றhட உணவில் ஏதேனும் பச்சைக் காய்கறி அல்லது பழ சாலட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

தினம் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.

தினம் உணவில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கீரை இருக்க வேண்டும்.

கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் பி,இ,சி,கே ஆகியவை மிக முக்கியம்.

அவை அதிகம் இருக்கும் உணவுகளைத் தொpந்து கொண்டு சாப்பிடுங்கள்.

பால் நிறையக் குடியுங்கள். பால் கலந்த உணவுப் பொருட்களையும் நிறைய சாப்பிடுங்கள்.

தினமும் காலையில் இரண்டு ஆர்க்கு பச்சைக் கறிவேப்பிலையை அப்படியே மென்று தின்னுங்கள். அது இளநரை, கூந்தல் உதிர்வு போன்றவற்றை சரி செய்து, கரு கருவென வளர வழி செய்யும்.

கூடியவரைக்கும் தலைக்கு ஷhம்பூ போடுவதைத் தவிர்க்க வேண்டும். சுத்த மான சீயக்காயுடன் நெல்லி முள்ளி, காய்ந்த எலுமிச்சை தோல், வெந்தயம், பூந்திக் கொட்டை போன்றவற்றைச் சேர்த்துக் காய வைத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இது கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மட்டு மின்றி, உடலையும் குளிர்ச்சியாக வைக்கும்.

வாரம் ஒரு முறையாவது தலைக்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

கரிசலாங்கண்ணிக் கீரையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் அடர்த்தி யாகவும், கருகருவெனவும் வளரும்.

தலை நரைத்து விட்டதை மறைக்க ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிpக்கை. ஹேர்டை உபயோகிப்பவர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே கூடியவரைக்கும் கெமிக்கல் டையைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரித்து போடப்படும் மருதாணிக் கலவையால் டை போடவும். அதனால் கூந்தலுக்கு எந்தவிதப் பக்க விளைவும் வராது.

கூந்தலை அழகுப்படுத்துவதற்காக ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் கூந்தல் இயற்கையாக எப்படி இருக்கிறதோ, அப்படியே விட்டு விடுங்கள். அது நீளமாக, மெலிந்து இருப்பதால் செயற்கையாக சுருட்டையாக்கிக் கொள்வதோ, சுருட்டையான கூந்தலை நேராக்கிக் கொள்வதையோ செய்ய வேண்டாம்.

Back to  Tips  Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in