மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது

Image



அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல் விருதானது நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் (Andy Beshear) இதற்கான அதிகாரப்பூர்வ விருதில் கையெழுத்திட்டுள்ளார்.

கென்டக்கி கர்னல் விருதானது சமூகம், மாநிலம் அல்லது தேசத்திற்கு சேவையாற்றிய தனிநபரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அனைத்து விதங்களிலும் தந்து சிறப்பாக சாதனை புரிந்தவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதறக்காக கென்டக்கி ஆளுநரால் வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். கென்டக்கி மாகாணம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்டு ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மாலத்தீவில் சேவையாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனுக்கும் இவ்விருது வழங்கப்படுள்ளது.

யார் இந்த ஹிம்மத் அஹ்மத் ஹூசைன்?

தமிழகத்தின் கன்னியாக்குமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஹிம்மத் அஹ்மத் ஹூஸைன், இந்தியா-மாலதீவுகள் நட்புறவு கழகத்தைத் மாலத்தீவில் நிறுவி அதன் மூலம் இந்தியா-மாலதீவுகளின் உறவுகளுக்காக பல நிலைகளில் பாடுபட்டுள்ளார், மலதீவுவாழ் இந்தியர்களின் நலங்களில் அக்கறையுடன் மாலதீவு அரசு மற்றும் இந்திய தூதரத்துடன் இணைந்து பணியாற்றி சேவைகள் செய்துள்ளார், தனது கௌரவ துணைநிலை துணைதூதர் பொறுப்பின் மூலம் நெதர்லாந்து நாட்டிலிருந்து மாலத்தீவு நாட்டிற்கு முக்கியமான உதவிகளை செய்ய உந்துசக்தியாக இருந்து செயல்பட்டுள்ளார், இவருடைய அனைத்து சேவைகளையும் இந்திய தூதரகம், நெதர்லாந்து தூதரகம் மற்றும் மாலதீவு அரசு பலமுறை பாராட்டியிருக்கிறது. சர்வதேச உறவுகளுக்காக இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் யுனிவர்சிட்டி ஆப் சுவாகிலியால் வழ வழங்கப்பட்டது.

தான் இந்தியாவில் வாழும் இந்த காலத்திலும் கொரோனா நேரத்தில் மாலத்தீவில் சிக்கித் தவித்த தமிழக மக்களுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளுடன் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை தனது கடமையென நினைத்து சேவை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது