குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

Image



குவைத் :குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை குவைத் நேரப்படி 6 மணிக்கு நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கை என்னும் பட்டாம்பூச்சி என்ற தலைப்பில் கலக்கல் காமெடி பேச்சாளர் மதுரை முத்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். கொரோனா பாதிப்புள்ள இந்த சூழ்நிலையில் அனைவரும் தங்களை மறந்து மனம் விட்டு சிரிக்க, சிந்திக்க பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூம் காணொலி வழியாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் பயனாளர் எண் : 848 1924 5098 கடவுச் சொல் : jmcak என்ற இணைப்பில் இணையலாம்.