அஜ்மானில் நடந்த ரத்ததான முகாம்

Image



அஜ்மான் : அஜ்மான் கோலாலம்போ நண்பர்கள் அமைப்பு, அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறையுடன் இணைந்து சிறப்பு ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முகாம் அஜ்மானின் லூலூ ஹைபர் மார்க்கெட் அருகில் நடத்தப்பட்டது. 10 வது முறையாக இந்த முகாமுக்கு கோலாலம்போ நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.

கொரோனா பாதிப்பு காலத்தில் ரத்தத்தின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், எகிப்து, சூடான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவவர்களும் இந்த ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

உயிர்காக்க உதவும் இந்த ரத்ததான முகாமில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.