ஜூன் 4, அபுதாபிஅய்மான் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்

Image



அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கம், LLH மருத்துவமனையுடன் இணைந் து 04.06.2021 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச மருத்துவ முகாம் எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள Mezzanine Floor-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு சேவைக்கான Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் வழங்க உள்ளது. தாங்கள் ஒவ்வொருவரும் தங்களின் விபரங்களை பதிவு செய்து மருத்துவ மனை சலுகை அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விசிட் விசாவில் இருப்பவர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும் தேவையுடையவர்கள் /விடுபட்டவர்கள் இந்த Privilege Fast Service கார்டை பெறுவதற்கு கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக பதிவு செய்பவர்களுக்கு அடுத்த முறை அட்டை வழங்கப்படும்.

https://form.jotform.com/211263292599058

Privilege Fast Service card

பயன்கள் பின்வருமாறு

1)கன்சல்டிங் கோ-பேமெண்ட் முற்றிலும் இலவசம் 2) ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுப்பதற்கான கோ-பேமெண்ட் முற்றிலும் இலவசம் 3) வருடந்திர ஃபுல் பாடி செக்கப் முற்றிலும் இலவசம் 4) இந்த வசதிகளை Privilege Fast Service card வைத்திருக்கக்கூடியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கார்டை அபுதாபியில் எலக்ட்ரா ரோட்டில் உள்ள LLH மருத்துவமனையிலும், முஸஃப்பா பகுதியிலே உள்ள LLH மருத்துவமனையிலும்,முஸப்ஃபா பகுதியிலே உள்ள LIFE CARE ஹாஸ்பிடலிலும் மற்றும் பனியாசில் உள்ள LIFE CARE ஹாஸ்பிடலிலும் மொத்தம் 4 மருத்துவ மனைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்

மேலும் விபரங்கள் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

050574 8716

0526269123

0553038066

0556081910