குவைத்தில் நடந்த கவி சம்மேளனம் நிகழ்ச்சி

Image



குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டியும், இந்தியா - குவைத் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டு உறவை கருத்தில் கொண்டும் உர்தூ மொழியில் சிறப்பு கவியரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கவிஞர் மற்றும் இளம் திறமையாளர்களின் கவித்திறனை கேட்டு வியந்தார். மேலும் உர்தூ மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கொரோனா பாதிப்பு சமயத்தில் இந்திய தூதரகத்துடன் இணைந்து இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் சிறப்பான சேவைகளை செய்து வந்ததை நினைவு கூர்ந்தார். .

இந்த கவியரங்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். இந்தியன் முஸ்லிம் அசோஷியன் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சி சிறப்புடன் காணொலி வழியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.