துபாயில் அமீரக வாழ் தோப்புத்துறை ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி

Image



துபாய் : துபாய் அல் மம்சார் பூங்காவில் அமீரக வாழ் தோப்புத்துறை ஜமாஅத் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் டாக்டர் ஒய். அக்பர் அலி தலைமை வகித்தார். அவரது தலைமையில் நடந்த கேக் வெட்டும் நிகழ்வில் ஆரிஃபா குழுமத்தின் தலைவர் டாக்டர் சுல்தானுல் ஆரிஃபின், காப்பாளர் ஜே.பி. ஜமால் முஹைதீன், செயலாளர் எஸ்.நஜுமுதீன், பொருளாளர் இக்பால், ஒன்று கூடல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜே. அவுலியா முஹம்மது, மற்றும் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பெண்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர்கள் முனைவர் பீ.மு. மன்சூர், முனைவர் பி.என்.பி. முஹம்மது சஹாபுதீன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

மேலும் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வினாடி வினா, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. மேஜிக் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

மதிய உணவாக தோப்புத்துறையின் பாரம்பரிய உணவான அஞ்சு கறி சோறு வழங்கப்பட்டது. துபாய் அல் நூர் கிளினிக்கின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.