பார்வையற்ற மாணவருக்கு உலக சாதனைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

Image



துபாய் : அமீரக பிரமுகர் அப்துல் ஹாதி அவர்களின் மகனார் ஈசா அப்துல் ஹாதி அவர்களுக்கு திருமறை குர் ஆனை அதிக நேரம் ஓதிய மாற்றுத்திறனாளி குழந்தை என்ற தலைப்பில் உலக சாதனைக்கான பாராட்டு கேடயமும் ,சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி 27-01-2023 அன்று துபாய் ரமதா பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.

ஐன்ஸ்டீன் உலக சாதனை என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, கோவை அப்துல் அஜீஸ் பாகவி, முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், மன நல ஆலோசகர் ஃபஜிலா ஆசாத, ஊடகவியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்,

ஈசா அப்துல் ஹாதி அவர்கள் ஒரு மாற்று திறனாளி குழந்தையாக இருந்த போதும் அவர் திருமறை குர்ஆனை சரளமாக பல்வேறு உலக பிரசித்தி பெற்ற இமாம்கள் போன்று ஓதியது அனைவரையும் கண்கலங்க செய்தது. குழந்தையை பாராட்டி பேசிய பல்வேறு விருந்தினர்களும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அத்தகைய நெகிழ்ச்சியான தருணத்தில் திருமறை குர் ஆனை அதிக நேரம் ஓதிய மாற்றுத்திறனாளி குழந்தை என்ற உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக், மேலாளர் மோனிகா ஆகியோர் வழங்கினர்.

எல்லாம் வல்ல இறைவன் அந்த குழந்தையின் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்க வேண்டும் என அனைவரும் பிராத்தனை செய்தனர் மேலும்

பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் அவர்கள் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் டாக்டர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.