ஜாதக அமைப்புகள்

Image

வெளிநாடு செல்லும் வாய்ப்பு பெற „ ஜாதகர் சர ராசியில் பிறந்திருக்க வேண்டும். ஜாதகர் லக்னாதிபதியும், ராசி யாதிபதியும் சரராசியில் பலம் பெற்று 9 மற்றும் 12-ம் வீட்டு அதிபதிகள் பலம் பெற்று 10-ம் வீட்டோடு தொடர்பு ஏற்பட்டால் இந்த ஜாதகர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசு வேலை நிரந்தரமாக கிடைக்க „ பொதுவாக சூயன், குரு, செவ் வாய் இம்மூவரும் அரசு வேலை கிடைப்பதற்கு காரணகர்த்தாக்கள். இவர்களில் ஒருவன் லக்னாதிபதியாகவும், மற்றவர் 10-ம் வீட்டோனாகவும் இருந்து மூவரில் இருவருக்காவது அதிகப்படியான பலன் அமையப் பெற்றால் ஜாதகருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. லாட்டரியில் பரிசு கிடைக்கும் அமைப்பு „ ஜாதகரின் ஜாதகத்தில் தனாதிபதி உச்சம், அல்லது ஆட்சி பெற்று இருக்க வேண்டும். தனகாரனாகிய குரு லாபஸ் தானத்தில் இருக்க வேண்டும். அல்லது சந்தி ரனோடு கேந்திர கோணங்களில் இருந்தால் இவர்களுடைய திசை, புக்தி, அந்தரங்கள் நடக்கும்போது திடீர் அதிர்ஷட வாய்ப்புகள், லாட்டரியில் பரிசு வாய்ப்புகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு „ ஜாதகருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம் வீட்டுக்குரிய கிரகம் ஆண் கிரகமாகி அந்த கிரகம், கேந்திர திhp கோணங்களில் ஆட்சி பெற்று லக்னாதிபதியுடன் நட்புபெற வேண்டும். மேலும் குருவானவர் கேந்திர திhp கோணங்களில் 2 அல்லது 11-ம் வீட்டி ல் இருப்பதுடன் ராகு, கேது பார்வை இல்லாமல் இருந்தால் நிச்சயம் குழந் தை பாக்கியம் கிட்டும். சினிமா, டிவிக்களில் வாய்ப்பு கிடைக்க „ ஜாதகருடைய ஜாதகத்தில் சுக்ரன், குரு, ராகு இம்மூவரும் தொழில் ஸ்தான த்தில் தொடர்பு ஏற்பட்டு இருக்குமேயானால் அவருக்கு நடிப்பு, இயக்கம், போன்ற துறைகளில் வாய்ப்பு ஏற்படும்.