முக்கிய வாஸ்து குறிப்புகள்

Image


வீடுகட்ட தொடங்குவதற்கு முன் வாஸ்து நாள் பார்த்து பூமி பூஜை செய்தால் எந்த தடங்கல், பிரச்சினைகள் இல்லாமல் வீடு கட்டி முடிக்கலாம்.

வீடுகட்ட இடம் வாங்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்கும் இடம் வாங்கினால் சிறப்பு.

வீட்டின் தலைவாசல் வடக்கு திசையை நோக்கி இருப்பது 90% எல்லா ராசிக்கார்களுக்கும் சிறப்பு. பிரச்சினைகள் இல்லாமல் மகாலட்சுமியின் அருளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

ஆனால் வீட்டின் தலைவாசல் கிழக்கு திசையை நோக்கி அமைவது எல்லா ராசிக்கார்க்ளுக்கும் ஒத்து போகாது. சில ராசிகாரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரும்.

வீட்டின் தலைவாசல் மேற்கு திசையை நோக்கி அமைவது இன்பம், துன்பம் எல்லாம் சேர்ந்து அமையும்.

வீட்டின் தலைவாசல் தெற்கு திசையை நோக்கி அமைந்தால் ஆண் வாரிசு இல்லாமல் பெண் வாரிசு அமையும்.

வீட்டின் படிகள் அமைப்பது ஒற்றை இலக்கத்தில் இருக்கவேண்டும். இரட்டை இலக்கத்தில் அமைந்தால் லாபம் இருக்காது.

வீட்டில் கிணறு, தொட்டிகள் (sump) வடக்கிழக்கு திசையில் அமைந்தால் தலைமுறைகள் பெருகும்.