நுண்ணுயிர் ரகசியங்கள்

Image



நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் உங்கள் உடலுக்குள் ஒரு குழுவாக பல நுண்ணியிர்கள் வேலை செய்துகொண்டு இருக்கின்றன. அவை ஒன்று நம் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இது குடலில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்முறை ஆகும்.

ஒரு முழு உடல் அமைப்பு எக்கோ சிஸ்டம் (eco system)

இவை பாக்டீரியா வைரஸ்கள் மற்றும் சிறிய அளவு பூஞ்சை( fungi) புரோடோசோவா, எனப்படும் ஒற்றைச் செல் உயிரினங்களால் ஆனவை. இந்த பாக்டீரியாக்கள் சராசரியாக 500 விதமான இனங்களைக் கொண்டது மொத்தத்தில் 100 டிரில்லியன் நுண்ணுயிர்கள் வரை உடலில் இருக்கும் மற்றும் 3 கிலோ எடை வரை இவை பெருகும்.

அவற்றின் இருப்பு மோசமானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் சமச்சீரான அளவு பாக்டீரியாக்கள் உடலில் வாழ்வது நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கே.

இதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. மேலும் உங்கள் உடலின் குடல் நுண்ணுயிர் பாக்டீரியாக்களின் சமநிலையை புரிந்து கொள்வது உடலுக்கு அப்பால் நம் ஆரோக்கியத்தை திறப்பதற்கான திறவுகோலாக இருக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இரண்டில் ஒரு பங்கு குடலில் வாழும் நுண்ணுயிர்கள்ஆகும்.

நோய்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பதில் குடல் நுண்ணுயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Image


உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நட்பு பொருள் எவை எவற்றை தாக்க வேண்டும் என்பதையும் குடல் நுண்ணுயிர்கள் கற்பிக்கின்றன. நாம் இதுவரை நினைத்ததை விட குடல் நுண்ணுயிர்கள் நமது ஆரோக்கியத்தில் அதிக பங்கு வகிக்கிறது என்பதை ஆராய்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு ஆரோக்கியமற்ற குடல் அடிக்கடி இருமல் மற்றும் சளி ,தலைவலி ,மூடுபனி மூளை ,எடை அதிகரிப்பு ,கவலை, மற்றும் மனச்சோர்வு , தோல் நோய்கள் மற்றும் முகப்பரு,மன உளைச்சல், உயர்வுகள்,மாதவிடாய்முன் பதற்றம்,பிற இரசாயனமாற்றங்கள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

நல்ல நுண்ணுயிர்கள் மற்றும் கெட்ட நுண்ணுயிர்கள் இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பதன் பிரதிபலிப்பை நாம் நம் உடலின் ஆரோக்கியத்தில் காணலாம்.

உங்கள் வாழ்க்கை முழுவதையும் குடலிலுள்ள சமச்சீரான நிலை தான் நிர்ணயம் செய்கின்றது .குடல் மைக்ரோபயோட்டா ஆரோக்கியமற்ற நோய்க்கிருமி பாக்டீரியா, வைரஸ் ,பூஞ்சைகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் .

ஆனால் ஏற்றத்தாழ்வு நிலை வீக்கம் மற்றும் நாட்பட்ட நோய்க்கு வழிவகுக்கும் முக்கியமாக உங்களுக்குள் இருக்கும் இந்த சுற்றுச்சூழல் அமைப்பு உங்கள் சுவரை கவனித்து சரி செய்கிறது நல்ல குடல் நுண்ணுயிர்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

முக்கியமாக உங்கள் குடலுக்குள் இருக்கும் இந்த சுற்று சுவர் அமைப்பு உங்கள் குடல் சுவரை கவனித்து சரி செய்கிறது .

நல்ல குடல் நுண்ணுயிர்கள் குறைப்பு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் கடந்த பத்து வருடங்களில் 2000 மனிதர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இவர்கள் அனைவருக்கும் குடலில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களாதலால்அதனால் இவர்களுக்கு உடல் பருமன் நீரழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Dvatest அல்லது stool test போன்ற சோதனை மூலம் உங்கள் குடல் நுண்ணுயிர்களின் தனித்துவமான மருத்துவ நுண்ணறிவைப் பெறலாம்.

இதை அறிவதன் மூலம் உடலில் மறைந்திருக்கும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும் ஒரு நுண்ணுயிரில் இருக்கும் பல வகையான பாக்டீரியாக்கள் ( strains of bactreia) அதாவது பாக்டீரியாக்களின் விகாரங்கள் எனக்கூறலாம் .

இதில் முக்கியமானவையாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் (bacteriods),மற்றும்லாக்டோபாஸிஸ் (laeto bacillus) மற்றும் பிஃபிடஸ்(bifidus) ஆகும்.

இதன் விகாரங்களின் அளவுகோலைவைத்து உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான செயல்பாடுகளை உணரமுடியும் ..

சோதனை செய்து பார்ப்பதில் பயன்

இதுபோன்ற சோதனைகளை செய்து பார்ப்பதன் மூலம் குறைகளை கண்டுபிடித்து Yeastஇன் அதிக வளர்ச்சியை தடைபடுத்த முடியும். (Yeast) ஈஸ்ட் அதிகவளர்ச்சி இருந்தால் நல்ல பாக்டீனியாக்களின் பெருக்கம் தடைப்படும்.

இதனூடாக வயிற்று வலி வயிற்றில் வீக்கம் தலைவலி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும்.

.லாக்கோசியஸ் என்னும் நட்பு பாக்டீரியாக்கள் தயிர் மற்றும் புளித்த உணவுகளில் இருப்பதைக் காணலாம்.

இந்தவகை பாக்டீரியாக்கள் வாங்கிக் ( lactic) அமிலத்தை உருவாக்குகிறது.

இது கெட்ட பாக்டீரியாக்கள் குடலை ஆக்கிரமிப்பதை தடுக்கிறது.பிஃபிபாஸ் பாக்டீரியா எனப்படும் இன்னொரு வகை நட்பு பாக்டீரியாக்கள் புரோபயாக்டிக் இல் காணப்படும் காணப்படும். இந்த வகை பாக்டீரியாக்கள் விட்டமின்களை உடலில் உறிஞ்ச உதவுகிறது. உணவை உடைத்து உடலுக்குள் செலுத்துவதுடன் கெட்ட பாக்டீரியாக்களை அவற்றை உண்டு விடாமல் பாதுகாக்கிறது.

சில ஆய்வுகளின் முடிவில் பிஃபிபாஸ் பாக்டீரியா பெரிய அளவு கூடுதலாக இருந்தால் IBS அதாவது Irritable Bowl Syndnome அறிகுறிகள்மேம்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் (probiotic) ப்ரிபயோட்டிக் எனப்படும் உணவு.

இவை பாக்டீரியாக்களின் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. நமது உடல் சீராக இயங்க பாக்டீரியாக்கள் எப்படி அவசியமோ அதேபோல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் prebiotic தேவைப்படுகிறது இவை இனூஸிஸ் (eniulin) என்னும் உணவுகளில் எளிதாக கிடைக்கிறது.

உங்கள் பாக்டீரியாவை எப்படி அதிகரிப்பது நல்ல உணவுப் பழக்கம் உடற்பயிற்சி மற்றும் நிம்மதியான உறக்கம் மூலம் பாக்டீரியாக்களை அதிகரிக்கலாம் .

Image


வானவில் உணவு உட்கொள்வோம்

தாவர ராஜ்ஜியத்தில் நமக்கு இயற்கை அளித்திருக்கும் கூடிய பல வண்ண காய்களையும் கனிகளையும் உட்கொள்வதினால் இதனை நாம் பாதுகாக்கலாம் .

இவை(phytonutrients) பைட்டோ நியூட்ரிசன்ஸ் எனவும் கூறலாம். இது சக்தி வாய்ந்த குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.

பலவிதமான தாவர சேர்மங்களை சேர்ப்பதன் மூலம் மிகவும் மாறுபட்ட குடல் நுண்ணுயிர்களையும் ஊக்குவிக்கறீர்கள்.

தினமும் ப.ரீபயாட்டிக் உணவுகளை ஆர்வமாக உட்கொள்ளுங்கள்.----

Image


ப்ரீபயோட்டிக் என்பது ஜீரணிக்க முடியாத கார்போஹைட்ரேட் மூலக்கூறுகள். அவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வளர்கின்றன மற்றும் தூண்டுகின்றன அதே நேரத்தில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைவாக ஊக்குவிக்கின்றன .

--ப்ரிபயோட்டிக் அதிகம் உள்ள உணவுகள்.----

அஸ்பாரகஸ்,அவகாடோ கத்தரிக்காய் , பூண்டு, வாழைப்பழம் , பருப்பு வகைகள் ,பீட்ரூட் வெங்காயம் ,லீக்ஸ், ஓட்ஸ், பால் பொருட்கள் (ஒத்துக் கொள்ளும் பட்சத்தில்) இனிப்பு கிழங்குகள் போன்றவை .

--புளித்து உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்-----

(Kefiya ) கெபஃபியா பால் இல்லாமல் தயாரிக்கும் சோயா சேர்ந்த மோர் வகை உணவு .

சார்க்கிராட் (sauercet) கிம்ஸி (kinchi) என்னும் கொரிய வகை உணவு மற்றும் கம்புசா (kambucha) எனும் புளித்து டீ வகை மற்றும் மிசோ என்னும்ஜப்பானியபுளித்த சோயா வகை போன்றன. இவை அனைத்திற்கும் மேல் நம்நாட்டு இட்லி , ஆப்பம் போன்றவை இந்தவகை உணவு முன்செரிமானம் ஆனால் நுண்ணுயிரை மேம்படுத்தும் நேரடி நன்மை பயக்கும் பாக்டீரியா விகாரங்களைக் கொண்டுள்ளது .

புளிக்கவைத்த காய்கறிகள் கொரிய உணவுகளிலும் காணப்படுகிறது.

மாவு சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்போம். பீன்ஸ் ,அவித்த மற்றும் குளிர்ந்த தானியங்கள், பச்சை வாழை, வேகவைத்த உருளைக் கிழங்குகள் ,கொட்டைகள், மற்றும் விதைகள் அனைத்தும் நல்ல உற்பத்தி சாதனங்கள்.

உணவுகளை சிறுகுடலில் முழுமையாக செரிமானம் செய்ய விடாமல் பெருங்கடலை அடையச் செய்து அங்கே வாழும் பாக்டீரியாக்களுக்கு உணவு அளித்து பின்பு செரிமானம் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குடல் நுண்ணியிர்கள் உருவாகும்.

குடல்கழிவுகளை வழக்கப் படுத்திக்கொள்ள ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை பயன்படுத்துங்கள் .

காலை உணவின் போது ஒரு மேஜைக்கரண்டி ஆளி மற்றும் சியா விதைகளை தயிரில் அல்லது பாலில் சேர்த்து உண்ணலாம் இவற்றில் உள்ள ஒமேகா3 இதயத்திற்கும் மூளைக்கும் வலுவை அளிக்கிறது.

இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆரோக்கியமாக இருங்கள் உடற்பயிற்சி என்பது தசைகளுக்கும் எலும்புகளுக்கும் இதயத்திற்கும் வலு அளிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

Image


இத்துடன் உடல் நுண்ணுயிர் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக விளங்குகிறது .

உடற்பயிற்சி வயிற்றுக்குழி, கடல்களுக்குஇரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மற்றும் செரிமான இயக்கத்தைத் தூண்டுகிறது. உடலுக்கு தேவையான அளவு . ஊக்கத்தை கொடுக்கிறது.

இதனால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துகிறது

- மருந்தியலாளர் ஜுனா சசிகரன்