எல்லை மீறுகிறதா பட்ஜெட்....?

Image

என்னதான் சம்பாதித்தாலும் வரவுக்கு மீறி செலவு எகிறுகிறதா? தவறு உங்களுடையதுதான். உங்கள் வீட்டு வரவுக்கும், செலவுக்கும் ஏற்றபடி சரியான பட்ஜெட் போடத் தெரிந்து, அதற்கேற்ப நடந்து கொண்டால் இதை சமாளிக் கலாம். உங்கள் வீட்டில் உள்ள எல்லோரது வருமானத்தையும் மொத்தமாகக் கணக்கிடுங்கள். மாதச் சம்பளம் தவிர பிற வருமானங்களையும் கணக்கிடுங்கள். மாதாந்திரச் செலவு களுக்கான தொகையைத் தனியே எடுத்து வையுங்கள். அது தவிர வருடாந்திரத் தேவைகளுக்காகவும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தனியே ஒதுக்குங்கள். உங்கள் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக் கிறதா? அப்படியானால் வருமானம் போதவில்லை என்று குறைபட்டுக்கொள்ளாதீர்கள். வரவுக்கு மீறி செலவு செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஷப்பிங் செல்லும் போது என்ன வாங்கப் போகிறேhம் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, பட்டியல் போட்டுக் கொண்டு, அதற்கேற்பவே பணம் எடுத்துச் செல்லுங்கள். பட்டியலில் இல்லாத பொருட்களை வாங்க நினைக்க வேண்டாம். அடிக்கடி ஹேhட்டல்களிலும், வெளியிடங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதில் வீட்டிலேயே தயாhpத்து சாப்பிடுவதே சிக்கனமானது. பாட்டில் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். அவை செலவும் அதிகம். உடல்நலத்துக்கும் கேடு. அதற்குப் பதிலாக பழங்களை வாங்கி வீட்டிலேயே தயாhpத்து சாப்பிடுங்கள். சோம்பேறித் தனம் காரணமாகவும், ஆடம்பரம் காரணமாகவும் செய்யும் சில செலவுகளைக் குறைக் கவும். உதாரணத்திற்கு துணிகளை லாண்டாpக்குப் போடுவதைத் தவிர்த்து வீட்டிலேயே துவைக்கலாம். வேலைக்குப் போகாத பெண்கள் வீட்டு வேலைகளைத் தானே செய்யலாம். ஆள் வைக்கத் தேவையில்லை. விடுமுறை தினம் என்றhலே உடனே எங்கேயாவது தியேட்டருக்கோ, ஹேhட்டலுக்கோ தான் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள். வீட்டிலேயே எல்லோரும் கூடி ஏதேனும் வித்தியாசமான கேளிக்கைகளில் ஈடுபடலாம். குடும்ப உறவுகளும் பலப்படும். வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்களை, உதாரணத்திற்கு மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்றவற்றை பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் போடப்படும் சிறப்புத் தள்ளுபடிகளின் போது வாங்குங்கள். பணமும் மிச்சமாகும். இலவசப் பொருட்களும் கிடைக்கும். கூடியவரையில் எந்தப் பொருளையும் சுலபத் தவணை முறையில் வாங்குவதைத் தவிர்க்கவும். குறிப் பிட்ட பொருளை வாங்க நினைப்பதற்கு முன்பே, அதற்காக சேமியுங்கள். மொத்தமாகக் கொடுத்து வாங்கு வது தான் உங்களுக்கு மலிவு. வட்டி விகிதம் குறைவா கவோ அல்லது வட்டியே கிடையாது என்று சொன்னால் கூட தவணையில் வாங்க வேண்டாம். ஆடம்பரத்திற்காக கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ள வேண்டாம். அது உங்களை அளவுக்கு மீறி செலவு செய்யவே தூண்டும். கடன் வாங்கும் பழக்கத்தை எக்காரணம் கொண்டும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதை ஏதோ பொpய தவறhக நினைத்துக்கொள்ளுங்கள். கடன் வாங்காமல் காலத்தைத் தள்ளவே முடியாது என்ற நிலையில் ஒரு கடனை அடைக்கும் வரை அடுத்த கடனை வாங்காதீர்கள். மாதாமாதம் பட்ஜெட் போடும் போது கடனை அடைக்கவென்றும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்கள். வட்டிதான் கொடுக்கிறேhமே என்ற எண்ணத்திலோ, நம்மை நம்பிக் கொடுக்கிறhர்கள் என்ற எண்ணத்திலோ அதிகத் தொகையைக் கடன் வாங்க வேண்டாம். உங்களிடம் வண்டி இருக்கும் போது, குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்பவென தனியே வேன், என செலவு செய்யாதீர்கள். உங்கள் வண்டிக்காகும் போக்கு வரத்துச் செலவைவிட அதிக செலவையே வைக்கும். மாத வருமானம் தவிர வேறு வழிகளில் வரும் பணத்தையும், மொத்தமாகக் கிடைக்கும் பணத்தையும் தனியே போட்டு வையுங்கள். அவற்றை நினைத்த போது எடுக்க முடியாதபடி எஃப்.டியில் போட்டு வையுங்கள். .