சிகரெட் சீக்ரெட்
ஒரு சிகரெட்டில் நிகோடின் உட்பட 4000 ரசாயனப் பொருட்கள் உள்ளன. கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்ற 9 வகை வாயுக்களும், 250 வகையான நுண்ணிய துகள்களும் உள்ளன. சிகரெட்டின் முனையிலுள்ள வெப்பத்தின் அளவு 1600 டிகிhp பாரான் ஹீட்டாகும். தண்ணீhpன் கொதி நிலை 212 டிகிhp பாரன் ஹீட்டுடன் ஒப்பிடும்போது இது அபாயகரமானது ஆகும். சிகரெட் குடிப்பவர்கள் மறைமுகமாக, சிகரெட் குடிக்காதவர்களையும் பாதிக்கிறhர்கள். இதற்கு பாசிவ் ஸ்மோக்கிங் என்று பெயர். ஒரு கர்ப்பிணிப் பெண் சிகரெட் புகையை சுவாசிக்க நோpட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். மொத்த கேன்சர் நோயாளிகளில் 19 சதவிகிதம் பேர் நுரையீரல் கேன்சர் வந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிகரெட் பிhpயர்கள் என்பது வருத்தத்திற்கு உhpய செய்தியாகும். சிகரெட் பிடிப்பவர்களின் விந்தில் ஆண் அணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. நாக்கினில் இருக்கிற சுவை அரும்புகளை சிகரெட் புகையானது பாதித்து நாளடைவில் சுவையை உணர முடியாமல் செய்துவிடும். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் ரத்த அழுத்தமானது சீரான நிலை யில் இருக்க வேண்டும். சிகரெட் புகைப்பவர்களுக்கு ரத்;த அழுத்தமானது இந்த அளவைவிட அதிகமாகவே இருக்கும். சிகரெட் புகைப்பவர்களுக்கு சுவாசிக்கும் திறனும் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அனைவரும் வேக வேகமாக சுவாசிப்பார்கள். இதனால் இவர் களது நுரையீரல் வெகு சீக்கிரம் பாதிப்பு அடைந்து விடுகிறது. உங்களுக்கு சிகரெட் பழக்கம் இருக்கிறதா? சிகரெட் புகைப்பதை நிறுத்த, நாள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள்.