கொரோனா
கொரோனாவே!
யார் மீது உனக்கு கோபம்?
பார் மீது ஏனிந்த சாபம்?
பள்ளிகளை மூட வைத்தாய்
தள்ளித் தள்ளி ஓட வைத்தாய்
என் வீட்டை வாட வைத்தாய்
உன் பாட்டைப் பாட வைத்தாய்
இயல்பான வாழ்க்கை முறை
இழந்துவிட்டோம் இன்று வரை
கொண்டு வந்தாய் புதிய சிறை
கண்டு கொண்டோம் எங்கள் குறை
முகத்துக்கு கவசம் அணி
ஒரு மீட்டர் தூரம் இனி
கை கழுவும் பாணி தனி
கை கொடுக்கும் காலம் இனி
உறவெல்லாம் ஏக்கத்தில்
வரவெல்லாம் தேக்கத்தில்
இரவெல்லாம் தாக்கத்தில்
இயங்கிடுவோம் ஊக்கத்தில்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி வாழ ஏங்குகிறோம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண்டவனை வேண்டுகிறோம்!
முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர்