ஈரம்

Image



"இந்து...இது தான் சுஜித். நான் அடிகடி சொல்வேனே...என் கம்பெனியோட client office ல work பண்றான்னு...நம்ம கூட இவன் தான் ரூம் ஷேர் பண்ண போறான்" என்று புன்னகையுடன் அறிமுகம் செய்தான் ரவி.

அடிக்கடி சுஜித்தை பற்றி ரவி பேசியதுண்டு. ஆனால் முதல் முறையாக நேரில் இப்போது தான் பார்க்கிறாள். நல்ல உயரம். சற்று கடுமையான முகம். பார்ப்பதற்க்கு ஆர்மியில் இருப்பவன் போல் தோன்றினான். சுஜித் கடமைக்காக இந்துவை பார்த்து சிரித்து வைத்தான்.

"அண்ணா...அப்போ நாளைக்கு பார்க்கலாம். நான் என் திங்ஸ்லாம் இங்க கொண்டு வர அரேஞ் பண்ணனும் என்று வாசலோடு கை குலுக்கி விட்டு சென்று விட்டான்.

அவன் போனதும்...இந்து கோபமாக ரவியை முரைத்தாள். "ரூம் ஷேரிங் familyயோட இருக்குற மாதிரி பார்த்திருக்க கூடாதா?" என்று கடுப்பாக கேட்டாள்.

"எப்படியிருந்தா என்ன இந்தூ?" இன்னும் ரெண்டு மாசத்துல India போக போற...அதுக்கபுறம் ஒரு வருஷத்துக்கு நான் மட்டும் தானே" என்று பேசிக் கொண்டே laptop ஐ ஆன் செய்தான்.

"நீ சீக்கிரம் படு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு காலைல ரெண்டு பேரும் ஓடனும்" என்றான்.

"Table ல Horlicks கலந்து வெச்சுருக்கேன். மறந்துடாம குடிச்சுட்டு படுங்க" என்றாள்.

"ம் சரி"

"சொல்ல மறந்துட்டேன்...நாளைக்கு evening எனக்கு check up இருக்கு ரவி. நேரா hospital வந்துடுறீங்களா" என்று அவனை பாவமாக கேட்டாள்.

"என் வேலை எப்டீனே சொல்ல முடியாது. நீ check up முடிச்சுட்டு room க்கு திரும்பிடு" என்று laptopல்லிருந்து கண்களை எடுக்காமலே பதில் அளித்தான்.

இந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ரவியை குறை கூறுவதற்கில்லை. அவன் வேலை அப்படி. Sales என்பதால்...meeting and travelling தான் அவன் பிழைப்பே. மெதுவாக யோசனையுடன் கட்டிலில் சாய்ந்தாள். வயிற்றை தடவி பார்த்தாள். இது ஐந்தாம் மாதம். அவர்களுக்கு precious baby. நான்கு வருடம் கழித்து உண்டான குழந்தை. இன்னும் இரண்டு மாதத்தில் சென்னைக்கு flight ஏறி விடுவாள். அது வரை எப்படியாவது நாட்களை தள்ளி விட வேண்டும். சென்னைக்கு சென்றால் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள அவள் குடும்பம் காத்திருக்கிறது.

தற்போது குடிபுகுந்துள்ள flat இந்துவிற்கு மிகவும் பிடித்திருந்தது. பெரிய single door entrance. நுழைந்ததும் ஒரு சிறிய வெற்றிடம். அதன் வலபுறம் ஒரு சிறிய portion. அதில் சுஜித். இடதுபுறம் இவர்களது portion சற்று பெரியதாக அமைந்திருந்தது. Entrance சின் நேர் எதிரே common kitchen. இரண்டு பேர் சமையல் செய்வதற்கு வசதியாக தனி தனி மேடைகள். இது எல்லாம் விட முக்கியமான காரணம் இந்துவின் ஆபிசிற்கும் ரூமிற்கும் அதிக தூரம் இல்லை. ஒரே ஒரு குறை தான். Ground floor மற்றும் first floor கொண்ட flat அது. ஆனால் lift கிடையாது.

ஆபிஸ் பக்கம் என்பதால்...தினமும் மாலை சீக்கிரம் வந்து விடுவாள். அவள் வந்த சிறிது நேரத்துலேயே சுஜித் வந்து விடுவான். ஆனால் ரவி வருவதற்கு எப்பொழுதும் ஒன்பது பத்து மணி என்று லேட் ஆகிவிடும்.

இந்து ஏழு மணியிலிருந்தே மெதுவாக kitchen ல் வேலையை துவக்குவாள். சுஜித் தினமும் coffee maker ல் தனக்கு coffee போட்டு கொண்டு room ல் அடைந்து விடுவான். அதோடு noodles, bread roast இது போல் எதையாவது செய்வதற்க்கு மட்டும் தான் kitchen ஐ எட்டிப்பார்பான். இவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பாதி நாட்கள் room மை பூட்டிக்கொண்டு வெளில் போய் தான் சாப்பிடுவான். எப்பொழுதும் அவன் roomமினுள் எதாவது பாடல் ஒலித்து கொண்டே இருக்கும் அதுவும் பல மொழிகளில்.

ஒரு முறை அவன் kitchen ல் நிற்க்கும் போது கேட்டாள்.

"இது என்ன language பாட்டு?"

"Arabic" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு ரூமிற்குள் சென்று விட்டான். எது கேட்டாலும் ஒற்றை வார்தையில் தான் பதில் வரும். சரியான மண்ட கனம் பிடிச்சவனோ என்று மனதிற்குள் நினைத்து கொள்வாள்.

இந்து எப்பொழுதும் விடுமுறை நாளில் தான் ரூமை முழுவதுமாக சுத்தம் செய்வாள்.

"ரவி..."

Tv பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பி என்ன என்பது போல் பார்த்தான்.

"எப்பவும் நானே தான் அந்த common ஏரியாவ பெருக்கனுமா? உங்க room mate எதுவும் செய்ய மாட்டானா? அவன் அவ்ளோ பெரிய ஆளா?" என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபமாக கேட்டாள்.

ரவி உடனே எழுந்து அவள் வாயை தன் கையால் அவசரமாக மூடினான்.

"கத்தாதே இந்து. அவன் தப்பா நெனசுக்க போறான். அவன பத்தி ஒன்னும் தெரியாது உனக்கு. அவன் இங்க வந்து மூனு வருஷம் கூட ஆகல. அவ்ளோ fluent ஆ அரபிக் பேசுவான். நாம எட்டு வருஷமா இருக்கோம்...இன்னும் எட்டு வார்த்தை கூட தெரியாது. சின்ன வயசுல பெரிய post ல வேலை பார்க்குறான். திறமைசாலி. Dubai government staffs கிட்டலாம் நல்ல பழக்கம். Sharjah food ball club la இருக்கான்"...என்று மேலும் தொடர்ந்தவனை கையமர்த்தினாள்.

"நான் ஒன்னு கேட்டா...நீங்க ஒன்னு சொல்லுங்க. என்கிட்ட discuss பண்ணாம எதையாவது செஞ்சுட்டு என்ன கடுப்பேத்துறீங்க" என்று எரிந்து விழுந்தாள்.

"Oh shut up...அவன் கூட இருந்தா என் career improve ஆகும். உனக்கு எப்படி புரிய வைக்குறது? இங்க நம்ம ரெண்டு பேர் செலவ பாத்துகறதே problem ஆ இருக்கு. நீ திரும்பி குழந்தையோட வரும் போது கொஞ்சம் better ஆ இருக்க வேனாமா? என்று அதட்டினான்.

இந்து அமைதியானாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டது. சுஜித் நின்று கொண்டிருந்தான்.

" அண்ணா car ல bazaar போறேன். எதாவது வாங்கனும்னா கூட வாங்க" என்றான்.

"Five minutes சுஜி, வந்துட்டேன். நீ பார்க்கிங்ல wait பண்ணு" என்றான்.

"Door lock பண்ணிக்கோ இந்து" என்று கிளம்பினான்.

"ரவி..."என்று அவன் கையை பிடித்தாள்.

என்ன என்பது போல் பார்த்தான்

"Sorry" என்றாள்.

"லூசு சீக்கிரம் சாப்ட்டு rest எடு" என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.

சில சமயம் இந்து இரவில் நல்ல tiffin அல்லது சாப்பாடு செய்தால் உடனே ரவி கொஞ்சம் தட்டில் வைத்து கதவை தட்டி சுஜித்துக்கும் கொடுப்பான்.

"Thanks அண்ணா" என்று புன்னகையுடன் வாங்கி கொண்டு உடனே கதவை சாற்றிக் கொள்வான்.

"அவனுக்கு share பண்றது ரொம்ப முக்கியம் இப்போ"... என்று ரவியை கடிந்து கொள்வாள். "பாவம் இந்து. அவனுக்குலாம் வீட்டு சாப்பாடே கிடையாது. நாம கொடுத்தா தான் உண்டு" என்று ரவி ஆதங்க படுவான்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. பேச பழக ஒரு ஆள் இல்லாமல்...இவனை போய் குடி வைத்தாரே என்று நொந்து கொண்டாள் இந்து. சுஜித் ரோபோவை போல் போவான் வருவான். இவளும் உம்மென்று kitchenல் வேலை பார்க்க பழகிக் கொண்டாள்.

Flight ஏற இன்னும் ஐந்து நாட்கள் தான் இருந்தது. இந்துவிற்கு. மனதில் இனம் புரியாத சந்தோஷம்.

வழக்கம் போல் kitchen ல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அடி வயிற்றில் சுரீர் என்று வலி. கரண்டியால் கிண்டி கொண்டிருந்தவள் அப்படியே நின்றாள். கொஞ்சம் ஆஸ்வாசபடுத்திக் கொண்டு வேலையை தொடர்ந்த போது, மீண்டும் அந்த வலி...இம்முறை "அம்மா..." என்று வாய்விட்டு கத்திவிட்டாள். முகமெல்லாம் வியர்த்து விட்டது. சட்டென்று அடுப்பை அனைத்தாள். அடி வயிற்றை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டாள். மறுபடியும் சுரீர் என்ற அந்த வலி...இன்னும் கூடுதலாக...இப்போது அழத்துவங்கினாள். ஏதேச்சையாக வெளியே வந்த சுஜித் இவள் நின்ற கோலம் கண்டு அதிர்ந்தான். பதட்டமாக "என்னாச்சு" என்றவனிடம் "ரவி...ரவியை கால் பண்ணு please" என்று அரற்றினாள். வலியால் துடித்தாள். மின்னல் வேகத்தில் ரூமிற்குள் பாய்ந்து mobile லை எடுத்து ரவியை அழைத்தான்.

"எங்கே இருக்கீங்கண்ணா?"

"Abudhabi ல இருக்கேன் சுஜி...என்ன விஷயம்?"

ஆண்டவா...வேகமா car ல வந்தா கூட ஒன் அவர் ஆகுமே...சுஜித்திற்கு தலை சுற்றியது.

"Nothing...just a casual call...but come soon I'm waiting" என்று அவசரமாக phone ஐ வைத்தான்.

"பயபடாதீங்க மெதுவா வெளிய வாங்க hospital போலாம் என்றான்" அவளிடம்.

"முடியல...வலிக்குது...பயமாருக்கு" என்று அழுதாள். கண்களில் அருவியாக கண்ணீர் கொட்டியது.

"நான் சொல்றத கேலுங்க...panic ஆகாதீங்க...எந்த hospital?

" GMC" என்று அழுதாள்.

அடி வயிரை இரு கைகளால் பிடுத்து கொண்டு அழுது கொண்டே அடி மேல் அடி எடுத்து வைத்தவாரு போராடி வாசலை தாண்டி நின்றாள். அதற்கே பிராணன் போய் விட்டது.

சுஜித் car சாவியை எடுத்துக் கொண்டு கதவை அரைந்து சார்த்தினான்.

"உங்க health card எங்கே?"

"என் hand bagல"

"மீண்டும் கதவைத்திறந்து உள்ளே ஓடினான். அவள் handbag ஐ தன் தோளில் மாட்டிக்கொண்டான். கதவை சாற்றிவிட்டு தரும்பியவன் இந்துவின் உடையில் இரத்த கறைகளை கண்டு மேலும் பதட்டமானான்.

"என் குழந்தை...." என்று பயந்து அழுதாள். வலிக்குது என்று அரற்றினாள். செய்வதரியாது தவித்தான் சுஜித்.

Ambulance ஐ கூப்பிட்டால் அது வரும் வரை தாக்கு பிடிப்பாளா? மண்டைக்குள் கேள்விகள் ஓடியது....

சற்றும் அவள் எதிர் பார்க்காதவன்னம் அவளை அப்படியே அலேக்காக இரு கரம் கொண்டு தூக்கினான். விறு விறுவென்று படிகளில் இறங்கினான். காரை அடைந்தான். எதிரில் வந்த ஒரு அரபி பையனை தன் pocket ல் இருந்த car சாவியை எடுத்து திறக்க வைத்து அவளை பின் பக்க seat ல் அப்படியே கிடத்தினான்.

யாராவது பெண்கள் தென்படுகிறார்களா என்று நாலாபுறமும் சுற்றி பார்த்தான். பயனில்லை.

Car hospital நோக்கி பறந்தது..

Hospital லை நெருங்கும் போது ரவிக்கு phone செய்தான். Line busy யாகவே இருந்ததது. ஓரு வழியாக line கிடைத்து.

"அண்ணா...quickஆ GMC வாங்க. உங்க wife admit பண்ணிருக்கேன். Nothing to fear வந்துடுங்க" என்று வைத்துவிட்டான்.

கால தாமதம் இல்லாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால்...ஆபத்து நீங்கி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்ற பட்டாள். வீடு திரும்பி full rest ல் இருந்தாள். ஊருக்கு போகும் நாள் வந்தது.

இந்து சுஜித் ரூமை தட்டினாள். "Yes" என்று வெளியே வந்தான். "நான் இன்னைக்கு ஊருக்கு போறேன் பா. நீ மட்டும் இல்லனா..." அவள் குரல் தழுதழுத்தது. அவன் திகைத்து நின்றான். "போய்ட்டு வாங்க. No worries" என்றான்.

மறு நாள் ரவியும் சுஜித்தும் மட்டுமே. "என் wife க்கு உன்ன பிடிக்காதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். But அது எதையுமே மனசுல வெச்சுகாம நாங்க life ல மறக்கவே முடியாத உதவிய செஞ்சுட்ட" என்று நெகிழ்தான் ரவி.

"அண்ணா...no love...no hate...என்னோட policy. அப்படி இருந்துட்டா நமக்கும் பிரச்சனை இல்ல....நம்மளால அடுத்தவங்களுக்கும் பிரச்சனை இல்ல. பாறைகள் நடுவுல பாஞ்சு ஓடுர தண்ணீர் மாதிரி போய்கிட்டே இருக்கனும். யாரையும் ஆராய கூடாது".

சத்தியமான வார்த்தைகள்...

Anandhi Muthukumaran