தினம் ஒரு முட்டை
நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். உடலும், உள்ளமும் நலமாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் உங்களால். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிhpயர்களின் அன்றhட உணவில் அவசியம் இருக்க வேண்டும். அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும். இந்த சத்துப் பொருட்கள் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கவும், வருமுன்னர் தடுக்கவும், வந்தபின் குணப்படுத்தவும் உதவுகிறது. சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான, ச ரி சமமான உணவாக மாற்றுகிறது. ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும் சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும் பங்கை வகிக்கிறது. குழந்தைகளிடமும், பொpயவர்களிடமும் ஏன் எல்லோ ரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எந்த, எந்த வகையான உடல் உபாதைகளுக்கு முட்டையின் மூலம் ஊட்டச்சத்து அளித்து, ச ரி செய்ய முடியும் என்று கீழே உள்ளதை படித்தால் பு ரியும் உங்களுக்கு. முட்டையால் குணமாகும் நோய்களும், ஊட்டச்சத்தின் அவசியமும் அறிந்து கொள்ள அனைத்தையும் படியுங்கள். கீழே சொல்லப்பட்டுள்ள அனைத்து தொந்தரவுகளுக்கும், முட்டைக்கும் பிhpக்க முடியாத தொடர்பு உள்ளது. கீழே உள்ள அனைத்து குறை பாடுகளும் முட்டையால் நீங்கும். குழந்தைகளிடம்„ போதிய வளர்ச்சியில்லாமை அல்லது எடைக்குறைவு, நடப்பது, பேசுவது அல்லது சிந்திப்பது ஆகிய செயல்களில் மந்தம், உப்பிய வயிறு, சூம்பிய கை, கால்கள், சுணங்கிக் காணப்படுதல், சக்தியின்மை, கால்களில், முகத்தில், கைகளில் வீக்கம் பெரும்பாலும் புண்களுடேனோ, தோலில் தடங்களுடனோ, முடிகொட்டுதல் அல்லது மெலிதல், முடி செம்பட்டை ஆதல், கண்களில் வறட்சி, பார்வைக் குறைவு ஏற்படும். எல்லோ ரிடமும்„ தளர்ச்சியும் களைப்பும், பசியின்மை, சோகை, வாய் ஓரங்களில் புண், நாக்கில் வலி அல்லது புண், கால்களில் எhpச்சல் அல்லது கால்கள் மரத்துப் போதல் ஆகியவை ஏற்படும். நோய்கள் ஏற்பட வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவை சாpயாகச் சாப்பிடாததால் ஏற்படுகின்றன அல்லது மோசமடைகின்றன. அந்நோய்களில், வயிற்றுப் போக்கு, காது இரைச்சல், தலைவலி, சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு அல்லது இலுப்பு, நெஞ்சு படபடத்தல், பல் ஈறுகளில் ரத்தக் கசிவு அல்லது அவை சிவப்பாதல், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், வயிற்று அளெச்காpயம், தோலில் வறட்சி அல்லது வெடிப்பு, கவலை, பலவகையான நரம்பு அல்லது மனம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், ஈரல் சிதைவு, அடிக்கடி தொற்றுக்கு ஆளாதல் போன்றவைகளாகும். போதிய ஊட்டம் பெற்ற குழந்தைகளைவிட, ஊட்டக் குறைவுள்ள குழந்தைகளுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அதனால் இறந்துவிடக் கூடிய அபாயம் அதிகம். ஊட்டக்குறையுள்ள குழந்தைகள் விஷயத்தில் மணல்வாரி மிகவும் ஆபத்தானது. ஊட்டக் குறையுள்ள குழந்தைகளிடம் காசநோய் பரவலாகக் காணப்படுவதுடன் நோயின் தாக்குதலால் உடல்நிலை விரைவில் மோசமடைகிறது. ஈரல் சிதைவு ஏற்படுவதற்கான பல காரணங்களில் மிதமிஞ்சி மது அருந்துவதும் ஒன்று. இந்த ஈரல் சிதைவு ஊட்டக் குறையுள்ளவர்களிடம் பரவலாகவும் கடுமையாகவும் காணப்படுகிறது. ஊட்டக் குறையுள்ளவர்கள் ஜலதோஷம் போன்ற சிறிய நோய்களால்கூட அடிக்கடியும் மோசமாகவும் பாதிக்கப்படுகின்றனர். நல்ல உணவு நோயைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், நோயை எதிர்த்துப் போராடவும் மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. ஆகையால் நோயுற்றிருக்கும்போது ஒருவருக்கு ஊட்டசத்துள்ள உணவு மிக அவசியமானதாகிறது. துரதிர்ஷ்டவசமாக சில தாய்மார்கள் குழந்தை நோயுற்றிருக்கும்போது அல்லது வயிற்றுப் போக்கு கண்டிருக்கும்போது ஊட்டசத்துள்ள உணவுகள் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். இதனால் குழந்தை மெலிந்து நோயை எதிர்த்துப் போராட முடியாமல் இறந்து போகலாம். உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவு தேவை. உடல்நல மில்லாத குழந்தை சாப்பிடாவிட்டால் அதைச் சாப்பிடுமாறு செய்வது அவசியம். ஒருவருக்கு ஏதாவது உடல்நலக் குறை ஏற்படும் போதுதான் ஊட்டக்குறைவான அறிகுறி முதலாவதாக வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பல நாட்களாக வயிற்றுப்போக்குக்கு ஆளான குழந்தைக்கு கை, கால் வீக்கம், முக வீக்கம், கால்களில் பழுப்புநிறப் புள்ளிகள் அல்லது புண் விhpதல் ஏற்படலாம். இவை ஊட்டக் குறையின் அறிகுறிகள். இந்தக் குழந்தைக்கு ஊட்டமுள்ள உணவு அதிகம் தேவை. உடல்நலக் குறையின்போதும் அதற்குப் பின்னரும் ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமாய் இருப்பதற்குத் தேவையான உணவுகள்„ ஆரோக்கியமாகவும், திடகாத்திர மாகவும் இருக்க நமது உடலுக்குத் தினமும் பலவகையான ஊட்ட சத்துள்ள உணவுகள் தகுந்த விகிதத்தில் தேவைப்படுகின்றன. பிரதான உணவு„ சக்தி பெறுவதற்கான எளிய மலிவான வழி பிரதான உணவுகளே. பிரதான உணவுகள் சக்தி உணவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை அடுப்புக்கு விறகு போன்றவை, ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமாக உழைக்கிறhரோ அவ்வளவுக்கு அவருக்கு சக்தி தரும் உணவுகள் அதிகம் தேவைப்படுகின்றன. நம்முடைய சாப்பாட்டில் சக்தி தரும் உணவுகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆனால் மற்ற மூன்றுவகை உணவுகள் இல்லாமல், இந்த உணவுவகை மாத்திரம் அடங்கிய சாப்பாடு நம்முடைய உடலை பலஹீனப் படுத்துகிறது. சக்தி தரும் உணவுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்„ தானியங்கள்„ கோதுமை, அhpசி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு. மாவுச் சத்துள்ள உணவுகள்„ உருளைக்கிழங்கு, சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மாவுச்சத்துள்ள பழங்கள்„ வாழைப்பழம், சீமைப் பலாப்பழம், ரொட்டிப்பலா கூடுதலான புரதம் உள்ள உணவு வகைகள்„ புரதம் உடலை வளர்க்கும் உணவு. சீரான வளர்ச்சிக்கும், தசைகள், மூளை மற்றும் உடலின் பல பாகங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது தேவை. பிரதான உணவுகளில் நமது உடலுக்குத் தேவையான புரதம் அனைத்தும் முழுமையாக இருப்பதில்லை. எனவே ஆரோக்கியமாய் இருப்பதற்குப் புரத உணவுகளில் ஒன்றhன குறைந்தது ஒரு முட்டையாவது தினம் நம்முடைய சாப்பாட்டில் அடங்கியிருக்க வேண்டும். முட்டைகளின் தரத்தை சோதித்தல்„ முட்டை வணிகத்துறைகள் வெள்ளைக் கருவின் உயர்ந்து நிற்கும் நிலையை வைத்து அளந்து முட்டையின் தரத்தைக் கண்டுகொள்கின்றன. அடுத்தபடியாக, முட்டையை உடைத்தவுடன் மஞ்சள்கரு இருக்கும் உயர்ந்த நிலையைக் கொண்டும் தரத்தை அளிக்கின்றன. இம்முறைக்கு மஞ்சள் கரு அட்டவணை என்பது பெயர். இம்முறையில் முட்டையை உடைத்துத் தட்டில் ஊற்றியவுடன் மஞ்சள் கருவின் உயரத்தையும், பரந்திருக்கும் அகலத்தையும் அளந்து உயரத்தால் கிடைக்கும் எண்ணை கொண்டு முட்டையின் தரத்தை நிர்ணயிக்கிறhர்கள். முட்டையின் தரக்குறைவும், காரணங்களும்„ முட்டை இடப்படுவதிலிருந்து உண்ணப்படும்வரை அதனுடைய தரம் கெடுவதற்குப் பல சூழ்நிலைகள் இயற்கைச் காரணமும். தகுந்த பாதுகாப்பும், சுத்தமான சூழ்நிலையும் இல்லாவிடில் முட்;டை ஓட்டிலுள்ள நுண்துவாரங்களின் வழியே கிருமிகள் உள்புக வழியுண்டாகும். முட்டைகள் சேமிக்கப்படும் இடம் வெப்பத்துடனும் ஈரம் அற்றும் இருந்தால், முட்டையிலிருந்து தண்ணீர் ஒட்டுத் துவாரங்கள் வழியே வெளியேறும். சில சமயங்களில் மஞ்சள் பாகம் முட்டை ஓடுவரை இழுக்கப்பட்டு, அதன் உட்புறத்துடன்; ஒட்டிக்கொள்ளும். காற்றறையின் அளவும் பொpதாகக் காணப்படும். அதிக வெப்பமான சூழ்நிலையில் வெள்ளைக்கரு புரதப்பாகம் உடைப்பட்டு கடினப்பாகமானது நீர்த்த பாகத்துடன் நன்கு கலக்க வழியுண்டாகும். தண்ணீர் வெள்ளைக்கரு புரதப் பாகத்திலிருந்து வெளியேறுவது மட்டுமின்றி, மஞ்சள் கருபாகத்தையும் நீர்;க்கச் செய்யும். முட்டைகள் நன்றhகச் சுத்தமாகத் துடைக்கப்பட்டு சேமிக்கப்பட்டால் சேதம் ஏற்பட வழியில்லை. முட்டை ஓட்டின் உட்புறத் தோலும், வெள்ளைக்கரு புரதபாகமான ஆல்பிமினுள் அடங்கிய லைசோகைம் எனும் புரதமும் ஓரளவு கிருமி எதிர்ப்புத் தன்மையுள்ளவை. சேமிக்கப்பட்ட முட்டைகளில் உண்டாகும் காரத்தன்மையும் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். முட்டை ஓடுகள் சிறிது விhpசல் கொண்டிருந்தாலும், ஈரம், அசுத்தம் ஆகியவற்றுடன் இருந்தாலும் கிருமிகள் உட்புக வாய்ப்பு உண்டாகும். தரம் குறைந்த முட்டைகளில் ஆல்புமின் நீர்;த்துப் பசுமை கலந்திருக்கும் மஞ்சள் பாகம் இலகுவாக வெண்மை அல்லது ஊதாப் புள்ளிகளுடன் இருக்கும். விட்டலைன் சவ்வு தடிப்பாக வெண்மையாயிருக்கும். ஒளியில் சோதித்தால் மஞ்சள் பாகம் கருஞ்சிவப்பாகத் தோன்றும். முட்டையின் தரம் பாதிக்கப்படுவதற்குக் கருவின் வளர்ச்சியும் ஒரு காரணமாகும். வளர்ந்த கரு மஞ்சள் பாகத்தின் மேல் சிவப்பான புள்ளி வடிவாகவோ அல்லது சிவந்த வட்டமான மோதிர வடி வாகவோ காணப்படலாம். கவனமின்றி கையாளப்படும் முட்டைகளில் உட்புறப் பாகங்கள் கலங்கியும், முட்டைகள் விhpசலுடனும் காணப்படும். அளவாகவும், சீராகவும் அடுக்கப்படாத முட்டைகளிலும் விரிசல்கள் ஏற்பட வழியுண்டு. இப்போது முட்டையின் முக்கியத்துவமும், முக்கிய பயன்களும் புரிந்திருக்குமே உங்களுக்கு. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான, சரிசமமான உணவாக மாற்றுகிறது.