திருநாங்கூர் கருடச்கேவை

Image

திருநாங்கூர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ளது திருநாங்கூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் கருடச்கேவை நடைபெறுகிறது. திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றியுள்ள ஸ்தலங்களில் எழுந்தருளியுள்ள 11 பெருமாள்களும் கருடவாகனத்தின் மேல் காட்சியளிப்பார்க்ள். திருநாங்கூர் கருடச்கேவை மூன்று நாள் உற்சவமாக நடைபெறும். முதல் நாள் தை அமாவாசை அன்று திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம். இரண்டாம் நாள் 11 கருடசேவை, மூன்றாம் நாள் 11 பெருமாள்களும், ஆழ்வார்களும் திருக்கோவிலுக்கு திரும்பச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்..