கேஸ் ஸ்டவ் எச்சரிக்கை

Image

சமையலுக்கு கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவரா? கீழ்க்கண்ட விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். கேஸ் சிலிண்டர் எப்போதும் நின்ற நிலையில்தான் வைக்கப் பட வேண்டும். படுக்க வைக்கப் படக்கூடாது. சிலிண்டரை அளவுக்கதிகமான உஷணமான இடத்தில் வைக்காதீர்கள். அதிக வெப்பம் படும் போது சிலிண்டாpனுள் உள்ள எரி பொருளானது விரிவடைந்து, அழுத்தம் அதிகாpத்து வெடிக்கும் அபாயம் உண்டு. சிலிண்டரை எப்போதும் மூடிய அலமாரி மற்றும் கப்போர்டுகளினுள் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் ஒருவேளை கசிவு இருக்கும் பட்சத்தில் அது மூடப்பட்டுள்ள இடத்திற்குள் ளேயே சுற்றும் அபாயம் உண்டு. சிலிண்டாpன் அருகே விரைவில் தீப்பற்றிக் கொள்ளும் காகிதங்கள், எண்ணெய், துணிகள் போன்ற எதையும் வைக்காதீர்கள். ஒவ்வொரு முறை சிலிண்டரை மாற்றும் போதும், சிலிண்டாpலோ, ரப்பர் குழாயிலோ ஏதேனும் கசிவு இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறைகள் சரி பாருங்கள். சிலிண்டரைப் பொருத்தியதும், அழுத்தம் சாpயாக இருக்கிறதா என்று பாருங்கள். அழுத்தம் அதிகமாக இருந்தால், தீயானது பொp தாக இருக்கும். குறைவாக இருந்தால் ரொம்பவும் மெலிதாக எரியும். நீலம் கலந்த பச்சை நிறச் சுடரே சரியான அழுத்தம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரப்பர் குழாயை மாற்றி விடுங்கள். அதற்கு முன்பே அதில் ஏதேனும் வெடிப்போ, துளையோ தென்பட்டால் உடனே மாற்ற வேண்டும். ரப்பர் குழாய் குறைந்தது ஒன்றரை மீட்டர் நீளமாவது இருக்கவேண்டும். ரெகுலேட்டர் முனை மற்றும் அடுப்பின் முனை ஆகிய இரண்டு இடங்களிலுமே ரப்பர் குழாய் சரியாகப் பொருந்தியுள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். அடுப்பானது எப்போதுமே சிலிண்டரைவிட சற்று உயரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் எரிபொருள் சீராகப் பரவும். கேஸ் ஸடவ் வைத்திருக்கும்போது அதன் அருகில் மைக்ரோ வேவ், ஸ்டவ் மாதிரியான எந்தப் பொருளையும் வைக்காதீர்கள். சமையலறையில் பூஜை விளக்குகள் ஏற்றுவதையும், சாம்பிராணி போடுவதையும், ஊதுபத்தி கொளுத்தி வைப்பதையும் தவிருங் கள். சமையலறையினுள் ஃப் ரிட்ஜ வைப்ப தையும் தவிருங்கள். ஃப்ரிட்ஜலிருந்து சில சமயம் மின்சாரத் துகள்கள் வெளிவரும். அந்தச் சமயத்தில் ஒருவேளை கேஸ் கசிவு இருந்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிலிண்டரை எப்படி மாற்றுவது, எப்படிக் கழற்றுவது என்று முறையாகத் தொpந்து வைத் திருங்கள். சிலிண்டர் வரும்போது அதன் வாய்ப்பகுதியில் சீல் உள்ளதா என்று பாருங்கள். சந்தேகம் இருந்தால் சிறிதளவு சோப்புக் கரைசலை சீலின் மேல் ஊற்றுங்கள். குமிழ்கள் வந்தால் சீல் உடைக்கப் பட்டிருப்பதாக அர்த்தம். உடனே அதைத் திருப்பி அனுப்புங்கள். ஒவ்வொரு முறை சமையலை முடித்துவிட்ட பிறகும் கேஸ் ரெகுலேட்டரையும், அடுப்பையும் மூட மறக்காதீர் கள். இரவிலும், வீட்டை விட்டு வெளியே புறப்படும் போதும் இதைச் செய்யத் தவறhதீர்கள். சமையலறையில் உங்கள் பார்வை படும்படியான இடத்தில் அவசர சேவைக்கான தொலைபேசி எண் மற்றும் முகவாpயைக் குறித்து ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்திற்கு அடுப்பை அணைக்கவோ, மிதமான தீயில் வைக்கவோ சொல்லி குழந்தைகளை ஏவாதீர்கள்.