தலைமுடி உதிராமல் இருக்க

Image


தேவையான பொருள்கள்

சின்னவெங்காயம் - 15

தயிர் - 1/4 கப்

வெந்தயம் - 15 கிராம்

வெந்தையத்தை 2 மணி நேரம் ஊற வைத்து அதனை தயிர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை தலைமுடியின் வேர்க்காலில் மற்றும் மண்டை ஓட்டில் தேய்த்து வருடுதல் வேண்டும், ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஷாம்பு உபயோகிக்க கூடாது. இதில் சேர்க்கும் வெந்தையம் உடல் சூட்டை குறைக்கும்.தலைமுடிக்கு ஈரத்தன்மை கொடுத்து முடி வறண்டு போகாமல் பாதுகாக்கிறது இதனால் முடி உடைந்து போவதை தடுக்கிறது. தயிர் பொடுகு தொல்லையை நீக்கும். சின்ன வெங்காயம் மண்டை ஓட்டில் உள்ள இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாகும். வருடுதல் முலமாக இரத்த ஓட்டம் சீராகி புதிய செல்களை உருவாக்குகிறது. இதனால் புதிய முடி வளரும்.

இதனை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உபயோகிக்கவேண்டும். இதை 3 மாதம் தொடர்ந்து செய்தால் முடி வளர்வது நிச்சயம்.