Happy Valentines Day⚘

Imageவிஸ்தாரமான பெரிய வீடு அது. ஹாலின் sofa வில் வேனுவும், சுசிலாவும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் சரிந்த வாக்கில் அமர்ந்தவாரு விக்ரம் mobile ஐ நோண்டிக் கொண்டிருந்தான். Track pant மேல் tshirt அணிந்திருந்தான். Gym பிரியன். நல்ல உயரம். நிரந்திரமாக புன்னகை குடி கொண்டிருக்கும் தெளிவான முகம்.

அவர்களின் நேர் எதிரே வாணியும், சுந்தரமும். அமர்ந்திருந்தனர். இரு குடும்பத்தின் இடையே பதினைந்து வருட நட்பு. எதிர் எதிர் வீடு். ஒரே குடும்பமாக பழகுபவர்கள்.

"என்ன special சுந்தரம் இன்னைக்கு? திடீர்னு எங்களை dinner க்கு கூப்பிட்டுருக்க?" என்றார் வேனு.

"விஷயம் இருக்கு"

"வித்யா...இங்க வா மா" என்று சுந்தரம் குரல் கொடுத்தார்.

Cherry colour palazzo pant அதன் மேல் மஞ்சல் colour short top அணிந்து கொண்டு cute ஆக வந்தாள் அவர் மகள் வித்யா. கருகருவென்ற இடுப்பு வரை நீண்ட கூந்தலை freeயாக விட்டிருந்தாள். அவளை பார்த்தால் நடிகை சாய் பல்லவி சற்று மொழு மொழுவென்றிருந்தாள் எப்படியிருக்கும். அப்படி ஒரு வசீகர தோற்றம்.

"Hi uncle...aunty..." என்று புன்னகைத்தவாரே சுந்தரத்தின் அருகில் அமர்ந்தாள்.

"Hey vikram...எல்லாரும் பேசிட்டு இருக்கோம்ல..அந்த mobile ல pocket ல வை என்று விக்ரமை அதட்டினாள்.

விக்ரம் அதிலிருந்து கண்ணை எடுக்காதவாரே "முடியாது போடி" என்றான்.

எழுந்து போய் அவனிடமிருந்து mobile லை பிடுங்கினாள்.

இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பித்தனர்.

"அடடா...ஆரம்பிச்சிடியா? அவனை விடு டி" என்று வாணி அதட்டினாள்.

"இதெல்லாம் இன்னும் எத்தனை நாளக்கு என்றார்" சுந்தரம் சிரித்தவாரே.

ஏன் என்பது போல் விக்ரம் அவரை கேள்வியோடு பார்த்தான்.

"வித்யாக்கு வரன் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். முதல்ல உங்ககிட்ட சொல்லனும்னு தான் கூப்பிட்டோம்" என்றார் சுந்தரம்.

ஒரு நொடி கூட யோசிக்காமல் "கவலைய விடுங்க uncle வித்யாவ நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்" என்றான் விக்ரம்.

"Hey vikram எதுல விளையாடனும்னு இல்ல....? என்று அவனை அதட்டினார் வேனு.

"விளையாடல...serious ஆ தான் பேசறேன். I will marry her uncle" என்றான்.

விக்ரமின் இத்தகைய அதிரடி பேச்சை யாருமே எதிர் பார்க்கவில்லை.

வேனு அவனை எரித்து விடுவது போல் முறைத்தார். அம்மா சுசிலா செய்வதரியாது திகைத்தாள்.

வித்யாவின் பெற்றோர் சுந்தரமும் வாணியும் குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

வித்யா விருட்டென்று எழுந்து தன் ரூமிற்கு சென்று கதவை சார்த்திக் கொண்டாள்.

"இப்ப எதுக்கு எல்லாரும் என்னை இவ்ளோ shocked ஆ பார்க்குறீங்க??" என்றான் விக்ரம்.

"விக்ரம் வா...வீட்டுக்கு போய் பேசலாம்" என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் வேனு. அவர்கள் பின்னாலேயே சுசிலாவும் வேகமாக போனாள்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா? வித்யா உன்னை விட ரெண்டு வருஷம் மூத்தவ...அவளை போய் கல்யாணம் பண்ணிக்கறங்கற?" என்று கத்தினார் வேனு.

"So what அப்பா? எனக்கு அவளை பிடிச்சிருக்கு....அதனால சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு?"

"இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. உடனே அபிஷேக் பஜன்... ஐஸ்வர்யா ராய்...சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி, இந்த example லாம் என்கிட்ட சொல்லாத" என்றார்.

விக்ரம் உரக்க சிரித்தான்.

"Come on அப்பா...யார் எப்படி கல்யாணம் பண்ணியிருந்தா எனக்கென்ன? வித்யாவ எனக்கு பிடிச்சுருக்கு. அவ என் wife ஆ வரனும்னு ஆசைபடறேன். அவ்ளோ தான்" என்றான் அழுத்தம் திருத்தமாக.

"என்னை பொருத்தவரைக்கும் என் wife எனக்கு ஒரு best friend ஆ...நம்ம familyய புரிஞ்சுகிட்டவளா இருக்கனும். வித்யா 100% அப்படி இருக்கா. என்னால அந்த place ல அவளை தவிர வேற யாரையும் யோசிச்சு பார்க்க முடியல. I love her a lot. அதனால தான் அவங்க வீட்ல வித்யாக்கு பையன் பார்க்க போறோம்ன்னு சொன்னப்போ ஒரு second கூட யோசிக்காம நானே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன்" என்றான்.

இனிமேல் விக்ரமின் முடிவில் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை என்று வேனுவிற்கு தெளிவாக புரிந்தது.

பெருமூச்சி விட்டார்.

"வித்யாகிட்ட இது பத்தி பேசிருக்கியா?"

"இல்ல பா"

"உன்னை மாதிரி அவளுக்கும் உன்னை பிடிக்கனுமே"

"பிடிக்கும் பா"

"அவ எழுந்து போய் கதவை சாத்திக்கிட்டாளே டா...எனக்கு என்னவோ போல் ஆகிடுச்சு. Aunty...aunty னு என் காலையே சுத்தி வருவா..உன்னால ஒரே நாள்ல அந்த மரியாதை போய்டுச்சு" என்று அம்மா சுசிலா கடிந்து கொண்டாள்.

விக்ரம் அதற்க்கும் சிரித்தான்.

"நம்ம வித்யா மா...சரியாகிடுவா" என்று அவன் அம்மாவின் கையை ஆறுதலாக பிடித்தவாறு கூறினான்.

"நான் வெளிய கிளம்பறேன்...evening discuss பண்ணலாம்" என்று bike சாவியையும் helmet டையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்று இரவு சுசிலா dinner எடுத்து வைத்து கொண்டிருந்தாள். வேனுவும் விக்ரமும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.

"உள்ளே வரலாமா? என்று கேட்டுக்கொண்டே எதிர் வீட்டிலிருந்து சுந்தரமும் வாணியும் வந்தார்கள்.

"என்ன uncle இது? புதுசா permissionலாம் கேட்டுகிட்டு? இது நம்ம வீடு வாங்க உட்காருங்க என்றான் விக்ரம்.

இருவரும் தயக்கமாக அமர்ந்தனர்.

அங்கே சிறிது நேரம் மொளனம் நிலவியது.

"நீ திடீர்னு இப்படி கேட்பன்னு நாங்க நினைக்கவே இல்ல விக்ரம்" என்றார் சுந்தரம்.

"இப்ப கேட்காம? வித்யாக்கு கல்யாணம் முடிந்ததுக்கப்புறமா கேட்க்க முடியும்" என்று casual ஆக சிரித்தான் விக்ரம்.

"விக்ரம்..." என்று அதட்டினார் வேனு. சுந்தரம் பக்கம் திரும்பினார்.

"Sorry da சுந்தரம்...எங்களுக்கே எதுவும் தெரியாது. தர்ம சங்கடமா போச்சு" என்றார் வேனு.

விக்ரம் சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான்.

"Uncle..."

"உங்க பொன்னுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கறீங்க. அவ ரொம்ப happyஆ இருக்கனும்னு தானே? அதுக்கு நான் 100% guarantee. அவளுக்கு equal ஆ படிச்சுருக்கேன். அவளை விட அதிகமா earn பண்றேன். அப்புறம் ஏன் இவ்ளோ யோசனை?"

"இப்போ பிரச்சனை அது இல்லை விக்ரம். வித்யாக்கு இதுல இஷ்டமில்லைன்னு தோனுது" என்றார் சுந்தரம்.

"என்ன சொல்றீங்க? நெஜமாவா?"

"ஆமாம்".

"அதுமட்டுமில்ல. வயசு குறைஞ்ச பையனை கட்டுறதெல்லாம் எங்க சொந்தகாரங்க ஒத்துக்க மாட்டாங்க பா"

"Omg...நீங்க எந்த காலத்துல இருக்கீங்க uncle? நீங்களும் நானும் எவ்ளோ உலக விஷயங்களை மணிக்கணக்கா discuss பண்ணிருக்கோம். நீங்க இந்த மாதிரிலாம் பேசலாமா? Just be cool. என் கூட எப்பவும் போல இருங்க. நான் நாளைக்கு வித்யாகிட்ட பேசிக்கறேன்" என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பினான்.

மறு நாள் ஞயாயிரு என்பதால் நிதானமாக எழுந்தான். சீக்கிரமே ready ஆகி வித்யாவை பார்க்கச்சென்றான்.

வித்யாவின் அம்மா "வா விக்ரம்" என்றாள்.

"வித்யா...விக்ரம் வந்துருக்கான் பாரு" என்று உள்ளே போய் வட்டாள்.

வித்யா உம்மென்று வெளியே வந்தாள். அவன் முன் கோபமாக சோபாவில் அமர்ந்தாள்.

விக்ரம் குறும்பாக சிரித்தவாரே அவளை பார்த்தான்.

"வித்யா நீ கோபமா இருக்குறத பார்த்தா செம்ம சிருப்பு வருது" என்றான்.

வித்யா நிமிராமலே பேசினாள்.

"நீ இந்த மாதிரி ஒரு intention ல இருப்பனு கனவு கூட காணல விக்ரம். உன்னை விட பெரியவ நான். எந்த second லயும் ஒரு friend க்கு மேல உன்னை யோசிச்சதே இல்லை. தயவு செஞ்சி உன் மனச மாத்திக்கோ." என்று எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

விக்ரம் அவளை இமைக்காமல் பார்த்தான்.

"Look வித்யா... உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு உன்னை விட எனக்கு தான் தெரியும். உன் life ல நான் கடைசி வரைக்கும் இல்லைனா நீ செத்துருவ. அதுக்கு மேல உன் இஷ்டம்" என்று எழுந்தான்.

"Marraige is a knot between two hearts. It has got nothing to do with age or physical aspects. உன்னை விட அழகான பொண்ணுங்கலாம் என் life ல இல்லங்கறியா? But என்னோட மனசு உன்கிட்ட தான் இருக்கு. அதான் bold ஆ propose பண்ணினேன் உன் parents முன்னாடி. என் மனசை இப்படி உடைச்சுட்டியே. நீயா என்னை தேடி வர தருணம் நிச்சையம் வரும். வருவ" என்று அவளை திரும்பி பார்க்காமல் போய் விட்டான்.

திவ்யாவின் கண்களில் ஏனோ கண்ணீர் திரண்டது.

அந்த நிகழ்வுக்கு பிறகு அவள் கண்ணில் படுவதையே விக்ரம் தவிர்த்தான். அவள் மேல் அவ்வளவு கோபம் அவனுக்கு.

ஒரு வாரம் சென்றிருக்கும். வித்யா வேகமாக விக்ரம் வீட்டினுள் நுழைந்தாள். அவளைப்பார்த்தும் பார்க்காதது போல் டிவி பார்ப்பதை தொடர்ந்தான் விக்ரம்.

"என்னாச்சு விக்ரம் உனக்கு? வீட்டு பக்கம் கூட வரலை?"

"ஒன்னும் ஆகலையே?" டிவியிலிருந்து கண்களை எடுக்காதவாரே பதில் அளித்தான்.

"தயவு செஞ்சு என் கிட்ட பேசு. எப்பவும் போல இரு please..."

இப்போது அவளை பார்த்தான்.

"முடியாது. கெளம்புரியா" என்றான். மீண்டும் டிவியை பார்க்கத்துவங்கினான்.

கோபமும் அழுகையும் ஒன்றாக சேர்ந்து துக்கம் நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

அவன் முன் அழக்கூடாது என்று விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

மறுநாள் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"வித்யா..."

"என்னப்பா?"

"சேது மாமா ஒரு first class வரன் அனுப்பியிருக்கார். பையன் பேரு விஷ்னு. UK ல இருக்கான். இப்போ leave ல வந்துருக்கானாம். உடனே கல்யாணம் பண்ற idea வாம். நீ ok சொன்னா proceed பண்ணலாம்" என்றார்.

" இப்ப என்னப்பா அவசரம் கொஞ்ச நாள் போகட்டுமே"

"எல்லா நேரத்துலேயும் இந்த மாதிரி நல்ல வரன் அமையாது. அதுவா வரும் போது விட்டுட கூடாது" என்றார் சிறிது கண்டிப்புடன்.

வேக வேகமாக எல்லாம் நடந்தது. முதலில் பையன் வீட்டிலிருந்து பெற்றோர் வந்தனர். வித்யாவை மிகவும் பிடித்து விட்டது. மறு நாளே பையனும் வந்து பார்த்தான். அவனுக்கும் பிடித்துவிட்டது.

விக்ரமின் குடும்பத்தினர் அந்த பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. விக்ரமும் தான்.

"நிச்சையதார்தம் எப்போ வச்சுகலாம்னு கேட்குறாங்க. நீ ஓகே சொன்னா தேதி நிச்சையம் பண்ணிடலாம். நிச்சயம் முடிஞ்சு 2 வாரத்துல கல்யாணம் வைச்சா தான் எல்லா formalitiesம் முடிஞ்சு நீயும் flight ஏற முடியும்" என்றார் சுந்தரம்.

"அப்பா...இவ்ளோ சீக்கிரமாவா? எனக்கு பையனை பத்தி ஒன்னுமே தெரியாதே....கொஞ்சம் டைம் வேனாமா?"

"எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் தானா தெரியும். உனக்கு நல்லது தான் செய்வோம். சும்மா எதையாவது போட்டு குழப்பிக்காதே" என்றாள் வாணி.

வித்யாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. மனதில் எந்த excitement டும் தோனவில்லை. மாறாக கடுப்பாக இருந்தது.

விக்ரமிற்கு phone அடித்தாள். அவன் எடுக்கவில்லை.

இரண்டு நாட்கள் போயிருக்கும்...

"பையன் நேத்து உன் நம்பர் வாங்கிருக்கான் வித்யா. கூப்பிடுவான்.... பேசு" என்றார் சுந்தரம்.

"ஐயோ அப்பா எனக்கு சுத்தமா அதுக்குலாம் இப்ப mindset இல்ல" என்று எரிந்து விழுந்தாள்.

"அவ கெடக்குறா...நீங்க வேலைய பாருங்க" என்றாள் வாணி.

வித்யா...மீண்டும் விக்ரமின் மொபைலை try செய்தாள். Reach ஆகவில்லை.

கோபமாக எழுந்தாள். நேரே அவன் வீட்டிற்குள் போனாள்.

"வா வித்யா" என்று சுசிலா வரவேற்றாள்.

"விக்ரம்...."

"அவன் உன்கிட் சொல்லலையா?"

"என்ன aunty?"

"Singapore போயிருக்கான். எப்பவும் போவானே official trip. வர ரெண்டு வாரமாகும்"

"பாருங்க aunty...என் கிட்ட சொல்ல கூட இல்லை. என்கிட்ட பேசுரது இல்லை. என்னை பார்க்குறதே இல்லை" என்றாள் வருத்தமாக.

"அவன் உன்னை விட்டு விலகி இருக்குறது நல்லது வித்யா. எப்படியும் உனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்ட. உங்க வீட்ல சொல்றதை கேட்டு நட. அதான் எல்லாருக்கும் நல்லது" என்று ஆறுதல் சொன்னாள் சுசிலா.

சில சமையங்களில் விக்ரம் எங்கே போயிருக்கிறான் என்று சுசிலாவே வித்யாவை தான் கேட்பாள்.

விக்ரமும் வித்யாவும் அவ்வளவு அன்யோன்யம்.

"இப்படி தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் Singapore போய்ட்டானே" என்று நொந்து கொண்டாள். எதையோ இழந்ததது போல் மனம் தவித்தது. அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது.

சோர்வாக வீட்டிற்கு திரும்பினாள். சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.

"அதுக்குள்ள எங்கே டி போய்ட்ட?" என்றாள் வாணி. எதுவும் காதில் விழாதது போல் சற்று நேரம் கண்மூடியிருந்தாள்.

"விக்ரமிற்கு மெசேஜ் அடித்து பார்க்கலாமா என்று மொபைலை கையில் எடுத்ததும் அது அடிக்கத்துவங்கியது.

"Unknown number"

யாராக இருக்கும் என்று யோசித்தவாரே அதை ஆன் செய்து "எஸ்" என்றாள். "Hi..this is விஷ்னு"

"Ya tell me" என்று சற்று தடுமாரியவாரே சொன்னாள்.

"Shall we have a short meet?" என்றான்.

"எப்போ"

"May be tomorrow around 6? Location is your choice. ஏன்னா நான் இந்த ஊரை விட்டு போய் 9 years ஆச்சு" என்றான்.

"Ok" என்று மொபைலை வைத்தாள்.

"யாரு டி மாப்பிள்ளையா" என்றாள் அம்மா.

"இன்னும் மாப்பிள்ளைலாம் ஆகலமா. நீ வேற" என்றாள் எரிச்சலாக.

அன்று இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தாள். தூக்கமே வரவில்லை. வாட்ஸ் ஆப்பில் விக்ரமிற்கு நிறைய message அனுப்பியிருந்தாள். அவன் படித்திருந்தான். ஆனால் எதற்க்கும் ரிப்லை செய்யவில்லை. தவித்து போனாள். அழுகையாக வந்தது. காலை எழுந்த போது கண்னெல்லாம் எரிந்தது.

"இன்னைக்கு சாயங்காலம் மறந்துடாத டி" என்று ஓராயிரம் முறை அம்மா ஞயாபகப்படுத்தி அனுப்பினாள். ஆபீஸில் வேலையில் கவனம் போகவில்லை.

அவள் forum mall வாசலை அடையும் போது ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இவளைப்பார்த்ததும் விஷ்னு கையசத்தான்.

"Sorry late ஆகிடுச்சு" என்றாள்.

"Thats ok. வா உள்ள போகலாம்" என்றான்.

அவன் ஒருமையில் அழைத்தது ஏனோ வித்யாவிற்கு பிடிக்கவில்லை.

ஒரு ice cream ஷாப்பினுள் order கொடுத்துவிட்டு எதிரெதிரே அமர்ந்தனர்.

"Sareeய விட உனக்கு jean தான் suit ஆகுது. UK la sareeலாம் மறந்துடு. அதுக்கு தேவை இருக்காது...also எனக்கும் பிடிக்காது" என்றான்.

அவள் யோசனை பின்னோக்கி போனது.

"Hey luvly color da விக்ரம்...sunset yellow with purple flowers...pls pls கொஞ்சம் wait பண்ணு இதையும் bill பண்ணிடுறேன்"

"Crazy டி நீ. எவ்ளோ saree தான் வாங்குவ?நான் 15 mints ல என் shopping முடிச்சுட்டேன். One hour ஆக போகுது நீ இன்னும் வாங்கிட்டே இருக்க. போ சீக்கிரம் முடிச்சுட்டு வா".

Shopping முடிந்து Bike ல் அவர்கள் வீடு திரும்பும் போது சொன்னான்.

"saree தான் உனக்கு ரொம்ப அழகு வித்யா..."

"Hey நீயாடா என்னை compliment பண்ற? அதிசயம் தான்" என்று அங்கலாய்த்து அவளுக்கு ஞயாபகம் வந்த்து.

"Helloooo...என்ன deep thinking?" என்றான் விஷ்னு.

"Sorry nothing..."

"I have lot of future plans. UK வந்தா for sure நீ வேலைக்கு போகனும். மத்தபடி you will have a luxurious life. இது தான் என் expectations" என்றான். "One more thing. Frequent ஆ India வரனும்னு சொல்ல கூடாது. Practical ஆ இருக்கனும்" என்றான்.

வார்த்தைக்கு வார்த்தை "நான்" என்றான். உன் விருப்பம் என்ன என்று வித்யாவை ஒரு முறை கூட கேட்க்கவில்லை.

"மத்தபடி எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா" என்றவாரே அவள் கையை பிடித்து வருடினான். உடனே தன் கையை விடுவித்துக்கொண்டாள். ஒரு கனம் அந்த இடமே அண்ணியமாக தோன்றியது அவளுக்கு.

"Ok போலாம் time ஆச்சு" என்று சட்டென்று எழுந்துவிட்டாள்.

"Fine" என்று விஷ்னுவும் எழுந்தான்.

"I will drop you back home in my car" என்றான்.

"நான் போய்க்கிறேன்" என்றவளை..."No come" என்று car ல் ஏற்றினான். வேண்டா வெறுப்பாக ஏறினாள்.

விஷ்னு பேசிக்கொண்டே வந்ததில் அதிகமாக அவன் தற்பெருமை தான் இருந்தது.

அவள் வீட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடியே காரை நிறுத்தினான். இவள் கேள்விகுறியோடு அவனைப்பார்த்தாள்.

"Can I kiss you?" என்றான். கல்யாணத்துக்கு முன்னாடி நான் கொடுத்த first kiss ஆ இருக்கட்டும் என்றான்.

"No...let me go" என்று கத்தியே விட்டாள். விஷ்னு திடுக்கிட்டு அவளைப்பார்த்தான்.

"Hey chill. Now leave" என்றான் சற்று கோபமாக.

வித்யா ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தாள். நேரே தன் ரூமிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

"என்னாச்சு டி கதவை திர" என்று தட்டினாள் வாணி.

"கொஞ்ச நேரம் என்ன நிம்மதியா விடுங்க" என்று கத்தினாள்.

"Im sorry விக்ரம்...என்ன பார்க்க வரவே மாட்டியா...என் மனசுல நீ தான் இருக்க"...என்று குலுங்கி குலுங்கி அழுதாள்.

காலையில் அலாரம் அடித்து விழித்தாள். Table calender Feb 14 th என்று காண்பித்தது. படுத்தவாரே அதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றில் table மேல் ஏதோ அசைந்தது. சட்டென்று எழுந்தாள். ஒரு சிகப்பு கலர் card. இருந்தது. அதனுள் பெரிய மொட்டு போன்ற ஒற்றை ரோஜா. ஆச்சர்யத்துடன் கையில் எடுத்தாள். Cardஐ புரட்டி பார்த்தாள்.

"Happy Valentine’s Day to the sweetest valentine I could ever wish for. You are my sweetheart, and I am glad you’re mine." - Vikram என்றிருந்ததது.

Anandhi Muthukumaran