கலாச்சாரம்
மூன்று floor கொண்ட முப்பது குடித்தனம் உள்ள பளிச்சென்ற apartment அது. மாலினி ஓட்டமும் நடையுமாக Parking area வை அடைந்தாள்.
"Hi மாலினி..." என்று வழி மறைத்து நின்றான் ராகவ்.
"ஹய்யோ" என்று முனங்கியபடி எரிச்சலோடு நிமிர்ந்தாள். "சனியனுக்கு வாரனம் ஆயிரம் சூர்யானு நெனப்பு" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே என்ன? என்பது போல் அவன் கண்களை நேராக முறைப்புடன் பார்த்தாள்.
"You look stunning in this blue" என்று அவன் பேச்சை தொடரும் முன்..."வழி விடு ராகவ்...கொஞ்சம் தள்ளி நில்லு...ஏன் daily வழிய block பண்ணிகிட்டு இப்படி நிக்குற?" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் scooty யை லாவகமாக வளைத்து எடுத்து பறந்தாள்.
"ஏற்கனவே tennis class க்கு time ஆச்சு... இவன் வேற daily கிளம்பும் போது வழிய மறைச்சு உசுர வாங்குறான்" என்று மனதிற்குள் பொருமிக் கொண்டே வண்டியின் வேகத்தை கூட்டினாள்.
மாலினி Anna University யில் "M.Sc electronic media" இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. Merrit டில் வாங்கிய seat. ஐந்து வருட படிப்பு அது. படிப்பில் கெட்டிகாரி. விளையாட்டிலும் தான். எப்போதும் துறுதுறு என்று colony யில் எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பவளாக வலம் வந்தாள். ஆனால் அதே flat ல் வசிக்கும் ராகவ்வின் அம்மா ருக்மணிக்கு மட்டும் மாலினியை சுத்தமாக பிடிக்காது. எதிர்த்த flat என்பதால் அவளை பார்ப்பதை தவிர்க்கவும் முடியாது. எப்போதும் மாலினியை பற்றி யாரிடமாவது குறை கூறிக்கொண்டெ இருப்பாள்.
"தினேஷ் அம்மா...இந்த
மாலினிய பார்த்தீங்களா? அவ நடையும் உடையும் நல்லாவா இருக்கு?...எப்பவும் sleeveless போட்டுக்கிட்டு...ஓயாம ஊர சுத்திக்கிட்டு...அவ அம்மா எப்படி தான் இவள இப்படி வளர்த்து வெச்சிருக்காளோ" என்று வம்பளப்பாள். "இந்த மாதிரி பொன்னுங்களால தான் ஆம்பள பசங்க கெட்டு போறாங்க" என்று அங்கலாய்ப்பாள்.
ருக்மணி தன் முதுகின் பின் தன்னை பற்றி இல்லாத்தும் பொல்லாத்தும் பேசுவது மாலினிக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அதை சற்றும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ருக்மணியை வழியில் பார்க்க நேரிட்டாலும் "Hi aunty" என்று புண்ணகை மாறாமல் கூறிவிட்டு நகர்ந்துவிடுவாள்.
உண்மையில் ராகவ் வை தான் அந்த colony யில் யாருக்கும் பிடிக்காது. Graduation முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. வெட்டியாக ஊரச்சுற்றி கொண்டிருக்கிறான். பந்தாவிற்கு குறைச்சல் இருக்காது. எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. ஆனால் உலகிலேயே அவன் தான் உத்தமன் போல் ருக்மணி பேசுவாள்.
"என் பிள்ள ராகவ் குனிஞ்ச தல நிமிர மாட்டான். அப்படி ஒரு பையன் இந்த colony ல இருக்குறதே நிறைய பேருக்கு தெரியாது" என்று பெருமை பாடுவாள். அவள் வம்பு பிடித்தவள் என்பதால்...யாரும் எதிரே எதுவும் பேச தயங்குவார்கள்.
அது ஒரு ஞயாயிற்று கிழமை. நாலு மணி இருக்கும்.
"மாலினி...ஏய் மாலு....மாடில காயப் போட்ட துணிய எடுத்துட்டு வா" என்று அவள் அம்மா பாலை அடுப்பில் வைத்தவாறே குரல் கொடுத்தாள்.
"Wait ma..இந்த scene முடிஞ்சதும் போறேன்."
"பதினஞ்சு நிமிஷமா கத்திகிட்டு இருக்கேன். Sunday வந்தா ஓயாம TV"
"கத்தாதே இரு போறேன்" என்று sofa வில் remote ஐ எரிந்து விட்டு மாடிக்கு சென்றாள்.
துணியை எம்பி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தாள்.
"May I help you?" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். மிக அருகில் அவன். ராகவ். எப்போது பூனை போல் வந்து இவள் பின்னாடி நின்றான் என்றே தெரியவில்லை.
கடுப்பும் எரிச்சலும் கலந்து "நான் help கேட்டேனா?" என்றாள்.
"சரி அத விடு...Insta la request கொடுத்து எவ்ளோ மாசமாச்சு? Accept பண்ணவே மாட்டேங்குற?" மேலிருந்து கீழ் வரை அவளை scan செய்வது போல் பார்த்தவாறே தொடர்ந்தான்..."நீ செம்ம hot ஆ இருக்கியாம். என் friends லாம் சொல்றாங்க" விஷம சிரிப்போடு சொன்னான்.
மாலினி பொருமை இழந்து கொண்டிருந்தாள். அவனை கவனிக்காதவாறு வேகமாக துணிகளை உருவினாள்.
"நான் எதுக்கு gym போறேன் தெரியுமா? உனக்காக தான். உன்ன மாதிரி free யா dress பண்ற பொண்ணுங்க தான் free யா பழகுவாங்களாம்"
இப்போது அப்படியே நின்றாள்.
அடி மனதில் மெல்லியதாக ஒரு பயம் கவ்வியது. "இவ்வளவு நாளா ஏதோ போற வரப்பலாம் follow மட்டும் தான் பண்றான்னு பார்த்தா..பேச்செல்லாம் ரொம்ப dangerous ஆ இருக்கே...."
துணிகளை எடுத்த கையோடு மின்னல் வேகத்தில் கீழே இறங்கி விட்டாள். அவற்றை படுக்கையின் எறிந்தாள்.
"அதை ஏண்டி அப்படி போடுற?" என்று அதட்டினாள் அம்மா.
"ஐய்யோ அம்மா...கொஞ்ச நேரம் நொய் நொய்ங்காத" என்று கோபமாக கத்தினாள்.
"இப்ப என்ன சொன்னேன்னு இப்படி கத்துற?....table ல coffee வெச்சுருக்கேன் பாரு. எடுத்து குடி" என்று போய்விட்டாள்.
மாலினி சிரிது பதட்டமானாள். அமைதியாக coffee குடித்தவாரு யோசித்தாள். "இந்த rascal ல எப்படி deal பண்றது? அப்பாகிட்ட சொல்லிடலாமா? சொல்லனும்...precautionary யா சொல்லி வைக்கிறது நல்லது. நான் ஏன் இவ்ளோ nervous ஆ இருக்கேன்?? எதுக்கு பயப்படறேன்? நான் எந்த தப்பும் பண்ணலையே...தப்பு பண்ற அவன் கொட்டத்த அடக்கனும்"... என்று ஆழ்ந்த யோசனையுடன் இருந்தவளை அம்மாவின் குரல் உலுக்கியது.
" உன் mobile அடிச்சுட்டே இருக்கு டி...காதுல விழல?"
"Silent ல போடு மா...mood இல்ல பேச" என்று room மிற்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.
திங்கட் கிழமை வழக்கம் போல் பரபரப்பாக விடிந்தது. மாலினி அரக்க பரக்க கிளம்பினாள். ஆனால் நேற்று நடந்த மொட்டை மாடி நிகழ்வு மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. Bag ஐ எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள்...தடீரென்று ஏதோ நினைத்தவளாக மீண்டும் வீட்டிற்குள் போனாள்.
"மா..மாஆஆஆ"
"என்னடி? ஏன் திரும்ப வந்துட்ட? எதாவது மறந்துட்டியா?
" அந்த fork எடு..."
"Spoon வெச்சுருக்கேனே டி"
"கொஞ்சம் சீக்கிரம் கொடுமா...time ஆச்சு" என்று fork ஐ பிடுங்காத குறையாக வாங்கி கொண்டுச் சென்றாள்.
ஒரு வாரம் அமைதியாக கடந்தது. Tennis class முடிந்து வழக்கம் போல் parking ல் வண்டியை நிறுத்தினாள். மறுபடியும் ராகவ். Handle bar ஐ பிடித்திருந்த அவள் கையின் மிக அருகில் தன் கையை வைத்து பிடித்தவாரு...அவள் scootyயின் நேரெதிராக நின்றான்.
"ஓய்...எனக்கு பதில் சொல்லாம அன்னைக்கு ஓடிட்ட? சரி அத விடு. நாம dating போலாம்" என்று இளித்தான்.
மாலினி சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆங்ஙாங்கே ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
"ராகவ் கைய்ய எடு"
"நி பதில் சொல்லு"
"இப்ப கைய்ய எடுக்க போறயா இல்லையா" என்றால் அதட்லாக
"முடியாது. என்ன டி பண்ணுவ?"
"என்ன???...டீ யா? கோபத்தின் உச்சிக்கே போனாள்
சில நொடிகளில்..."ஆஆஆஆ" என்று ராகவ் உரக்க கத்தினான்.
அவன் சற்றும் எதிர் பாராதவாரு தன் jean pocket லிருந்து எடுத்த fork ஆல் தன் வண்டியை பிடித்திருந்த ராகவின் கையில் முழு பலத்துடன் ஒரே இழு இழுத்து விட்டாள்.
ராகவ் வலியால் துடித்து கையை உதரினான். அதற்குள் அருகில் இருந்த சிலர் அவர்களை நோக்கி வரத்துவங்கினார்கள்.
"உன் friends என்ன "hot" னு தான சொன்னாங்க? நான் "Violent" னு சொன்னதில்லையே?...போ...போய் சொல்லு " என்றாள். காளியாக மாறியிருந்தாள்.
சற்றும் எதிர் பாராத தாக்குதலால் ராகவ் முகம் வெளிரி போனது. அவமானத்தால் கூனி குறுகினான். "என்னாச்சுமா?" என்று colony வாசிகள் சூழ்ந்து விட்டார்கள். யாரோ phone செய்து ருக்மணி அம்மாளும் மாலினியின் அம்மாவும் அங்கு ஓடி வந்து விட்டனர்.
"என்னேரமும் உங்க பையன் இந்த பொன்ன தொந்தரவு பண்றான். நான் பாத்துட்டு தான் இருக்கேன்" என்றார் ஒரு பெரியவர் ருக்மணியிடம்.
எப்போதும் வாய் ஜவடா விடும் ருக்மணி செய்வதரியாது நின்றாள்.
"மாலினி வா வீட்டுக்குள்ள போலாம்" என்று அவள் அம்மா அவள் கைகயை பிடித்து இழுத்தாள்.
"இரு மா...aunty கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று ருக்மணி முன் நின்றாள்.
"Aunty...நான் sleeveless போடுறதுலாம் இருக்கட்டும். உங்க பையனுக்கு மொதல்ல பொண்ணுங்கள எப்படி பார்க்கனும்னு சொல்லிக் கொடுங்க. தம்மடிசுகிட்டு...bike அ வேகமா ஓட்டிட்டு ஊர் சுத்திகிட்டு பொம்பள பிள்ளைய பயமுறுத்துரவன்லாம் ஆம்பள இல்ல"
"மாலினி...வாடி" என்று விடாபிடியாக அம்மா கையை பிடித்து இழுத்தாள்.
"விடு மா" என்றாள் கோபமாக...
"நீங்க உங்க பையன ஒழுங்கா வளர்காததுக்கு...நான் sleeveless போட கூடாது...jeans போட கூடாது....உங்க பிள்ளைய கண்ணியமா வளர்த்திருந்தா...என்ன மாதிரி பொண்ணுங்களுக்கு ஏன் பிரச்சனை வரப்போகுது?"
"ஐயோ மாலினி வா"
"வடு மா என்னை"
இப்போது ராகவ் பக்கம் திரும்பினாள்
"உங்ம்மாவ hot ஆ இருக்காங்கன்னு எவனாவது சொன்னா உனக்கு பிடுக்குமா?"
இப்போது ருக்மணி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
"ஏண்டா எங்க உயிர வாங்குறீங்க. பொண்ணுங்களுக்கு பாதுகாப்பா இல்லனாலும் பரவால்ல. உபத்ரவம் பண்ணாதீங்க. உங்கள மாதிரி சில characters சால தான் மொத்த ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேரு. மஹா கவி இப்ப உயிரோடு இருந்திருந்தா...உங்ஙள மாதிரி attitude இருக்குர பசங்கள பார்த்து நொந்து போயிருப்பாரு"
இப்போது ருக்மணியை பார்த்தாள்.
"ஏன் aunty...நீங்களும் ஒரு பொம்பள தானே? உங்க மக வயசுல இருக்குற என்ன பத்தி என்னலாம் பேசுறீங்க?...உங்கள யாராவது daily உத்து உத்து பாத்து உங்க உடம்ப பத்தி comment பண்ணா உங்களுக்கு பிடிக்குமா??? அந்த வேலைய தான் உங்க மகன் daily பண்றான்".
ராகவ் முன் நின்றாள்.
" இன்னோரு வாட்டி என்கிட்ட இப்படி நடந்துகிட்ட..." என்று கோபத்தின் உச்சியில் அவள் வார்த்தைகள் தெரித்தது.
யாரொ அவள் தோளை மெதுவாக தொட்டதை உணர்ந்து திருப்பினாள். அது மாலினியின் அப்பா.
"அப்பா..." என்று அவரை கட்டி கொண்டு உடைந்து அழுதாள்.
"அழாத மா...அப்பா வந்துடேன்ல" என்று அவர் அனைப்பில் அவளை அழைத்துச் சென்றார்...ஒரு முறை ராகவை திரும்பி பார்த்தார்...அதில் ஆயிரம் அர்த்தம் ஒளிந்திருந்த்து.
இனி அவன், அவள் நிழலை கூட தொட மாட்டான்....