கண்ணீர் தேவதைகள்..

Image



#got_talks

கொஞ்ச நாட்களாக எதற்க்கும் நேரம் இருப்பதில்லை...total change over in my routine...இரவு படுத்ததும் உறங்கி போகிறேன். நெருங்கிய நட்புக்களை நலம் விசாரிப்பதற்க்கு கூட நேரம் கிடைப்பதில்லை...

ஆனால்...கேரளாவில் 23 வயதேயுடைய விஸ்மையா என்ற இளம் பெண்ணின் மரணச் செய்தி கண்ணில் பட்டது.

அந்த பெண்ணின் புகைப்படத்தை உற்றுபார்த்த போது "இவள் தேவதையோ?" என்று அசந்து போனேன். என்ன ஒரு கொடுமை? வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு மரணம் என்று அனைத்து ஊடகங்களும் செய்தியை ஒளிபரப்பி கொண்டிருந்தன.

"அட பாவிகளா...இத்தனை அழகான, படித்த, நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மனந்து கொள்ள நூறு சவரன் நகை...ஒரு ஏக்கர் நிலம்...Toyota Yeris Car உங்களுக்கு போதவில்லையா?"

பெற்ற வயிரு என்ன பாடு படும்?

Vismaya "Bachelor of ayurvedic medicine and surgery" student. தான் மருத்துவராகும் கனவு சிதைந்தது மட்டுமல்லாமல் உயிரே போய் விட்டதே??

ஒரு பெண்ணிற்கு எதற்காக திருமணம் செய்து வைக்கின்றோம்? தகப்பனுக்கு அடுத்தபடியாக அவளை பாதுகாப்பாக மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்கு தானே? திருமணங்கள் வியாபரமாகி போனதேன்? இந்த சின்னஞ்சிறு பெண்ணின் மரணத்திற்கு யார் பொருப்பேற்க போகிறார்கள்?

வரதட்சணை கொடுத்து கட்டி கொடுத்த பெற்றோரின் குற்றமா? வரதட்சணை வாங்கிய மாப்பிள்ளை வீட்டாரின் குற்றமா? இல்லை...வாங்கியது போதவில்லை என்று விஸ்மயாவை அடித்து உதைத்து அவளை துன்புறுத்தியிருக்கும் அவள் கணவன் கிரன் குமாரின் குற்றமா?? இப்படி பட்ட குற்றங்களுக்கு தண்டனை மிகவும் கடுமையாக்கபட வேண்டும்.

கண்மணிகளே..."DON'T BE A VICTIM OF DOMESTIC VIOLENCE" தன்மானத்தோடு எதிர்த்து நில்லுங்கள...மேலே கை வைக்கும் கரத்தினை உடைத்து விடுங்கள். அது யாராக இருந்தாலும் சரி.

ஆண்பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே பெண்களை மனுஷியாய் மதிக்க...நேசிக்க கற்று கொடுங்கள். Kiran Kumar போன்ற அரக்கர்கள் உருவாவதற்கு பெற்றோர்களே முதல் காரணம். அவர்களின் பேராசை காரணம். யாரோ சிலரின் பேராசையால் ஒரு உயிர் பிரிந்தது எந்த வகையில் ஞயாயம்?

என்னால் உறங்க முடியவில்லை...

மீண்டும் மீண்டும் அந்த முகம்...விஸ்மயா....

என்னை மன்னித்துவிடு...உன் இறப்பு செய்தியை படிக்க மட்டும் தான் என்னால் முடிகிறது...வேறு ஒன்றும் செய்ய இயலாமைக்கு வெட்கப்படுகிறேன்...

ஓம் ஷாந்தி.....

Anandhi Muthukumaran