கவிதைகள் பலவிதம்..!

Image

மழை ------- ஜன்னலோரத்தில் நொறுக்குத் தீனி தின்றபடி மழையை ரசித்துக் கொண்டு சிலர் இருப்பிடம் இழந்து ஊர்ப்பள்ளிக் கட்டிடத்தில் ஒதுங்கி மழையை நொந்தபடி பலர்* வறுமைக் கோடுகள்* ---------------------------- ஆலமரத்தடியில்... கைரேகை பார்ப்பவன் கையிலும் பலன் சொல்லுபவர் கையிலும் வறுமைக் கோடுகள்* தவி(ர்)ப்பு ------------------------ என்னவளே நீ வாசிக்க நினைத்தாய் நான் செய்தி யானேன் நீ வடிக்க நினைத்தாய் நான் கவிதை யானேன் நீ செதுக்க நினைத்தாய் நான் சிற்பமானேன் நீ காதலிக்க நினைத்தாய் நான் காதலன் ஆனேன் நீ மறக்க நினைத்தாய் நான் பைத்தியம் ஆனேன் சுரண்டல் ----------------------- உழைப்பு சுரண்டப்படுகிறது... கூட்டை கலைத்து தேனெடுப்பு* அழைப்பு -------------------------- ஆடைகளை அவிழித்தெறி ஒருவரையொருவர் அணிந்து கொள்ளலாம். ஹைக்கூ ---------------------- அழகாகப் பூக்கிறது குழந்தையின் முகத்தில் புன்னகை தினந்தோறும் பூக்கின்றன பறிக்கத்தான் முடியவில்லை நட்சத்திரப் பூக்களை கனவு ------------------- இங்குதான் தினமும் தௌpவாய் பேச முடிகிறது அவளோடு... கனவு அறிவுரை ---------------------- மனிதா... நீ உழைக்காமல்... சோம்பேறியாய் இருந்து விடாதே... முதலில்... முதுகில் பாரம் சுமக்கும் நத்தையை பார்...* .