சித்திரைப்பெண்ணாள் 2023

Imageசித்திரைப்பெண்ணாள்
இத்தினம் பிறந்தாள்.
மங்கலம் பொங்க
மாநிலம் செழிக்க
காணுமிடமெல்லாம் வளமை
காட்சிகளிலெல்லாம் மனநிறைவு
வீடெல்லாம் அன்பு மணம்
வீசட்டும் தினம் தினம்.
நாடெங்கும் மானுடம் தழைக்கட்டும்.
அதில் திளைக்கட்டும்.
சமாதான உணர்வுகள்
நிறையட்டும் இதயமெல்லாம்.
கள்ளமில்லா முறுவல்
தவழட்டும் எப்பொழுதும்.
எதையும் ஏற்கும் மனமும்
எவரையும் போற்றும் குணமும்
தொடரட்டும் இனிதாக.
வேண்டாத நினைவுகளைப் புறந்தள்ளி
உரக்கச் சிரிப்போம் உல்லாசமாய்.
வசந்தத்தை வரவேற்போம் நம் வாசலுக்கு.
அனைவருக்கும் இனிய உளமார்ந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Mrs.Susila,Balalok Tamil Teacher