விடியல் தேடி போகும் தமிழினமே

Imageதாயே நீ சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீர் இன்று
வெள்ள பெருக்காய் ஓடுகிறது,
அதை நிறுத்த முடியாமல் தமிழகம் தவிக்கிறது.
மனல் கொல்லை, மேம்பாலம், ஏரி ஆக்கிரமிப்பு என்று தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை அபகரிக்கும் மக்கள்,
மாக்களாக மாறி வருகின்ற போது., கீழ் நோக்கி செல்லும் தமிழகமே
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா" என்று கூறிய காலம் போய்,
தலை குனிந்து நின்றபடி வெட்கம் வேதனையோடு..
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இப்போது இயல்பு வாழ்கைக்கு போறாடுகிறது,
விடியல் தேடி போகும் தமிழகமே
நீ உயிர்தெழுவாய் உயர்ந்தெழுவாய் இந்த புவியில்.
ஒரு உதாரணமாய் என்றைக்கும் இருப்பாய்,
வாழ்க தமிழகம் வளர்க தமிழ்.

Image

Diana Poongkodi