காதல் கவிதை என்னவனுக்கு சொல்..!..!
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்கன்றினைப் போல காளை அவன் மனம் தேடி பாவை என் மனம் அலைகிறது என்னவனிடம் இதையும் சொல் கிளியே இனிப் பேசும் முதல்வார்த்தை அவனோடு தான் என்றும் அவனின் இரக்கமான நினைவுகளை என் இதயவங்கியில் வட்டியில்லாமல் வைப்புச் செய்து காத்திருக்கிறேன் இதையும் மறக்காமல் சொல் கிளியே பசிமறந்து பஞ்சணையும் வெறுத்து கட்டாந்தரையில் கண்விழித்து என் வசந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன் தினமும் என் உதடுகள் அவன் பெயரை மட்டுமன்றி வேறெவர் பெயரும் உச்சரிக்கவில்லை என் மான்விழிகளில் அவன் பிம்பம் தவிர வேறெந்த உருவமும் தெரியவில்லை இவையனைத்தையும் அவனிடம் சொல்வாயென என் வளர்ப்புக் கிளியே உன்னை தூதனுப்புகிறேன் யாவற்றையும் மறக்காமல் என்னவன் செவிகளில் உன் கிளி மொழியில் சொல்லிடுவாயா.? கவிஞர்:வெண்ணிலா.