யாரும் வாழ தகுதியற்ற அந்த நகரத்து வீதிகளில்.....

Image

அந்தப் பெரு நகரத்தின்
வீதிகளில் எண்ணற்ற
கால் தடங்கள்.
யூகிக்க முடியவில்லை
அவற்றின் பதிவுகள் எத்தகையதென்று..
சில உயிர் பயத்தில் ஓடியவை..
சில உயிரைப் பறிக்க துரத்தியவை.
சில உயிர்மூச்சை சுயநினைவின்றி பறிகொடுத்தவை.
சில கொடூரங்களை பதிவு செய்தவை..
சில கொடூரங்களுக்கு துணை நின்றவை.
பல எல்லாவற்றையும் கண்டும் காணாமல் கடந்து போனவை.
மூன்று நாட்கள் தலைப்புச் செய்தியில் தடம் பதித்த கால்தடங்கள் மெல்ல மெல்ல புழுதியில் மறையத் தொடங்கி விட்டன.
ஏதோ சில பிஞ்சுக்குழந்தையின் பாத தடங்கள் மட்டும் அழுத்தமின்றி யாரும் வாழ தகுதியற்ற அந்த நகரத்து வீதிகளில்.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
Courtesy - Muduvai Hidayath