விடைகொடு கொரோனா..........

Image

தேசம் விட்டு தேசம்

கண்டம் விட்டு கண்டம்

சுற்றுலா நீ வந்தாயோ?

பார் முழுதும் உன் பெயரை

பாராயணம் செய்கிறதே

ஊடகமெல்லாம் உன்முகமாய்

உலகமெலாம் பிரபலம் நீயாக

எத்தனை தவம் கிடந்தனையோ?

சுத்தத்தையும் சுகந்தத்தையும்

உயிர்பெறச் செய்த நீ

உயிர் கொல்லியானதேனோ?

உயிர் பயம் கூட்டி

உன்னால் பீதியடைந்தோர்

எள்ளி உன்னை நகையாடி

ஏளனம் செய்தோரை

பஞ்சாய் பந்தாடிய நீ

என்னிடம் கவிதையானாய்!

இன்னும் எத்தனை உயிர்தனை

உன்னுடன் அழைப்பாயோ

யாமறியோம் பராபரமே

பாரபட்சம் ஏதுமின்றி

அனைவரையும் தீண்டும் உன்னிடம்

காசினி கற்றிட வேண்டும்

தீண்டாமை ஒழிப்பு தன்னை

நிலை என்று நினைத்த

உயிரையும் பொருளையும்

நொடிபொழுதில் நொறுக்கி விட்டாய்

நீ இவ்வுலகின் அழிவா?

அல்ல புதியதோர்

உலகத்தின் தொடக்கமா

புரியவில்லயே??

பிரியும் போதுனக்கு

பிரியமுடன் விடை தருவர்

எம் மனித உறவுகள்........

விரும்பியே சொல்கிறேன்

விடைகொடு விரைவில்!
- பைஜுர் நிஷா
Courtesy - Muduvai Hidayath