சமய நல்லிணக்கம் தேடி

Image


ஆம்.......
உலகெங்கும் உன்னைத்
தேடித் திரிகிறேன்
நீயோ
கானல் நீராய் மறைகிறாய்....
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும்
ஏன் ஒவ்வொரு
தெருவிலும் உன்னைத் தேடி அலைகிறேன்
எங்கு சென்று ஒழிந்தாயோ!
வரலாற்றில் நீ இல்லாத
இடமே இல்லை
என்னும் நம்பிக்கையுடன் மேலும் திரிகிறேன்
அய்யகோ...
எங்கும் ஜாதிக் கலவரம்
அய்யகோ...
எங்கும் மதக்கலவரம்
எதிலும் மதச்சாயம்
இவை எல்லாம் என் நம்பிக்கையைச் சாய்த்தது
என் தேடல் பொய்த்தது
ஓய்ந்து தேய்ந்து
அயர்ந்தே போனேன்.....
பின்னர்
ஒரு புயல் வெள்ளம்........
அங்கு கிடைத்தாய் நீ
மனிதநேயம் என்னும்
மரு உருவில்
ஜல்லிக்கட்டில்,
குடியுரிமைப் போராட்டங்களிலும்,
வெவ்வேறு உருவில்
நீ தோன்றினாய்
உன் மாற்றுருவில்
மகிழ்ந்து போனேன்!
புது நம்பிக்கை பிறந்தது
உன் புத்துயிரை கண்டு.
நீ மாயவில்லை
நீ ஓயவில்லை
நீ ஒழியவும் மாட்டாய்!

- பைஜுர் நிஷா

Courtesy :Muduvai Hidayath