கொரோனா

Image


கொடிய கொள்ளை நோய் கொரோனா
கட்டுப்பட்டு இல்லம் இருப்பது சிறப்பு !

அமெரிக்காவில் இறப்பு ஆயிரங்களில்
அங்கு தொற்று பரவியது இலட்சங்களில் !

இத்தாலி முதலிடம் பிடித்து உள்ளது
இறப்பு முடியவில்லை தொடருது தினமும் !

இந்தியா பரவாயில்லை என்று இன்று
என் மனம் நினைத்து மகிழ்கின்றது !

உலக நாடுகள் அனைத்தையும் தொற்றியது
ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை !

வல்லரசு நாட்டிற்கே வழி தெரியவில்லை
விழி பிதுங்கி தவித்து வருகின்றது !

சீனாவில் கொரோனா ஓய்ந்தது என்று
சிறிது தளர்த்தியதும் தொற்றியது மீண்டும் !

ஊரடங்கை மதித்து நாம் நடந்தால்
உயிரடங்கை தவிர்த்து நாம் வாழலாம் !

அலட்சியம் வேண்டாம் கவனம் வேண்டும்
அலட்சியதால் அல்லல் பட வேண்டும் !

வரும்முன் காப்பது நன்மை தரும்
வந்தபின் வருந்துவது தீமை தரும் !

வீட்டிலேயே இருப்பது சிரமம்தான்
வேறுவழியில்லை இருந்தாக வேண்டும் !

. கிடைத்த நேரத்தை பயனுற பயன்படுத்துவோம்
கிடைத்த நூலை வாசித்து மேம்படுவோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி