குழந்தைகள் விரும்பும் இனிப்பு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள் பச்சரிசி - 2 கப் (250 கிராம்) வாழைப்பழம் (மஞ்சள்) - 4 கருப்பட்டி (அல்லது) சர்க்கரை - தேவைக்கேற்ப ஏல்க்காய் தூள் -சிறிதளவு தேங்காய் - 1/2 கப் (வருத்து துருவியது) செய்முறை பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஊறவைத்த அரிசியை பணியார பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். (அதிகமாக தண்ணீர் விடக்கூடாது) அரைத்த மாவுடன் வாழைப்பழம், கருப்பட்டி, ஏலக்காய் பொடி, தேங்காய் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த கலவையை அரை மணிநேரம் கழித்துக் குழிப்பணியாரச்சட்டிய்யில் எண்ணெய் ஊற்றி மிருதுவான , சுவையான இனிப்பு குழிப்பணியாரம் செய்யலாம்.