நெருப்பு

Image"அசைக்காத டீ...

கண்ணை மூடாதே....அழிஞ்சிடும்"

எச்சரித்தாள் தோழி.

கவனமாக கண்களை மூடாமல் இருந்தாள் மாலவிகா. இன்றைக்கு double அழகாக தெரிய வேண்டுமே....பெண் பார்க்க வருகிறார்கள்...அதுவும் காதலன் வீட்டிலிருந்து. மூன்று வருட காதல் கை கூட போகிறது. மனது சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. எத்தனை நாள் கனவிது. ஒரு வழியாக போராடி ஜெய்தாகி விட்டது.

"Hi".."Hello"...என்று துவங்கி...coffeeயில் ஆரம்பித்து காதலில் முடிந்தது.

Rajesh ஐ பிடிக்காதவர்களே இருக்க முடியாது. Smart guy. மாலவிகா அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல. சரியான ஜோடி என்று சொல்லாதவர்களே கிடையாது.

"Paint அடிச்சு பட்டி லாம் பாத்துடியா?" என்ற அவன் குரல் கேட்டு திரும்பினாள். அவன் ஒய்யாரமாக கைகளை கட்டி கொண்டு அவள் room வாசலில் நின்று கொண்டிருந்தான். "Hey வெளிய போ Rajesh" என்று சினுங்கியவளை அம்மா அடக்கினாள்.

சத்தமாய் வாய் விட்டு சிரித்தான். அவளை வெறுப்பேற்றிய திருப்த்தியில் நகர்ந்தான்.

"என்னடி நீ? அவன் அம்மாப்பாலாம் இருக்காங்க...எப்பவும் போல இப்டி கத்துர?" என்று அதட்டிவிட்டு hall லுக்கு சென்றார் அம்மா.

அவர்களுக்கு மாலவிகாவை மிகவும் பிடித்தது.

"அப்புறம் மத்த விஷயங்கள்லாம் பேசலாமா?" என்று ஆரம்பித்தார் Rajesh அப்பா.

"எங்களுக்கு பெரிய expectations எதும் இல்ல. But எங்க relatives எதிர்பார்ப்பாங்க. Rajesh எங்களுக்கு only son. அதுக்கேத்த மாதிரி குறையில்லாமல் செஞ்சுடுவீங்கன்னு நம்பறோம்" என்றார்.

Coffe tiffin முடிந்ததும் கிளம்பி விட்டார்கள்.

யோசனையுடன் அமர்ந்திருந்தாள் மாலவிகா. அவளும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

மறுநாள் காலை எழும் போதே மனதில் ஏதோ பாரமாய் உணர்ந்தாள். Mobile ஐ எடுத்தாள். "Rajesh..இன்னைக்கு evening usual place க்கு வரியா? பேசனும்"

"உங்க வீட்டுக்கே வரேனே டீ..."

"வேனாம்...evening 6 க்கு வந்துடு"

"6.30 ஆகும். Is it ok?"

"OK fine. வந்துடு".

மாலை சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.

"Yes sweet heart...madam க்கு என்ன அவ்ளோ urgent? என்று புண்ணகைத்தவாரே கேட்டான்.

அவள் தலையை குனிந்தபடி T shirt மேல் சுற்றியிருந்த stole லின் நுனியை கை விரலால் சுற்றி கொண்டிருந்தாள்.

"இப்ப உனக்கு என்ன பிரச்சனை?? உம்முன்னு இல்லாம வாய துரந்து பேசு" என்று பொருமையிழந்து அதட்டினான்.

"பேசுரதுக்குலாம் ஒன்னுமில்ல" என்று எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

"Oh god...wats your problem now?...come on speak" என்று அவள் முகத்தை திருப்பினான். "நமக்கு set ஆகாது Rajesh"..

"But why" அவன் முகம் கோபத்தால் சிவந்தது.

"நம்ம கல்யாணம் எப்டி நடக்கனும்னு நான் ஏற்கனவே உன் கிட்ட பேசிருக்கேன்...I don't believe in give and take policy in wedding arrangements. Are we commencing any business?"

"Oh god stop it...பேசிகிட்டே போற? என்னமோ நீ மட்டும் தான் முற்போக்கு சிந்தனைவாதி மாதிரியும் நான் ஏதோ Hyder Ali காலம் மாதிரி பேசுற? See its all in the game. என் அம்மா அப்பா ஆசைக்காக கேட்குறாங்க.. After the wedding we are going to live our own life abroad. ஒன்னும் இல்லாத விஷயத்த பெருசாக்குர நீ"

"No. Not at all. This is my only dream about my wedding. கல்யாணம் நா ஆடம்பரமா செஞ்சா தான் ஆச்சு...அப்ப தான் society ல மதிப்பாங்க நா...எனக்கு அப்டி பட்ட கல்யாணம் தேவை இல்ல"

"Over ஆ பேசாத மாலு...கடுப்பாகிடுவேன்" என்று முறைத்தான்.

அவன் கைகளை பிடித்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாரே.."Rajesh...நீ என்ன மதிக்குறல்ல? என்று குரல் தழுதழுக்க கேட்டாள்.

" What a stupid question is this?!! என்று அவளை கவலையுடன் பார்த்தான்.

"என் உணர்வுகள நீ மதிச்சா தான்...நீ என்ன மதிக்கிறதா அர்த்தம். ஆடம்பரமா கல்யாணம் செய்துகறதுல எனக்கு இஷ்டம் இல்ல Rajesh. simple ஆ temple la கல்யாணம் செஞ்சுகிட்டு poor and needy institutions க்கு நம்ம கைய்யால அன்னைக்கு எதாவது contribute பண்ணனுங்கறது தான் என் ஆசை. அது உனக்கு ஏற்கனவே தெரியும்"

"But we can do this during some other occasion also மாலு மா"...

" But why not for our wedding Rajesh?"

"நம்மள மாதிரி ஆளுங்க wedding லாம் simple ஆ பண்ண மாட்டாங்க Malu..."

"நம்மள மாதிரினா...எனக்கு புரியல"

"I mean...it can't happen your way...and it ends there..." என்று கையை உதறி கோபமாக bike seatஐ குத்தினான்.

"நாம ஏன் முன்னோடியா இருக்க கூடாது ? இது welcome பண்ண வேண்டிய விஷயம். கோப பட வேண்டிய விஷயமில்ல Rajesh".

"But you cannot expect that from everyone. நீ புரிஞ்சுக்க மாட்ற. என் friends and relatives பாதி பேரு abroad லருந்து வருவாங்க. அவங்களலாம் கோவில் குளத்துல நிக்க வைக்க முடியாது."

"நீ தான் என்ன புரிஞ்சுகல. Right from the start இந்த விஷயம் நான் உன் கிட்ட discuss பண்ணிருக்கேன்"

"I never thought you are this serious!!!"

"I am serious". அவள் குரல் உயர்ந்திருந்தது.

சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது

" I'm sorry Malu. Arguments விட்டுட்டு நடக்க வேண்டியத பாரு" என்று bike ல் சாவியை மாட்டினான்.

"முடியாது Rajesh..." என்றாள் அழுத்தம் திருத்தமாக.

கோபத்தின் உச்சியில் Bike ஐ ஒரே உதையில் start செய்து பறந்தான்.

நேராக கோவிலுக்கு சென்றாள். அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள். நேரம் போனதே தெரியவில்லை. அப்பா...அம்மா...Rajesh mobile லில் அழைத்திருந்தார்கள். அவள் பேசவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா முறைத்தாள். "உன் மனசுல என்ன நெனச்சுட்டிருக்க?! Rajesh வந்தான்" என்று ஆரம்பித்து அவளை திட்டி தீர்த்தாள். "பொண்ண குட்டி சவரா வளர்த்திருக்கீங்க. நல்ல இடம் கை நழுவிடும் போல" என்று அப்பா மேல் பாய்ந்தாள். அப்பா மொளனமாக இருந்தார். "நீ சாப்ட்டு படுமா. Let's discuss in the morning" என்றார்.

மறு நாள் அப்பா room மிற்கு சென்றாள். "வா டா... சொல்லு...என்ன முடிவெடுத்துருக்க??" என்றார்.

" My decision is final பா"

" ம். But ஆரம்பதிலேயே நீ Rajesh க்கு strong ஆ புரியவெக்கலையா?"

"புரிஞ்சுகிட்டான்னு நெனச்சேன் பா" என்று விசும்பினாள்.

"அழாதே டா. After effects உனக்கு ரொம்ப difficult ஆ இருக்கும். Face பண்ணுவியா?"

"எனக்கு நீங்க இருக்கீங்களே பா....இந்த மாலவிக்கா mind wave க்கு ஏத்த மாதிரி...இன்னொரு Rajesh நிச்சயமா பிறந்திருப்பான் பா. என்னோட கல்யாண விஷயத்துல எனக்கு மாற்று கருத்தே இல்ல"

அப்பா புண்ணகைத்தார். நம்பிக்கையூட்டும் வண்ணம் அவள் தோளை தட்டிக் கொடுத்தார். அவள் தெளிவாக இருந்தாள்.

"Rajesh calling" என்று mobile அடித்துக் கொண்டே இருந்த்து. அவள் எடுக்கவில்லை.

நெருப்பு எதனோடு சேர்ந்தாலும் அதன் தன்மை மாறுவதிலை. அது போல் தான் சிலரின் கொள்கைகளும் என்றும் மாறாது....

Anandhi Muthukumaran