அபுதாபியில் ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கும் விழா! சசி தரூர் MP - க்கு வழங்கப்பட்டது

Image

அபுதாபியில் ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கும் விழா! சசி தரூர் MP - க்கு வழங்கப்பட்டது... அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் சார்பில் ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கும் விழா 28/02/2020 வெள்ளிக் கிழமை மதியம் 3மணி மணியளவில் நடைபெற்றது. அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் தலைவர் பாவா ஹாஜி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரஷீது வரவேற்புரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவான முஸ்லிம் யூத் லீக் கேரள மாநிலத் தலைவர் பானக்காடு சைய்யத் முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் விழாவை துவக்கி வைத்தார். இந்தியன் இஸ்லாமிக் சென்டர் சார்பில் முதலாவது ஷிஹாப் தங்ஙள் விருதை திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசி தரூர் எம்.பி.பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார். விழாவில் நோபிள் குழுமங்கள் நிர்வாக இயக்குனர் ஷாஹுல் ஹமீத்,இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய்ய தலைவர் நடராஜன், அபுதாபி கே.எம்.சி.சி. தலைவர் முஹம்மது குஞ்சு,பொதுச் செயலாளர் சுக்கூர் அலி,அஷ்ரப் பொன்னானி,அப்துல்லாஹ் ஃபரூக்கி,மொய்தீன்,சமுதாயப் புரவலர்,அய்மான் சங்க துணைத் தலைவர் முஹம்மது ஜமாலுத்தீன்,அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,அமைப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,அபுதாபி மண்டல ஊடகத் துறை செயலாளர் பூந்தை ஹாஜா,விழாக்குழு இணைச் செயலாளர் லெப்பைத் தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Muduvai Hidayath