இதுவும் கடந்து போகும்!

Image

“தனித்திருப்பதில் ஒன்று படுவோம்.. தன்னைப் பேணி தன்னையும் மண்ணையும் காப்போம்”

பொதுவாக எந்த ஒரு மாற்றத்தையும் மனம் உடனே ஏற்றுக் கொள்ளாது. அதனால் பிரச்னையை அதன் பரிணாமங்களை சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதை கேலி கிண்டல் செய்து தன்னை விட்டும் தள்ளி வைக்க முயற்சிக்கும் அல்லது பிரச்னையை ரொம்ப ரொம்ப பெரிதாக கற்பனை செய்து அது தன்னை மீறியது, தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அதை தவிர்க்கப் பார்க்கும்.

உண்மையில் இந்த இரண்டு வகையிலும் பிரச்னையை மட்டும் அல்ல பிரச்னைக்கான தீர்வையும் சேர்த்தே மனம் தள்ளி வைக்கிறது.

அது தவிர ஒரு தீர்வு என்பதை மனம் எப்படி எதிர்பார்க்கும் என்றால், இதற்கு முன் இப்படியான ஒரு பிரச்னைக்கு தீர்வு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் இப்போது சந்திக்கும் பிரச்னைக்கும் தீர்வு இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கும். இன்றைய காலகட்டங்களில் நம் முன்னாள் இருக்க கூடிய பிரச்னை என்பது ஒரு “வைரஸ்”. ஒரு disease என்பதை நீங்கள் அறிவீர்கள். வைரஸ் தாக்கத்தால் ஒரு நோய் பரவுகிறது என்றால் அதற்குத் தீர்வு ஒரு Vaccine அல்லது அதனால் ஏற்படும் உடல் பாதிப்பிற்கு மாத்திரை மருந்து இருக்கனும். அது தானே சரியான தீர்வாக இருக்க முடியும் என்றே பெரும்பாலும் மனதிற்குத் தோன்றும். அப்படி இல்லாமல் சொல்லக் கூடிய வேறுவிதமான தீர்வுகளை சட்டென்று மனதால் ஏற்றுக் கொள்ள முடியாது . நம்முடைய மனதில் homeostasis என்று சொல்லக் கூடிய ஒரு stabilizing system இருக்கிறது. இது, தான் அறிந்த வகையில் இல்லாமல் வேறு எதைச் சொன்னாலும் அது தனக்கு நல்லதா தீயதா என்றெல்லாம் பார்க்காமல் மொத்தத்தில் அதை தனக்குள் எடுத்துக் கொள்ளாமல் அதை தவிர்க்க முயற்சிக்கும். அந்த நேரங்களில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு சொல்லப் படுவது தனது நன்மைக்கே என்பதை புரிந்து கொண்டால் அதை மனம் இலகுவாக ஏற்றுக் கொள்ளும்.

நம்முன் இப்போது இருக்கும் பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு preventive measure மட்டும்தான். அவை social distancing ம் stay@home ம் தான். அது தான் இந்த spreading chain னை break பண்ணும், இது நமக்குப் புரியாமல் இல்லை, ஆனால் பிடிபடாமல் இருக்கிறது. ஏனென்றால் ஒரு வைரஸ் பரவலுக்கான தீர்வாக இதனை நாம் இதற்கு முன் செய்தது இல்லை. வீட்டில் இருப்பது என்பது adopt பண்ண முடியாத ஒரு விஷயம் இல்லை. பேரிடர் காலங்களை சந்திச்சிருக்கிறோம். பெரும் வெள்ளம், சுனாமியை தாண்டி வந்திருக்கிறோம். வெளியேவே போக முடியாத சூழல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இன்றைக்காவது online ல் எல்லாமே செய்ய முடிகிறது. அத்தியாவசியமாக இருந்தால் தகுந்த பாதுகாப்போடு வெளியே போய்க் கொள்ளலாம் என்று மனதை convince பண்ணிக் கொள்ள முடிகிறது. ஆனால் அந்தமாதிரி இல்லாமல் ‘on compulsion’ வீட்டை விட்டே வெளியே வரமுடியாத சூழலைக் கூட வெகுசீக்கிரம் தாண்டி வந்திருக்கிறோம். அதுமட்டுமில்லை..

இன்றைக்கு உலகமே குடும்பம்னு இருந்தாலும் just a generation ago குடும்பமே உலகம் என்று தான் வாழ்ந்திருந்திருக்கிறோம். So அந்த lifestyle ஐ ஒரு இரண்டு, மூன்று வாரத்திற்கு ஒரு cure ஆக நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதை சரியாக நம் மனதிற்குப் புரிய வைத்தால் நிச்சயம் அதை adopt பண்ணுவது ஈஸியாக இருக்கும். அடுத்து நம் எல்லோருமே முன் வைக்க கூடிய, ஏக்கமாய் கேட்க கூடிய ஒரு கேள்வி எப்போ இந்த வைரஸ்க்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பாங்க அப்படிங்கறது தான்.

மருத்துவர்கள் சீக்கிரம் தடுப்பு ஊசியை கண்டிபிடிப்பது ஒரு பக்கம் இருக்க நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க்க் கூடிய தடுப்பு ஊசியை நாம் முதலில் பார்ப்போம். நம்மிடம் இருக்கும் Immunity system என்னன்னு புரிஞ்சிக்குவோம். ஒரு பிரச்னையை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது அதை சமாளிக்கக் கூடிய immunity நமக்குள் develop ஆகாமலே இருந்து விடும். அதே நேரம் ஒரு பிரச்னையை அதிகமாக கற்பனை பண்ணும் போது. அதிகமாக அதை பற்றி மனதிற்குள் எடுத்துக் கொள்ளும் போது பதற்றம் படபடப்பு இயலாமை நமக்குள் ஏற்பட்டு, அதனால் கார்டிசால் எனும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரக்கத் தொடங்கி விடும். அந்த ஹார்மோன் இன்னும் அதிகமான பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நம்முடைய immunity யை அது affect பண்ணி விடும். Which shouldn’t happen.. பின் என்ன செய்ய வேண்டும் என்றால், பிரச்னையைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பரிணாமங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளையும் மனதில் எடுத்து இந்தத் தீர்வுகளை நான் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையை prevent பண்ணலாம்.. solve பண்ணலாம்… அப்படிங்கறதையும் மனதில் எடுக்கும் போது the solution is bigger than the problem. I am more than this problem at hand அப்படிங்கற தன்னம்பிக்கை நமக்குள் ஏற்படும்போது மனம் நிதானப் படும். அந்த நேரம் (Endorphins) எண்டோஃபின்ஸ் என்கிற ஹார்மோன் நமக்குள் சுரக்கும். அது நம் immunity ஐ அதிகரிக்கும். இந்தத் தடுப்பூசியை நாம் ஏற்படுதிக் கொள்வது நம்ம கையிலேதான் இருக்கிறது. ஹாவாய் தீவுகளிலே ஹோப்பனோப்பனோ அப்படிங்கற தெரப்பி ஒன்று பிரசித்தம். பெயர் தான் இப்படி இருக்கிறதே தவிர நமக்கு வெகு பரிச்சயமான நான்கு வாத்தைகளைக் கொண்டதே இந்த தெரப்பி. I like you, I’m sorry, forgive me, thank you என்று திரும்பத் திரும்ப மனம் ஒன்றிச் சொல்வதே அந்தத் தெரப்பி.

தன் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் தன் மண்ணிற்கு அழுத்தம் கொடுப்பதை நேர்செய்வதற்காகவும் ஒரு நேர்மறை சிந்தனையாக சொல்லப்படும் இந்த வார்த்தைகள் மனதிற்கும் மண்ணிற்கும் இதம் தரும் என்கிறார்கள் why not we try that too. எத்தனையோ கடந்து வந்திருக்கிறோம்.. இதையும் கடந்து செல்வோம் அதன் தடம் பதிக்க விடாமல்.. எல்லாவற்றிற்கும் மேல், நம்பிக்கை கொள்வோம்.. நம்மீதும் நமக்கு மேல் இருக்கும் சக்தியின் மீதும். நம்பிக்கை தானே வாழ்க்கை.!

பாக்ஸ் மெஸெஜ்:-

இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படும்போது முதலில் எழும் பிரச்னை உணவு உறைவிடம் என்பதே. வேண்டியவர்களுக்கு அத்தியாவசிய உணவிற்கு ஆவண செய்துள்ள அரசு உறைவிடத்திற்கும் காலம் தாழ்த்தாமல் வழி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் சில பள்ளிகளும் கல்லூரிகளும் தேவையானவர்களுக்கு அடைக்கலமாக இருந்தது போல் தற்போதும் இருக்க வேண்டும். அரசும் தொண்டு நிறுவனங்களும் ஆவண செய்யுமா?

Dr.Fajila Azad

(International Life Coach – Mentor – Facilitator)

Courtesy:Muduvai Hidayath