ஷார்ஜாவில் பூமி நேரம் அனுசரிப்பு

Image

ஷார்ஜா : ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது.

உலகில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 28-ஆம் தேதி பூமி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளன்று மக்கள் அனைவரும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து பூமியில் ஏற்படும் வெப்பமயமாக்கலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் தேவையற்ற வகையில் எரியும் விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ஷார்ஜா அவர் ஓன் ஆங்கிலப் பள்ளிக்கூட மாணவர்கள் ஹாதிம் மௌலா, ஹாரித் முஹம்மது ஆகியோர் தனது தாயார் ஜாஸ்மின் அபுபக்கருடன் தங்களது வீட்டில் விளக்குகளை அணைத்து பூமி நேரத்தை அனுசரித்தனர்.

அமீரகத்தில் தற்போது பள்ளிக்கூடங்களுக்கு கொரோனா வைரசை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை அவர்கள் பயனுள்ளதாக கழித்தனர்.

Image

Muduvai Hidayath