ஷார்ஜாவில் நடந்த மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஷார்ஜா : ஷார்ஜா எம்.டி.எஸ். நிகழ்வு மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூம் இணையவழி வாயிலாக 23.10.2020 வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி சமூக சேவகர் கவிதாயினி கலாவிசு தலைமை வகித்தார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
சென்னை டாக்டர் சரிதா தாமோதரன் (Clinical & Radiation Oncologist) பங்கேற்று மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கப்படங்களுடன் விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது.
ஷார்ஜா எம்.டி.எஸ். நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சமூக ஆர்வலர் கல்லிடை ஆ. முகமது மைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
உலக தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஸ்ரீ ரோஹினி நிகழ்வினை சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியானது www.youtube.com/GTM786 என்ற யூடியூப் சேனல் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனால் இந்தியா, அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்கள் நேரடியாக நிகழ்ச்சியினை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.
- Raji Patterson