வீட்டில் இருக்கும் நேரத்தைஉடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

Image


துபாய் : துபாயில் வீட்டில் இருக்கும் நேரத்தை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் செய்யது அலி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் திடமாக வைத்திருக்க முடியும் என கூறுகிறார் செய்யது அலி.

மேலும் தனது வீட்டின் தாழ்வாரத்தில் 15 கிலோ மீட்டர் தூரமும் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

எனவே பொதுமக்கள் வீட்டில் சோர்ந்து இருக்காமல் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Muduvai Hidayath