சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக தேர்வு செய்யப்பட்ட துபாய் தமிழ் மாணவி
துபாய் : சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி தஸ்னீம் அபுதாஹிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துபாயில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 12-ஆம் வகுப்பு படித்து வருபவர் தஸ்னீம் அபுதாஹிர் (வயது 17).
இவர் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அபுதாஹிர் துபாய் மாநகரில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஓவியம் வரைவதிலும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொண்டு வருவதிலும் மிகவும் ஆர்வம் உடையவர். இதற்காக இவர் பல்வேறு சர்வதேச விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்
இந்த நிலையில் இவரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்திலிருந்து செயல்படும் வானொலி “ரேடியோ சிகோ”இதில் தஸ்னீம் அபுதாஹிர் சிறப்பு செய்தி ஊடகத்துறையின் அங்கத்தினராக செயல்படுவார் என அவ்வானொலி தற்போது அறிவித்துள்ளது. இயற்கையை காப்போம், உலக வெப்பமயமாதல், மாணவர் முன்னேற்றம், அறிவுப்பாதை, சிறுவர் சித்தாந்தம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற பிரிவுகளில் இவர் செயல் படுவார்.
மேலும் இதன் விழிப்புணர்வு மக்களிடம் ஓவியங்களாகவும் செய்திகளாகவும் பரவலாக்குவது அதை செய்தியாக துபாயில் இருந்துகொண்டே வானொலியில் செயல் படுவது (ஒளிபரப்புவது) போன்ற பிரிவுகளில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு தாயார் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக மிகவும் இளம் வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Muduvai Hidayath