சூரராக சிந்தித்த குவைத் தமிழர் --- திரு.ஹைதர் அலி

Image



ஒரு சிலரின் வெற்றிக்குப்பிறகுதான் பிறரின் அதே செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.

குவைத் தமிழரின் முயற்சியும் அந்தவகையில்தான் தற்போது வைரலாகி வருகிறது. “சூரரைப்போற்று” படத்திற்கு முன்பே தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த குவைத் தமிழர் ஒருவர்> விமான நிறுவனம் தொடங்குவது பற்றி பேட்டியளித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ..

Image


‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற மொழி இன்றைய காலத்தில் பலரையும் கடல்கடக்க வைத்துள்ளது. அந்த வகையில் கடல்கடந்து வாணிபம் செய்து பொருளீட்டிவரும் தமழிர் ஹைதர்அலிதான் நம் இந்தக் கட்டுரையின் நாயகர். தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்து கத்தாரை நோக்கிய புறப்பட்ட பயணம் இன்று உலகின் 8 நாடுகளில் வணிகம் செய்யும் வணிகராக ஹைதர் அலியை உயர்த்தி இருக்கிறது. ஹைதர் அலி ‘Born with silver spoon’(பணக்கார வீட்டு) குழந்தையாக பிறக்கவில்லை. தனது 14 வயதில் குடும்ப வறுமையைப்போக குஜராத் பயணம் பின்னர் 1985 ம் ஆண்டு கத்தார் நாட்டை நோக்கிய விமானப் பயணம்> அங்கே கடலில் மீன்பிடி வேலை. சொந்த ஊர் கடல்சார்ந்தது என்பதாலும் மீன்பிடி அனுபவம் இருந்ததாலும் கத்தாரில் எவ்வித சிரமமுமின்றி வாழ்க்கை நகர்ந்தது. ஹைதர் அலி அவர்களின் நேர்மை கத்தார் நாட்டு அரபியிடம் இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது. ஒரு கட்டத்தில் மீன்பிடி வேலையை விட்டுவிட்டு> அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க ஆரம்பித்தவர் தனது பயணத்தை குவைத் நோக்கி திட்டமிட்டார். வரவுக்கும் செலவுக்குமான வாழ்க்கையில் ஹைதர் அலிக்கு விருப்பமில்லை. குவைத்தில் கார் நிறுவனம் தொடர்பாக நண்பருடன் இணைந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்> தாம் பணம் கொடுத்த நண்பர் இவரை ஏமாற்றினார. இனி யாரையும் நம்பி பிரயோஜனமில்லை என்ற நிலையில் தாமே முன்னின்று கார்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறி> இன்று எட்டு (8) நாடுகளில் கிளை பரப்பி வணிகம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளார் குவைத் வாழ் இந்தியத் தமிழர் ஹைதர் அலி. பணம் ஈட்டுவது மட்டும் வெற்;றி அல்ல. மாறாக சம்பாதிக்கும் பணத்தின் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கைதான் பணம் ஈட்டிய வெற்றியின் அடையாளம். அந்த வகையில் ஹைதர் அலி பல ஏழைக்குடும்பங்களுக்கு உதவி வருவது மட்டுமல்ல தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இவரது தொழில் திறமை சமூக சேவை உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு விருதுகள் இவரை வந்தடைந்தன.

விருதுகள் :

2019 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “ஐரோப்பியன் காண்டினென்டல் யுனிவர்சிடி” கவுரவ டாக்டர் பட்டமளித்தது. 2014 ம் ஆண்டு பிரபர போர்ப்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் வளைகுடா பகுதியில் உள்ள இந்திய தொழில் அதிபர்களின் பட்டியல் முதல் 100 இடத்தை பிடித்தவர்களின் பட்டியலிலும் குவைத்தில் உள்ள தொழில் அதிபர்களின் ஐந்தாவது இடத்தையும் அளித்தது. ஹைதர் அலியின் சமூக சேவையைப் பாராட்டி குவைத்தில் உள்ள ‘இந்திய பிரண்ட் லைனர்ஸ்’ அமைப்பு ‘சிறந்த சமூக சேவகருக்கான விருது” வழங்கி பாராட்டி கவுரவித்தது.

Image


இவரை இந்தியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது> தனது எதிர்கால இலட்சியமாக அவர் கூறியது> ‘குறைந்த செலவில் பயணம் செய்யும் வகையிலான விமான நிறவனம் ஒன்றை துவங்க வேண்டும்’. இந்தக் கருத்து அவரின் கூரிய அறிவையும் எதிர்கால நன்நோக்கத்தையும் எடுத்துக் காட்டியது. பேட்டியளித்த காலத்தில் ஹைதர்அலியின் கருத்து அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் தற்போது “சூரரைப்போற்று” படம் வெளிவந்த பிறகு ஹைதர்அலியின் கூரிய சிந்தனை மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. ஹைதர்அலியின் தொலைக்காட்சி பேட்டி தற்போது மீண்டும் வலம் வரத் தொடங்கி வைரல் ஆகிவருகிறது. விமான நிறுவனம் தொடங்குவது பற்றிய அவரின் கருத்து குறித்து நமது www.vvonline.in க்காக கேட்ட போது ‘ஆமாம்' விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எனது சிந்தனை “சூரரைப்போற்று” படத்திற்கு முன்னதாகவே தோன்றியது. இந்த சினிமா படம் எனது கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது. என் சிந்தனை செயல்படும் காலம் மிக அருகில் இருக்கிறது.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஹைதர் அலியின் விமான நிறுவன சிந்தனை வெற்;றி பெற வாழ்த்துவோம்.

வளைகுடாவிலிருந்து கமால் பாஷா