அஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி

Image


அஜ்மான் : அஜ்மானில் இலக்கிய ஆர்வலர்களின் சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், திருவாவடுதுறை பஜ்ருதீன், கோவிந்தகுடி ஆசாத், சென்னை ஆசாத் மற்றும் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் முஸ்லிம் முரசு மாத இதழ் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பாக இந்த இதழின் ஆசிரியராக இருந்த ஆளூர் ஜாலால் அபுதாபி அய்மான் சங்கத்தின் அழைப்பின் பேரில் அமீரகப் பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

ImageMuduvai Hidayath